Published:Updated:

`என் பெயர்லயே போலி மெயில் அனுப்பிட்டாங்க!’ - மோசடி முயற்சியால் கொதித்த நீலகிரி கலெக்டர்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

நீலகிரி மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி இ-மெயில் கணக்கு ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் அரசு அதிகாரிகளுக்கு மெயில் அனுப்பி, கிஃப்ட் வவுச்சர் மூலம் மோசடி செய்ய முயற்சி நடந்திருக்கிறது.

கடந்த சனிக்கிழமையன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகளின் மெயிலுக்கு ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பெயரில் மெயில் ஒன்று வந்துள்ளது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

வழக்கத்துக்கு மாறாக புதிய மெயில் ஐடியிலிருந்து, நம்பகத்தன்மையற்ற தகவல் ஒன்று பகிரப்பட்டிருப்பதைப் பார்த்த பெண் அதிகாரி ஒருவர் உடனடியாக மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு கூறியிருக்கிறார். அந்தப் பெண் அதிகாரி கலெக்டரிடம், ``நீங்க எதும் ட்ரபுள்ள இருக்கிங்களா? `எனக்கு அமேசான்ல ஒரு கிஃப்ட் வவுச்சர் வேணும். அப்புறமா பணம்‌ தரேன். ஆர்டர் செய்து இந்த மெயிலுக்கு அனுப்புங்க’ என உங்க பெயர்ல மெயில் வந்துருக்கு" எனத் தெரிவித்துள்ளார்.

உடனே சுதாரித்துக் கொண்ட ஆட்சியர், உடனடியாக இந்த தகவல்களை மற்ற அலுவலர்களுக்கும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மோசடியில் யாரும் பணத்தை இழந்துவிடக்கூடாது என அலர்ட சர்க்குலர் ஒன்றை அனுப்பிய‌ கையோடு, காவல்துறையில் புகாரும் அளித்துள்ளார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

இந்த மோசடி முயற்சி குறித்து நம்மிடம் பேசிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா,``கடந்த சனிக்கிழமையன்று என்னுடைய பெயரில் போலியான மெயில் ஒன்று மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. `அமேசன் கிஃப்ட் கார்ட் ஆர்டர் பண்ணி, அந்த லிங்கை மெயில் ஐ.டி க்கு அனுப்புங்க. பணத்தை பின்னர் அனுப்புகிறேன்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், எனது பெயர் மற்றும் மாவட்ட கலெக்டர் என பதவியும் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், இன்பாக்சிலும் எனது பெயர் காண்பிக்கிறது. இதுகுறித்து தகவலறிந்து அதிகாரிகள், என்னிடம் தெரிவித்தனர்.

`சில்லறை இருக்கா..?’ - ராமநாதபுரம் வங்கியில் நூதன மோசடி... சிக்கிய விழுப்புரம் பெண்கள்

எந்தத் தகவலாக இருந்தாலும் கலெக்டரின் அதிகாரபூர்வ மெயில் ஐ.டி-யில் இருந்து மட்டுமே மெயில் அனுப்பப்படும். எனது தனிப்பட்ட பெயரைப் பயன்படுத்தி ஏதேனும் மெயில் வந்திருந்தால், மெயில் மற்றும் லிங்க்கை கிளிக் செய்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். ஆன்லைன் மோசடிகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இதுகுறித்து எஸ்.பி-யிடம் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற மோசடி நபர்கள் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்"என்றார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன், ``கலெக்டரின் பெயரைப் போலியாக பயன்படுத்தி பல அரசு அலுவலர்களுக்கும் மெயில் அனுப்பப்பட்டுள்ளதாகப் புகார் பெறப்பட்டது. இதன் அடிப்படையில் ஐ.பி முகவரி குறித்த விவரங்கள், எங்கிருந்து அனுப்பப்பட்டுள்ளது என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரபூர்வ இணையதளம் முடக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. அது எதுவும் முடக்கப்படவில்லை. அலுவலர்களின் ஐ.டி‌-க்களை சேகரித்து மெயில் அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.

ஒரு மாவட்ட ஆட்சியர் பெயரிலேயே போலியானா மெயில் ஐ.டி-யை உருவாக்கி மோசடி செய்ய‌ முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு