Published:Updated:

ஆபரேஷன் மின்னல் ரௌடி வேட்டை: 24 மணிநேரத்தில் சிக்கிய 133 ரௌடிகள்!

தமிழ்நாடு காவல்துறை

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற ஆபரேஷன் மின்னல் ரௌடி வேட்டையில் ஏ-பிளஸ் ரவுடிகள் உட்பட 133 ரவுடிகள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

தமிழ்நாடு காவல்துறை சார்பில் ரௌடிகளைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் `ஆபரேஷன் மின்னல் ரௌடி வேட்டை' நடத்தப்பட்டது. இது குறித்து, காவல்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாடு முழுவதும் மின்னல் ரௌடி வேட்டை நடத்தப்பட்டது.

கைது
கைது

அதில் 133 முக்கிய குற்றவாளிகள் பிடிபட்டிருக்கின்றனர். கொலை, கொலை முயற்சி வழக்குகள் உட்பட பிடியாணை நிலுவையிலிருந்த 15 பேர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். பல ஆண்டுகளாகத் தேடியும் பிடிபடாமல் இருந்த பிரபல ஏ பிளஸ் ரௌடிகள் 13 பேர் சிக்கியிருக்கின்றனர். மீதமுள்ள 105 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 'மின்னல் ரௌடி வேட்டை' தொடர்ந்து நடைபெறும்" என்று கூறப்பட்டிருக்கிறது.