Published:Updated:

சென்னை, மயிலாடுதுறை உட்பட 8 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை!

என்.ஐ.ஏ (NIA)

டெல்லி என்.ஐ.ஏ அதிகாரிகளால் பதிவுசெய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, சென்னை, மயிலாடுதுறை உட்பட எட்டு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.

தமிழ்நாட்டொல், சென்னை, மயிலாடுதுறை உட்பட எட்டு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் இன்று சோதனை நடத்திவருகின்றனர். டெல்லி என்.ஐ.ஏ அதிகாரிகளால் பதிவுசெய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இந்தச் சோதனை நடைபெற்றுவருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கு, ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டியது தொடர்பான வழக்கு என்றும் கூறப்படுகிறது.

சென்னை
சென்னை
வி.ஶ்ரீனிவாசுலு

இருப்பினும் இந்தச் சோதனை, எந்த வழக்கின் பின்னணியில் மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்த முழுமையான, அதிகாரபூர்வமான தகவல் என்.ஐ.ஏ தரப்பிலிருந்து இதுவரை வெளியாகவில்லை. சென்னையில் இந்தச் சோதனை, மண்ணடி பகுதியில் நடைபெற்றுவருகிறது. ஏற்கெனவே இது தொடர்பாக மண்ணடியில் கைதுசெய்யப்பட்ட சாதிக் என்பவரின் வாக்குமூலத்தின்படி அப்பகுதியில் ஒருவரின் வீட்டில் இந்தச் சோதனை நடைபெற்றுவருகிறது என்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism