Published:Updated:

`ஆம்பூர் பெண் பிரமுகருடன் தொடர்பு இருக்கக் கூடாது!’- உத்தரவிட்ட ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்

கைதுசெய்யப்பட்ட அ.தி.மு.க பிரமுகர் பிரேமா
கைதுசெய்யப்பட்ட அ.தி.மு.க பிரமுகர் பிரேமா

ஆம்பூரில், பாலியல் தொழிலில் ஈடுபட்ட அ.தி.மு.க பெண் பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த உமராபாத் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பாலியல் தொழில் செய்துவந்த அ.தி.மு.க பிரமுகரான பிரேமா (50) என்ற பெண்ணைக் காவல்துறையினர் கைதுசெய்தனர். அவரிடமிருந்து பெங்களூருவைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமியை மீட்டுத் திருப்பத்தூர் காப்பகத்தில் தங்கவைத்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட அ.தி.மு.க பிரமுகர் பிரேமா
கைதுசெய்யப்பட்ட அ.தி.மு.க பிரமுகர் பிரேமா

சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக அவரின் தாய் லதா (35) என்பவரையும் போலீஸார் கைதுசெய்தனர். விசாரணையில், அ.தி.மு.க பிரமுகர் பிரேமா, பாலியல் தொழில் நடத்தும் தரகர் எனக் கூறப்படுகிறது.

அ.தி.மு.க-வில் மாவட்டப் பிரதிநிதியாக உள்ள அவர் அங்குள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கத் தலைவராகவும் பதவி வகிக்கிறார். பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் வீடு வாடகைக்கு எடுத்து இத்தொழிலை நடத்திவந்துள்ளார். பாலியல் தொழிலில் மேலும் சில சிறுமிகளையும் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அறிக்கை
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அறிக்கை

கைதுசெய்யப்பட்ட 2 பேர் மீதும் ``பெண்களைக் கடத்தியது, பாலியல் தொழிலுக்கு இடம் கொடுத்தது, பாலியல் தொழில் மூலம் வருமானம் ஈட்டியது, பாலியல் தொழிலுக்காக ஆட்களைச் சேர்த்தது’’ ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் வேலூர் மத்தியப் பெண்கள் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில், அ.தி.மு.க-விலிருந்து பிரேமா நீக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் கையொப்பமிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், ``கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கு முரணான வகையிலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும்,

அ.தி.மு.க தலைமைக் கழகம் அறிவிப்பு
அ.தி.மு.க தலைமைக் கழகம் அறிவிப்பு

கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், வேலூர் மேற்கு மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றியத்தைச் சேர்ந்த திருமதி.பிரேமா, (பேரணாம்பட்டு ஒன்றியக் கழக மாவட்டப் பிரநிதி) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் அவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்’’ என்று உத்தரவிட்டுள்ளனர்.

பின் செல்ல