Published:Updated:

நீலகிரி: திருமணம் செய்வதாகப் பெண் காவலரை ஏமாற்றிய எஸ்.எஸ்.ஐ கைது - என்ன நடந்தது?

எஸ்.எஸ்.ஐ கைது

திருமணம் செய்துகொள்வதாகப் பெண் காவலரை ஏமாற்றிய புகாரின்பேரில் எஸ்.எஸ்.ஐ கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

நீலகிரி: திருமணம் செய்வதாகப் பெண் காவலரை ஏமாற்றிய எஸ்.எஸ்.ஐ கைது - என்ன நடந்தது?

திருமணம் செய்துகொள்வதாகப் பெண் காவலரை ஏமாற்றிய புகாரின்பேரில் எஸ்.எஸ்.ஐ கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Published:Updated:
எஸ்.எஸ்.ஐ கைது

நீலகிரி மாவட்டம், மஞ்சூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவந்தவர் சரவணன். 50 வயதான இவர், மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்துவந்திருக்கிறார். இந்த நிலையில், அப்பர் குன்னூர் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது அதே காவல் நிலையத்தில் பணியாற்றிவந்த பெண் காவலர் ஒருவரைத் திருமணம் செய்வதாகக் கூறிப் பழகியிருக்கிறார்.‌ விவாகரத்தான அந்தப் பெண் காவலரும் அதை நம்பியிருக்கிறார். இந்த நிலையில், ஆசைவார்த்தைகளைக் கூறி பல்வேறு வகையில் தன்னை சரவணன் ஏமாற்றிவிட்டார் என அந்தப் பெண் காவலர் புகார் அளித்திருக்கிறார். இந்தப் புகாரின் அடிப்படையில் சரவணனிடம் விசாரணை மேற்கொண்ட போலீஸார், அவர்மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.

போலீஸ்
போலீஸ்

சரவணன் குறித்து நம்மிடம் பேசிய காவலர்கள் சிலர், ``காவலர் சரவணன்மீது ஏகப்பட்ட புகார்கள் உள்ளன. இதன் காரணமாகவே அப்பர் குன்னூர் காவல் நிலையத்திலிருந்து மஞ்சூருக்கு மாற்றப்பட்டார். அங்கும் அவர்மீது புகார்கள் வந்தன. பெண் காவலர் அளித்த புகாரின்பேரில் காவலர் சரவணனைக் கைதுசெய்து ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கிறோம். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடத்தப்படும். துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும்" என்றனர்.