Published:Updated:

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?! - திருச்சி சிறப்பு முகாமில் 9 பேர் கைது

திருச்சி சிறப்பு முகாம்
News
திருச்சி சிறப்பு முகாம்

விசாரணையின் அடிப்படையிலும், ஏற்கனவே சேகரித்திருத்து வைத்திருந்த ஆவணங்களின் அடிப்படையிலும் 9 பேரையும் கைது செய்து விசாரிக்க என்.ஐ.ஏ அதிகாரிகள் முடிவு செய்தனர்.

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?! - திருச்சி சிறப்பு முகாமில் 9 பேர் கைது

விசாரணையின் அடிப்படையிலும், ஏற்கனவே சேகரித்திருத்து வைத்திருந்த ஆவணங்களின் அடிப்படையிலும் 9 பேரையும் கைது செய்து விசாரிக்க என்.ஐ.ஏ அதிகாரிகள் முடிவு செய்தனர்.

Published:Updated:
திருச்சி சிறப்பு முகாம்
News
திருச்சி சிறப்பு முகாம்

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் போலி பாஸ்போர்ட் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இலங்கை, வங்காளதேசம், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 150 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை 20-ம் தேதி என்.ஐ.ஏ அதிகாரிகள், 100-க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினரோடு இந்த சிறப்பு முகாமினுள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது முகாமினுள் இருந்த இலங்கையைச் சேர்ந்த 12 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், இந்தச் சோதனையில் 50-க்கும் மேற்பட்ட செல்போன்கள், சிம்கார்டுகள், லேப்டாப், பென்டிரைவ் போன்றவை கைப்பற்றப்பட்டதாகவும் சொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்தாண்டு கேரள மாநிலம், விழிஞம் கடல் பகுதியில் மீன்பிடி படகிலிருந்து 300 கிலோ ஹெராயின் பவுடர் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த வழக்கில் கைதான போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன், திருச்சி சிறப்பு முகாமிலுள்ள சிலரும் தொடர்பில் இருந்ததே சோதனைக்கு காரணமெனச் சொல்லப்பட்டது.

கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும் நபர்கள்
கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும் நபர்கள்

அந்த சோதனையை அடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோரும் தனித்தனியே சிறப்பு முகாமில் சோதனை நடத்தினர். மேலும், சிறப்பு முகாமில் உள்ளவர்கள் செல்போன், லேப்டாப், இன்டர்நெட் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், சிறப்பு முகாமில் உள்ளவர்களை போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், கேரள என்.ஐ.ஏ சூப்பிரண்டு தர்மராஜ் தலைமையிலான 8 அதிகாரிகள் நேற்று திருச்சி சிறப்பு முகாமிற்கு வந்தனர்.

அப்போது ஏற்கனவே அவர்களுடைய சந்தேக வளையத்தில் இருந்த குணசேகரன், புஷ்பராஜா, கோட்ட காமினி, திலீபன், கென்னடி பெர்னாண்டோ, தனுகா ரோஷன், சுரங்கா, லடியா, முகமது ஆஸ்மின் ஆகிய 9 பேரிடமும் துருவித்துருவி தனித்தனியாக விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையிலும், ஏற்கனவே சேகரித்திருத்து வைத்திருந்த ஆவணங்களின் அடிப்படையிலும் இந்த 9 பேரையும் கைது செய்து விசாரிக்க என்.ஐ.ஏ அதிகாரிகள் முடிவு செய்தனர். அதனைத்தொடர்ந்து திருச்சி கலெக்டர் பிரதீப்குமாரிடம் அதற்காக முறையான அனுமதியினைப் பெற்று அவர்கள் 9 பேரையும் கைது செய்தனர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 9 பேரும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கேரள என்.ஐ.ஏ அதிகாரிகள்
கேரள என்.ஐ.ஏ அதிகாரிகள்

‘சிறப்பு முகாமிலிருந்து என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரும், இலங்கை மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். மேலும், சிறப்பு முகாமில் இருந்தபடியே இவர்கள் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்திருக்கிறது’ என்கின்றனர் விஷயமறிந்த அதிகாரிகள்.