Published:Updated:

போலி ஆவணங்கள் மூலம் இந்தியாவுக்கு வந்த பங்களாதேஷ் நபர் - தேசியகீதம் பாடச் சொன்னதால் சிக்கிய சம்பவம்

பங்களாதேஷ் நபர் கைது
News
பங்களாதேஷ் நபர் கைது

போலி ஆவணங்கள் மூலம் சார்ஜாவிலிருந்து கோவை விமான நிலையத்துக்கு வந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த நபர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

போலி ஆவணங்கள் மூலம் இந்தியாவுக்கு வந்த பங்களாதேஷ் நபர் - தேசியகீதம் பாடச் சொன்னதால் சிக்கிய சம்பவம்

போலி ஆவணங்கள் மூலம் சார்ஜாவிலிருந்து கோவை விமான நிலையத்துக்கு வந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த நபர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
பங்களாதேஷ் நபர் கைது
News
பங்களாதேஷ் நபர் கைது

குடியரசு தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் விமானம், பேருந்து, ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில், சார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமானத்தின் மூலம் வந்த பயணிகளை விமான நிலைய இமிகிரேஷன் (Immigration) அதிகாரிகள் வழக்கமான பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

கோவை விமான நிலையம்
கோவை விமான நிலையம்

அப்போது சர்தார் அனோவர் உசேன் என்பவரிடம் சோதனை நடத்தியிருக்கின்றனர். 

உசேன் கொடுத்த ஆவணங்களில் அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், அதிகாரிகள் அனோவர் உசேனை தேசியகீதம் பாடலை பாடச் சொல்லியிருக்கின்றனர். ஆனால், அவர் தேசியகீதம் பாடத் தெரியாமல் திகைத்து நின்றிருக்கிறார்.

அனோவர் உசேன்
அனோவர் உசேன்

அதைத் தொடருந்து, அதிகாரிகள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கின்றனர். இதில் அவர் திக்கு முக்காடிப் போயிருக்கிறார்.

ஒருகட்டத்தில் அவர், தான் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், போலியான ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்று வந்திருப்பதையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து விமான நிலைய அதிகாரி கிருஷ்ணன், பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கைது
கைது

அதனடிப்படையில் அனோவர் உசேனைக் கைதுசெய்த போலீஸார், அவரை புழல் சிறையில் அடைத்தனர்.