Published:Updated:

கஞ்சா விற்பனை செய்த நான்கு போலீஸார் சஸ்பெண்ட்; ஒருவர் கைது! - கூடலூரில் என்ன நடக்கிறது?

அமரன்

கஞ்சா வியாபாரியைக் கைதுசெய்து, அவரிடமிருந்த ஒரு கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், போலீஸார் ஒருவர்தான் தனக்கு சப்ளை செய்துவருகிறார் என திடுக்கிடவைத்திருக்கிறார்.

கஞ்சா விற்பனை செய்த நான்கு போலீஸார் சஸ்பெண்ட்; ஒருவர் கைது! - கூடலூரில் என்ன நடக்கிறது?

கஞ்சா வியாபாரியைக் கைதுசெய்து, அவரிடமிருந்த ஒரு கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், போலீஸார் ஒருவர்தான் தனக்கு சப்ளை செய்துவருகிறார் என திடுக்கிடவைத்திருக்கிறார்.

Published:Updated:
அமரன்

கேரள எல்லையோரத்திலுள்ள நீலகிரி காவல் நிலையத்தைச்‌ சேர்ந்த காவலர்கள் சிலருக்கும், கஞ்சா வியாபாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறையின் உயரதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. இந்தத் தகவலின் அடிப்படையில், தனிப்படை அமைத்து கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளிலுள்ள காவல் நிலையங்களைக் கண்காணித்துவந்தனர்.

அமரன்
அமரன்

இந்த நிலையில், பந்தலூர் அருகிலுள்ள புளியம்பாறைப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் தேவாலா காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சரத்குமார் என்ற கஞ்சா வியாபாரியைக் கைதுசெய்து, அவரிடமிருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், போலீஸார் ஒருவர்தான் தனக்கு சப்ளை செய்துவருகிறார் என திடுக்கிடவைத்திருக்கிறார். தொடர்ந்து அவரிடம்‌ நடத்திய விசாரணையில் மேலும் மூன்று போலீஸாருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. காவலர் ஒருவரை உடனடியாகக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த திடுக்கிடும் சம்பவம் குறித்து நீலகிரி காவல்துறை அதிகாரிகள், "எருமாடு காவல் நிலையத்தில் காவலராக இருந்துவந்த அமரன் கஞ்சா சப்ளையில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்டது. அமரனைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம்.‌

விவேக்
விவேக்

சேரம்பாடி காவல் நிலையத்தில் பணியாற்றிவந்த கணேசன், உடையார் மற்றும் ஊட்டி பி 1 காவல் நிலையத்தைச்‌ சேர்ந்த விவேக் ஆகிய காவலர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்களை சஸ்பெண்ட் செய்திருக்கிறோம். தலைமறைவாக இருப்பவர்களை‌த் தேடிவருகிறோம்" என்றனர்.