Published:Updated:

` மீன் வலையில் சிக்கிய முதலைக் குட்டி!' -சிறுமுகை வனத்துறைக்கு அதிர்ச்சி கொடுத்த ரெய்டு

கைது செய்யப்பட்ட நபருடன் வனத்துறை அதிகாரிகள்
கைது செய்யப்பட்ட நபருடன் வனத்துறை அதிகாரிகள்

கோவை மாவட்டம், சிறுமுகை அருகே முதலை வேட்டையாடிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் உள்ள வனப்பகுதி கோவை, போளூவாம்பட்டி, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம் என்று ஏழு வனச்சரகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

முதலை வேட்டை
முதலை வேட்டை

இதில், சிறுமுகை வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் பவானியாறு நீர்தேக்கம் உள்ளது. அங்கு ஏராளமான மீன்கள் இருப்பதால், பலர் மீன்பிடித் தொழில் செய்துவருகின்றனர். மேலும், அந்த நீர்தேக்கத்தில் முதலைகளும் வாழ்ந்துவருகின்றன.

பெத்திக்குட்டை அருகே, பெரியூர் பகுதியில் முதலைக் கறி இருப்பதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிறுமுகை வனச்சரகத்தின் வனவர் தலைமையில் வனத்துறையினர் கள ஆய்வுசெய்தனர். அப்போது இரண்டு பேர், முதலைக் குட்டியின் தோலை உரித்துக்கொண்டிருந்ததை அதிகாரிகள் பார்த்துள்ளனர்.

கைது
கைது

அதிகாரிகளைப் பார்த்தவுடன் அதில் ஒருவர் தப்பியோடிவிட்டார். இதையடுத்து, மற்றொருவரைப் பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

Vikatan

அப்போது, அவரது பெயர் ராஜன் என்கிற ரங்கசாமி என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், `நானும், மாரியப்பனும் (தப்பியோடிவர்) மீன் பிடிப்பதற்காக பவானி ஆற்றுக்கு வந்தோம். மீனுக்காக போட்ட வலையில், ஒரு முதலை சிக்கிக்கொண்டது.

முதலை வேட்டை
முதலை வேட்டை

எனவே, முதலையை சமைத்துச் சாப்பிடலாம் என்ற எண்ணத்தில் அதைக் கொன்று, தோலை உரித்துக்கொண்டிருந்தோம்' என்று கூறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். ராஜனைக் கைது செய்த வனத்துறையினர், இறந்துபோன முதலையைப் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய மாரியப்பனைத் தேடிவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு