Published:Updated:

"எவ்வளவு நாளைக்குத்தான் அடிப்பாங்கனு பார்ப்போம்!" - நள்ளிரவில் கலகலத்த நித்தியானந்தா

நித்யானந்தா ( nithyananda youtube channel )

‘யூடியூப்’ மூலம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு நேரலையில் பேசிய நித்யானந்தா, தான் பிடதியில் இல்லை என்பதையும், தன்மீது விழும் தாக்குதல்கள் விரைவிலேயே நொறுங்கிப்போகும் என்றும் கூறியுள்ளார்.

"எவ்வளவு நாளைக்குத்தான் அடிப்பாங்கனு பார்ப்போம்!" - நள்ளிரவில் கலகலத்த நித்தியானந்தா

‘யூடியூப்’ மூலம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு நேரலையில் பேசிய நித்யானந்தா, தான் பிடதியில் இல்லை என்பதையும், தன்மீது விழும் தாக்குதல்கள் விரைவிலேயே நொறுங்கிப்போகும் என்றும் கூறியுள்ளார்.

Published:Updated:
நித்யானந்தா ( nithyananda youtube channel )

அகமதாபாத்திலுள்ள தன் ஆசிரமத்துக்கு நிதி திரட்டுவதற்காகக், குழந்தைகளைக் கடத்தி சட்டவிரோதமாக அடைத்துவைத்து சித்ரவதை செய்ததாக, நித்யானந்தா மீது குஜராத் போலீஸார் வழக்குப் பதிந்து, அவரைத் தேடிவருகின்றனர். அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுவிட்டதாகக் கடந்த செப்டம்பர் மாதமே ஜூனியர் விகடனில் ‘எக்ஸ்க்ளூசிவ்’ செய்தி வெளியிட்டிருந்தோம். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இச்செய்தியை அகமதாபாத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.வி.ஆச்சாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

நித்யானந்தா
நித்யானந்தா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், வெளிநாட்டில் பதுங்கியுள்ள நித்யானந்தா, கரீபியன் கடல் பகுதியிலுள்ள தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாகவும், அங்கு தனி நாடு ஒன்றை நிர்மானிப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் இந்த வாரம் (4.12.2019 தேதியிட்ட) வெளிவந்த ஜூனியர் விகடனில் ‘எக்ஸ்க்ளூசிவ்’ செய்தி வெளியிட்டுள்ளோம். இதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த சட்ட நிறுவனம் ஒன்றைப் பணியமர்த்தியுள்ளார். கிறிஸ்தவ மதத்துக்கு போப் ஆண்டவர் போல இந்து மதத்துக்குத் தன்னை தலைவராகப் பிரகடனப்படுத்திக்கொள்ள நித்யானந்தா ஆயத்தமாகிவருகிறார் என்பதையும் குறிப்பிட்டிருந்தோம். அந்தச் செய்திக் கட்டுரையை முடிக்கும்போது, ‘எங்கோ இருந்துகொண்டு, அடிக்கடி விரிவான வீடியோ காட்சிகளை வெளியிடும் நித்யானந்தா, இதுகுறித்தும் விரிவான விளக்கம் வெளியிடுவாரா?’ எனக் கேட்டிருந்தோம். செய்தி வெளிவந்த சில மணி நேரத்திலேயே நித்யானந்தாவிடமிருந்து விளக்க வீடியோ வெளியாகியுள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு நேரலையில் பேசிய நித்யானந்தா, தான் பிடதியில் இல்லை என்பதையும் தன்மீது விழும் தாக்குதல்கள் விரைவிலேயே நொறுங்கிப்போகும் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “என்மீது சதியாளர்கள் வீசும் பொய்ப் புகார்கள் இம்முறை பெரிதாக இருக்கிறது. மிகப்பெரிய சதித்திட்டத்துடன் களமிறங்கியிருக்கிறார்கள். ஓஷோ, ராம் ரஹீம் ஆகியோரின் சங்கங்கள் எப்படி நிர்மூலம் ஆக்கப்பட்டதோ, அதைப்போல நமது நித்யானந்தா சங்கத்தையும் சிதைக்க முற்படுகிறார்கள்.

எவ்வளவு நாளைக்கு நம்மள அடிப்பாங்க. டாய் டூய்னு கத்துவாங்க, அப்புறம் உன் வேலைய பாரு, நான் என் வேலையை பார்க்குறேன்னு போய்டுவாங்க. 'இந்தக் கோட்டைத் தாண்டி நான் வரமாட்டேன், நீயும் வரக்கூடாது'னு பிரச்னை முடிஞ்சிரும்.
நித்யானந்தா

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தச் சதித்திட்டத்தில், சக்திவாய்ந்த நபர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடைய கட்டுப்பாட்டில் என்னைக் கொண்டுவர முயல்கிறார்கள். என்னிடமுள்ள பணத்துக்காகவும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காகவும் இப்படிச் செய்கிறார்கள். என்னுடைய ஆன்மீகப் பயிற்சியால் இதுவரை வெளிவராத பல அறிவியல் அற்புதங்களைக் கண்டுபிடித்துள்ளேன். இதைவைத்து பணமாக்குவதற்கு ஒரு பெரும் கூட்டமே முயல்கிறது. தன்னை உணர்ந்துகொள்ள நித்யானந்தா சங்கத்துக்கு வருபவர்கள் மட்டுமே இங்கு நிலைக்க முடியும். பணத்துக்காகவும் அதிகாரத்துக்காகவும் வருபவர்கள், பாதியிலேயே வெளியேறிவிடுவார்கள். அப்படி வெளியே செல்பவர்களில் சிலர், என்மீது தவறான செய்திகளைத் திட்டமிட்டுப் பரப்புகிறார்கள்.

நித்யானந்தா
நித்யானந்தா
nithyananda youtube channel

நித்யானந்தா சங்கத்துக்குள்ளேயே சதிகாரர்களின் கூட்டம் நுழைந்துள்ளது. என் பக்தர்களைத் தவறாக வழிநடத்தி, அவர்களை சட்டத்துக்கும் அரசுக்கும் எதிராகப் போராடவைத்து, கலவரமூட்டி, சங்கத்தை நிரந்தரமாக மூடுவதற்குத் திட்டம் வகுக்கிறார்கள். என்மீது தாக்குதல் நடத்துபவர்களை காலபைரவர் பார்த்துக்கொள்வார். என் பக்தர்கள் யாரும் சட்டத்துக்கு எதிராகப் போராட வேண்டாம். அகிம்சை வழியில் சென்றால் மட்டுமே சதிகாரர்களின் திட்டத்தை உடைக்க முடியும். இதுபோன்ற தாக்குதல் எனக்குப் புதிதல்ல. 2003-ம் ஆண்டு, என் மீது இதுபோன்ற ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது, கைதுசெய்யும் அளவுக்கு சென்றார்கள்.

அப்போது, திருச்சியைச் சேர்ந்த சாமியார் ஒருவர் என்னைப் பார்க்க வேண்டுமென்று அழைத்தார். ‘தம்புடு, நம்மள மாதிரி சாமியாருங்களுக்கு எதையும் தாங்குற மனோபக்குவம் வேண்டும்டா. இந்தப் பிரச்னைலாம் சீக்கிரமே ஓய்ஞ்சுடும், தைரியமா போ’ என்று நம்பிக்கையூட்டினார். அதே வார்த்தையைத்தான் என் பக்தர்களுக்கும் கூறுகிறேன். கொள்ளையடித்து பிழைப்பைப் பார்த்துக்கொள்பவர்கள், அது கிடைக்காவிட்டால் வேறு வீட்டை பார்க்கப் போய்விடுவார்கள். அதுபோலத்தான் நம்மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள் விரைவிலேயே முடிவுக்கு வரும்.

நித்யானந்தா
நித்யானந்தா
nithyananda youtube channel

எவ்வளவு நாளைக்கு நம்மள அடிப்பாங்க. டாய் டூய்னு கத்துவாங்க, அப்புறம் உன்வேலையப் பாரு, நான் என் வேலையைப் பார்க்குறேன்னு போய்டுவாங்க. இந்தக் கோட்டைத் தாண்டி நானும் வரமாட்டேன், நீயும் வரக்கூடாதுனு பிரச்னை முடிஞ்சிரும். மீடியாவுல வர்ற செய்தியை எல்லாம் என் பக்தர்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இப்போது, மக்கள் யாரும் மீடியாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை, அவங்க அவங்க பிரச்னையே தலைக்கு மேல இருக்கும்போது, அடுத்தவன் வாழ்க்கையில என்ன நடந்தா என்னங்கற மனோபாவம்தான் மக்கள்கிட்ட இருக்கு.

கடந்த முறை நடந்த தாக்குதலின்போது, நான் அங்கு (பிடதி) இருந்தேன். இப்போது நான் அங்கு இல்லை என்பதால், என் பக்தர்கள் சிலரைத் தவறாக வழிநடத்துகிறார்கள். இதற்கு யாரும் பலியாகிவிட வேண்டாம். அகிம்சை ஒன்றுதான் நாம் வெற்றியடைய வழி” என்று பேசியுள்ளார்.

வழக்கமாக, இந்திய நேரப்படி காலை 7:30 மணிக்கும் இரவு 8 மணிக்கும்தான் நித்யானந்தா ‘யூடியூப்’ வழியாக பக்தர்களிடம் பேசுவார். ஜூனியர் விகடனில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, தூக்கக் கலக்கத்திலும் நள்ளிரவில் வீடியோ வெளியிட்டு விளக்கமளித்துள்ளார் நித்தி. அகிம்சை வழியைக் கடைபிடிக்க வேண்டுமென்று அவர் சொன்னதை, அமைதிப்படை சத்யராஜ் பாணியில் அவர் பக்தர்கள் புரிந்துகொண்டு, உல்டாவாகக் களமிறங்கிவிட்டால் நிலைமை அவருக்கு மேலும் சிக்கலாகும் என்பதில் சந்தேகமில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism