Published:Updated:

`போராடப் போனான்; 9 நாளுக்குப் பின் சடலமாத்தான் வந்தான்!' - கலங்கிய பாட்னா இளைஞரின் தந்தை #CAA

அமீர் ( the telegraph )

சிவப்பு ஷர்ட் மற்றும் ப்ளூ ஜீன்ஸ் அணிந்த அமீர் கையில் தேசியக்கொடியுடன் தனது உயிரைக் காப்பாற்ற ஓடியதாகக் கூறப்படுகிறது. அமீரை கடைசியாகப் பார்த்த தருணமும் இதுதான் என்கின்றனர்.

`போராடப் போனான்; 9 நாளுக்குப் பின் சடலமாத்தான் வந்தான்!' - கலங்கிய பாட்னா இளைஞரின் தந்தை #CAA

சிவப்பு ஷர்ட் மற்றும் ப்ளூ ஜீன்ஸ் அணிந்த அமீர் கையில் தேசியக்கொடியுடன் தனது உயிரைக் காப்பாற்ற ஓடியதாகக் கூறப்படுகிறது. அமீரை கடைசியாகப் பார்த்த தருணமும் இதுதான் என்கின்றனர்.

Published:Updated:
அமீர் ( the telegraph )

பீகார் மாநிலம், பாட்னாவிலுள்ள புல்வாரிஷெரிஃப் எனுமிடத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கடந்த டிசம்பர் 21ம் தேதி போராட்டம் நடைபெற்றது. இதில், சோஹைல் அகமது என்பவருடைய மகன் அமீர் ஹன்ச்லாவும் கலந்துகொண்டார். சிவப்பு ஷர்ட் மற்றும் ப்ளூ ஜீன்ஸ் அணிந்த அமீர் கையில் தேசியக்கொடியுடன் தனது உயிரைக் காப்பாற்ற ஓடியதாகக் கூறப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் இணைந்த சரஸ்வதி ஷிஷூ வித்யா மந்திரின் கிளை அமைப்பான சங்கத் மொஹல்லாவைச் சேர்ந்தவர்கள் அவரைத் துரத்தியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அமீரை கடைசியாகப் பார்த்த தருணமும் இதுதான் என்கின்றனர்.

அமீர், பத்தாம் வகுப்பு வரைப் படித்துள்ளார். பேக் தயாரிக்கும் கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல டிசம்பர் 21ம் தேதி பணிக்குச் சென்றுள்ளார். ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இணைந்து மாநில அளவிலான போராட்டத்தை அறிவித்திருந்ததால் அமீரும் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

அமீர்
அமீர்
facebook

இந்நிலையில், பத்து நாள்களுக்குப் பின்னர் புத்தாண்டு தினத்தன்று அமீரின் உடல் புல்வாரிஷெரீ ஃப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. மார்பு மற்றும் வயிறுப்பகுதிகளில் குத்துப்பட்ட காயங்களுடனும் தலை சிதைக்கப்பட்ட நிலையிலும் உடல் கிடைத்துள்ளதாகக் கூறுகின்றனர்.

இதுதொடர்பாகப் பேசிய அமீரின் தந்தை சோஹைல், ``போராட்டக்களத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோவையும் புகைப்படங்களையும் நீங்கள் காணலாம். பெருமையுடன் தேசியக் கொடியைக் கையில் வைத்து அசைத்தபடி, செல்கிறான். அந்த இடத்தில் வசிக்கின்ற, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்பினரால்தான் அவன் கொல்லப்பட்டான் என்பது அனைவருக்கும் தெரியும்” என்று கண்ணீர்வடித்தார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ஆர்.எஸ்.எஸ் தரப்பு மறுத்திருக்கிறது. இதுகுறித்துப் பேசிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பாட்னா நிர்வாகி ராஜேஷ் குமார் பாண்டே, ``குற்றம்சாட்டுவதுதான் அவர்களுடைய வேலை. ஒரு குற்றம் நடந்திருந்தால், அது விசாரிக்கப்பட வேண்டும். காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணைகளை நடத்த வேண்டும். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பஜ்ரங்தளம் அமைப்பினர் எந்தவிதமான வன்முறைகளிலும் ஒருபோதும் ஈடுபடமாட்டார்கள்” என்று மறுத்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அமீரின் சகோதரர் முகமது,``போராட்டம் நடந்த அன்று மதியநேரத்தில் அவனை செல்போனில் அழைத்தேன். `போராட்டத்தில் இருக்கிறேன். விரைவில் வந்துவிடுகிறேன்’ என்று கூறினான். மீண்டும், 2 மணி அளவில் அழைத்தேன். செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. வேலைக்குத் திரும்பியிருப்பான் என்று நினைத்தேன். ஆனால், எட்டு மணி ஆகியும் அவன் வீட்டுக்குத் திரும்பவில்லை. போராட்டக்களத்தில் வன்முறை ஏற்பட்ட செய்திகளைக் கேள்விப்பட்டு பதற்றமடைந்து காவல்நிலையத்துக்குச் சென்றோம். `காயமடைந்தவர்களை மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். அங்கு சென்று பாருங்கள்' எனக் காவலர்கள் கூறினர். பாட்னாவிலுள்ள எல்லா மருத்துவமனைகளிலும் அமீரைத் தேடினோம். அவன் கிடைக்கவில்லை.

காவல்நிலையத்துக்குத் திரும்பி வந்து புகார் அளித்தோம். எங்களது வழக்கை அடுத்தநாள்தான் பதிவு செய்தனர். விரைவில் விசாரிப்பதாகவும் உறுதி அளித்தனர். மக்கள் எங்களிடம் `சங்கத் மொஹல்லாவால் அவன் கொல்லப்பட்டிருக்க வேண்டும்' என்று கூறினர். இந்தச் செய்தியைக் காவல்துறையிடம் நாங்கள் தெரிவித்தோம். அவர்கள் இதைக் கண்டுகொள்ளவில்லை. ஒன்பது நாள்களாக அவனைத் தேடினோம். அவனது புகைப்படங்களைக் கையிலேந்தி அலைந்தோம்" என்றார்.

அமீரின் குடும்பம்
அமீரின் குடும்பம்
the telegraph

``அமீர், மனநலம் பாதிக்கப்பட்டவர். வீட்டை விட்டு ஓடிவிட்டார்" என்று காவல்துறையினர் ஊடகத்திடம் தெரிவித்துள்ளதாத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 31ம் தேதி மாலை சிதைந்த நிலையில் அமீரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவரின் தந்தை சோஹைலுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. `அவர் அணிந்திருந்த உடைகளை வைத்து அடையாளத்தைக் கண்டுபிடித்தோம்' என சோஹைல் வேதனையுடன் கூறியுள்ளார். ``உடலுடன் சாலைகளில் மறியல் போராட்டங்களை நடத்தலாம் என மக்கள் எங்களிடம் கூறினர். சமூகத்தில் பிளவுகளையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும் என்பதால் வேண்டாமென கூறினோம்" என்றும் சோஹைல் தெரிவித்தார்.

இதுதொடர்பாகப் பேசிய புல்வாரிஷெரீஃப் காவல் அதிகாரி முகமது ஷெரீஃப்,``அமீர் கொலை வழக்கில் 10 முதல் 12 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். இதில் ஆறு பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். தீபக்குமார் மற்றும் சைந்து ஆகிய இருவரும் கொலை செய்ததாகக் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். கொலை செய்த பின்னர் அவர்கள், அமீரின் உடலை சைக்கிளில் கொண்டு சென்று நீர்நிலையில் எறிந்துள்ளனர்" என்றார்.

போராட்டத்தில் கலந்துகொண்ட வெங்கடேஷ் ராமன் என்பவர், ``சுமார் 10,000 பேர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். அதிக எண்ணிக்கையிலான இஸ்லாமியர்களும் அதில் இருந்தனர். பஜ்ரங் தளம் மற்றும் சங்கத் மொஹல்லா ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் வன்முறைகள் நடத்தப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், காவல்துறையினரும் எதுவும் செய்யவில்லை" என்று கூறியுள்ளார்.

பிரதேப் பரிசோதனையில், அமீர் உடம்பில் 12 இடங்களில் கத்திக் குத்து காயங்கள் இருப்பதாகவும் அவரது தலைப்பகுதியில் பலத்த காயம் இருந்ததாகவும் போலீஸார் கூறுகின்றனர்.