Published:Updated:

அரியலூர்: அதிகாரிகளின் வீடுகள் டார்கெட் - 6 மாநிலங்களில் கைவரிசை காட்டிய வடமாநில கும்பல் கைது

வடமாநிலக் கொள்ளையர்கள் கைது

அரசு அதிகாரிகள், தனியார் நிறுவனங்களில் முக்கியப் பதவியில் இருக்கும் நபர்களின் வீடுகளைக் குறிவைத்து கைவரிசையைக் காட்டுகிறார்கள் சில வடமாநில கொள்ளையர்கள். 5 மாநிலங்களில் கைவரிசை காட்டிவந்த கொள்ளையர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

அரியலூர்: அதிகாரிகளின் வீடுகள் டார்கெட் - 6 மாநிலங்களில் கைவரிசை காட்டிய வடமாநில கும்பல் கைது

அரசு அதிகாரிகள், தனியார் நிறுவனங்களில் முக்கியப் பதவியில் இருக்கும் நபர்களின் வீடுகளைக் குறிவைத்து கைவரிசையைக் காட்டுகிறார்கள் சில வடமாநில கொள்ளையர்கள். 5 மாநிலங்களில் கைவரிசை காட்டிவந்த கொள்ளையர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

Published:Updated:
வடமாநிலக் கொள்ளையர்கள் கைது

அரியலூரில் அமைந்துள்ள ராம்கோ சிமென்ட் தொழிற்சாலை டவுன்ஷிப் வளாக குடியிருப்புப் பகுதியில் கடந்த மாதம் 17-ம் தேதி இரவு ஒரு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் 80 பவுன் நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். இது சம்பந்தமாக அரியலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கொள்ளையர்களைக் கைதுசெய்ய தனிப்படை அமைக்கப்பட்டு, சிசிடிவி கேமரா ஆய்வு செய்யப்பட்டது. அதில் நான்கு நபர்கள் இருந்ததும், ஒரு செல்போன் நம்பர் மட்டும் ஐந்து முறை பேசிவிட்டு, சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

அரியலூர்
அரியலூர்

சைபர் க்ரைம் டீம் உதவியுடன் ஆய்வு செய்ததில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணனின் அறிவுறுத்தலின்படி, அரியலூர் எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு விரைந்தது தனிப்படை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆய்வாளர்கள் சகாய அன்பரசு, அன்பழகன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் நந்தகுமார், பாலாஜி மற்றும் போலீஸார் விசாரணை செய்ததில் மத்தியப் பிரதேசம், தார் மாவட்டத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் தொடர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும், அவர்கள் மீண்டும் இது போன்ற கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதற்காக தமிழ்நாட்டுக்கு வந்திருப்பதும் தெரியவந்தது.

வடமாநிலக் கொள்ளையர்கள்
வடமாநிலக் கொள்ளையர்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனால் அரியலூர் மாவட்டத்தில் சிமென்ட் தொழிற்சாலை பகுதியில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு குற்றவாளிகளைத் தேடிவந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் தனிப்படை போலீஸார், மத்தியப் பிரதேசம், தார் மாவட்டம், குப்சி தாலுக்கா, பகோளி கிராமத்தைச் சேர்ந்த நான்கா, அமீர், காளியா, சர்தார்ஹுரு ஆகியோரை செந்துறை ரவுண்டானா அருகே பிடித்து விசாரணை செய்தனர்.

கொள்ளையர்கள் வைத்திருந்த ஆயுதங்கள்
கொள்ளையர்கள் வைத்திருந்த ஆயுதங்கள்

அவர்களிடமிருந்து அரியலூர் ராம்கோ சிமென்ட் தொழிற்சாலை குடியிருப்பு வீட்டை உடைத்து திருடுவதற்குப் பயன்படுத்திய இரும்பு ராடுகள், கட்டிங் பிளையர், பிற ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதேபோல் தூத்துக்குடி அனல்மின் ஊழியர் குடியிருப்பில் வீடுகளை உடைத்து திருடிய சுமார் 350 கிராம் எடையுடைய வெள்ளிப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும், வடமாநிலங்களில் தங்கியுள்ள சம்பந்தப்பட்ட குற்றவாளிகளையும் கைதுசெய்து சொத்துகளை மீட்க காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

அரியலூர் எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா
அரியலூர் எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா

இவர்கள் யார், என்ன நடந்தது என்று வழக்கை விசாரித்துவரும் போலீஸாரிடம் பேசினோம். ``வீட்டில் யாரும் இல்லை என்பதை அவர்களது இன்ஃபார்மர் சொல்லிவிட்டால் போதும். காலையிலேயே சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்துவிடுவார்கள்.

வந்ததும் அந்த ஏரியாவையே முழுவதுமாக ஸ்கேன் செய்துவிடுவார்கள். அவர்கள் டார்கெட் செய்த வீட்டை அன்று இரவே வீட்டின் பூட்டை உடைத்து அங்குள்ள நகை, பணத்தை கொள்ளையடித்து எடுத்துச்செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அரியலூர் எஸ்.பி ஆபீஸ்
அரியலூர் எஸ்.பி ஆபீஸ்

அதுவும் அரசு அதிகாரிகள், தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கும், அதிலும் முக்கியப் பதவியில் இருக்கும் நபர்களின் வீடுகளில்தான் இவர்களின் கைவரிசையைக் காட்டுகிறார்கள். அப்படித்தான் அரியலூரிலும் நடந்துள்ளது. இவர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி மத்திய பிரதேசம், புனே, போபால், குஜராத், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல இடங்களில் இந்த கும்பல் கைவரிசை காட்டியிருக்கிறார்கள். இந்த டீம் பல நெட்வொர்க்குகள் வைத்திருக்கிறது. முழுமையாக விசாரித்து இதன் பின்னணியில் உள்ளவர்களைக் கைதுசெய்ய உயரதிகாரிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள்" என்றார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism