Published:Updated:

`அபராதம் வேண்டாம்னா, ரூ.10,000 எடு..!’ - மீன் வியாபாரியிடம் லஞ்சம் வாங்கிய உணவுப் பாதுகாப்பு அலுவலர்

கைது
News
கைது

கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மீன்கள் தரமற்றவை என்றும், இதற்கு அபராதம் விதிக்காமல் இருப்பதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்றும் திருமலை பால்பாண்டியிடம் கேட்டிருக்கிறார்.

தேனியில் மீன் கடை நடத்திவருபவர் திருமலை பால்பாண்டி. இவருடைய கடையில் தேனி வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் சண்முகசுந்தரம் ஆய்வுசெய்தார். அப்போது கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மீன்கள் தரமற்றவை என்றும், இதற்கு அபராதம் விதிக்காமல் இருப்பதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்றும் திருமலை பால்பாண்டியிடம் கேட்டுள்ளார்.

இது குறித்து தேனி லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாரிடம் திருமலை பால்பாண்டி புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார், திருமலை பால்பாண்டியிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து, தேனி நகராட்சி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலகத்துக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

லஞ்சம்
லஞ்சம்

அங்கு திருமலை பால்பாண்டி வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் சண்முகசுந்தரத்திடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுககளை லஞ்சமாகக் கொடுத்திருக்கிறார். சண்முகசுந்தரம் அதை பெற்றுக்கொண்டதும், அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் இருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் கருப்பையா தலைமையிலான போலீஸார், அவரைக் கையும் களவுமாகப் பிடித்து கைதுசெய்தனர். வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலரிடம் தொடர்ந்து ஐந்து மணி நேரம் விசாரணை நடத்தி அவர் மீன் வியாபாரிடம் லஞ்சம் கேட்டதை உறுதி செய்தனர்.

மீன் வியாபாரியிடம் லஞ்சம் கேட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டது தேனியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz