Published:Updated:

9,000 பேர் ஒரே இரவில் கைது... மத்தியப் பிரதேச காவல்துறையின் அதிரடி நடவடிக்கை

மத்தியப் பிரதேசத்தில் ஒரே இரவில் 9,000 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கும் சம்பவம் நடந்திருக்கிறது. என்ன காரணம்?!

9,000 பேர் ஒரே இரவில் கைது... மத்தியப் பிரதேச காவல்துறையின் அதிரடி நடவடிக்கை

மத்தியப் பிரதேசத்தில் ஒரே இரவில் 9,000 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கும் சம்பவம் நடந்திருக்கிறது. என்ன காரணம்?!

Published:Updated:

மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைதி மற்றும் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் நோக்கத்துடன் அந்த மாநில காவல்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. 17,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் மூலம், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஓர் அதிகாரியை நியமித்து, பல்வேறு மண்டலங்களின் கூடுதல் டைரக்டர் ஜெனரல்கள், துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் பிற தரவரிசைகளின் அதிகாரிகள் பங்கேற்புடன், சனி, ஞாயிற்றுக்கிழமை இடைப்பட்ட இரவில், சுமார் 9,000 குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

இது தொடர்பாக வெளியான தகவலில், மாநிலம் முழுவதுமுள்ள குற்றவாளிகள், கைதுசெய்ய ஆணை பிறப்பித்தும் கைது செய்யப்படாமல் இருந்தவர்கள், குற்றம்சாட்டப்பட்டவர்கள் என மூத்த அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் 9,000 பேர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

 காவல்துறை
காவல்துறை
ட்விட்டர்

மேலும், இவர்களில் கைது வாரன்ட் நிலுவையிலுள்ள குற்றவாளிகள் சுமார் 6,000 பேர். ஜாமீனில் வெளிவர முடியாத குற்றவாளிகள் 2,600 பேர். தேடப்படும் குற்றவாளிகள் சுமார் 100 பேர். பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் 200 பேர் எனத் தெரியவந்திருக்கிறது. பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 1,000-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் பின்னனி குறித்த விவரங்களும் கண்காணிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.