Published:Updated:

முன்னாள் எம்.பி மரண வழக்கில் `பகீர்' திருப்பம்; தம்பி மருமகன் உட்பட 5 பேர் கைது- என்ன நடந்தது?

முன்னாள் எம்.பி மஸ்தான்

சென்னையில் முன்னாள் எம்.பி மஸ்தான் மரணத்தில் திடீர் திருப்பமாக அவர் சகோதரரின் மருமகன் உட்பட 5 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

முன்னாள் எம்.பி மரண வழக்கில் `பகீர்' திருப்பம்; தம்பி மருமகன் உட்பட 5 பேர் கைது- என்ன நடந்தது?

சென்னையில் முன்னாள் எம்.பி மஸ்தான் மரணத்தில் திடீர் திருப்பமாக அவர் சகோதரரின் மருமகன் உட்பட 5 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

Published:Updated:
முன்னாள் எம்.பி மஸ்தான்

தி.மு.க சிறுபான்மை நல உரிமை பிரிவுச் செயலாளராக இருந்தவர் முன்னாள் எம்.பி மஸ்தான். இவர், சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்தார். கடந்த 22-ம் தேதி காரில் சென்று கொண்டிருந்தபோது செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கத்தில் திடீரென மரணமடைந்ததாக தகவல்கள் வெளியாகின. அவர் மரணத்துக்கு ஹார்ட்அட்டாக்-தான் காரணம் என்றும் சொல்லப்பட்டது. இதையடுத்து, அவரின் சடலம், சென்னைக்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிலையில், உயிரிழந்த மஸ்தானின் முகத்தில் காயங்கள் இருந்ததால் அவரின் மனைவிக்கு சந்தேகம் எழுந்தது. அது தொடர்பாக விசாரிக்கும்படி தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜியிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் கூடுவாஞ்சேரி போலீஸாரை விசாரிக்க கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.

கொலை
கொலை

அதன்பேரில் போலீஸார் மஸ்தான் உயிரிழந்தபோது, காரில் வந்தவர்கள் யாரென்ற விவரங்களைச் சேகரித்தனர். பின்னர் அவர்களிடம் போலீஸார் கடந்த சில தினங்களாக விசாரணை நடத்தியிருக்கின்றனர். விசாரணையில் ஒவ்வொருவரும் ஒரு காரணத்தைக் கூறியிருக்கின்றனர். அது போலீஸாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதோடு மஸ்தான் உயிரிழந்த சம்பவத்தை அவரோடு இருந்தவர்கள் சொன்ன தகவல்கள் அடிப்படையில், அடுத்தகட்ட விசாரணையில் போலீஸார் ஈடுபட்டனர். அப்போது திடீர் திருப்பமாக காரில் வைத்தே கழுத்தை நெரித்து மஸ்தான் கொலைசெய்யப்பட்டது தெரியவந்தது.

இந்தக் கொலைக்குப் பின்னணியில் மஸ்தானின் மருமகன் இருப்பது தெரிந்தது. அதனால் மஸ்தானின் கார் டிரைவர் இம்ரான், உறவினரான சித்தா டாக்டர் சுல்தான் அகமது, நண்பர்கள் நசீர், தவ்பீக், லோகேஷ் ஆகிய 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர்கள் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் மஸ்தானைக் கொலைசெய்தததை ஒப்புக்கொண்டனர்.

இது குறித்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``மஸ்தான் உயிரிழந்த சம்பவத்தில் சில தகவல்கள் முரண்பாடாக இருந்தன. அந்தச் சந்தேகத்தின் பேரில் நடத்திய விசாரணையில்தான் மஸ்தான் கொலைசெய்யப்பட்டது தெரியவந்தது. மஸ்தான் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருந்தது. அதனால் திருமண அழைப்பிதழை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கொடுக்க மஸ்தான், காரில் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று வந்தார். அதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள இந்தக் கும்பல் காத்திருந்தது.

கைது
கைது

கடந்த 22-ம் தேதி மஸ்தான் சென்னையில் உள்ள தன்னுடைய வீட்டிலிருந்து காரில் புறப்படும் தகவலை அவரின் கார் டிரைவர் இம்ரான், கொலையாளிகளுக்கு தெரிவித்திருக்கிறார். அதன்பிறகு ஊரப்பாக்கம் பகுதியில் காரை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் இம்ரான் நிறுத்தியிருக்கிறார். அப்போது அங்கு வந்தக் கும்பல், கார் டிரைவர் இம்ரானின் உதவியோடு மஸ்தானை கொலைசெய்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இம்ரானின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்து வருகிறோம். அதன்பிறகு மஸ்தான், ஹார்ட்அட்டாக்கில் உயிரிழந்துவிட்டதாக டிரைவர் இம்ரான் நாடகமாடியிருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மஸ்தானின் கொலையில் அவரின் சகோதரரின் மருமகனும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்" என்றார்.