Published:Updated:

ஸ்ரீபெரும்புதூர்: அரசு நிலத்தைத் தனியாருக்கு விற்ற தில்லுமுல்லு அலுவலர்கள்... சிக்கியது எப்படி?

ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு நிலத்தைத் தனியாருக்கு விற்பனை செய்த அரசு அதிகாரிகளை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

ஸ்ரீபெரும்புதூர்: அரசு நிலத்தைத் தனியாருக்கு விற்ற தில்லுமுல்லு அலுவலர்கள்... சிக்கியது எப்படி?

ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு நிலத்தைத் தனியாருக்கு விற்பனை செய்த அரசு அதிகாரிகளை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

Published:Updated:

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வடகால், பால்நல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் ஒரு தனியார் நிறுவனம் வினோத் நகர் என்ற பெயரில் வீட்டுமனைகளை அமைத்தது. அந்த நிறுவனத்தின் பங்குதாரர் ஒருவர், கடந்த 1991-ம் ஆண்டு 16.64 ஏக்கர் நிலத்தை பொது உபயோகத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்திடம் ஒப்படைத்தார். அதற்காகச் சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி பத்திரப்பதிவு நடந்து, அந்த பத்திரம் ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகம்
ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகம்

பொதுப் பயன்பாட்டுக்காகக் கொடுக்கப்பட்ட நிலத்தை அதே தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த அமலதாஸ் ராஜேஷ் என்பவர் மோசடி செய்து விற்பனை செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில், சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், பொது உபயோகத்திற்காக வழங்கப்பட்ட 30 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, அமலதாஸ் ராஜேஷ் சிலருடன் சேர்ந்து மோசடி செய்து விற்பனை செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அமலதாஸ் ராஜேஷை சிபிசிஐடி போலீஸார் கைதுசெய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல அரசு அதிகாரிகள் இந்த மோசடியில் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது. பொது உபயோகத்துக்காக வழங்கப்பட்ட நிலத்தை ரத்து செய்து, அந்த நிலம் விற்பனை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அந்த சமயத்தில் மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த ராஜேந்திரன்(54) என்பவர் உடந்தையாக இருந்திருக்கிறார். இவர் தற்போது, சென்னை இந்து சமய அறநிலையத் துறை மாவட்ட வருவாய் அலுவலராக இருக்கிறார்.

அரசு அலுவலர்கள் - போலீஸார் கைது
அரசு அலுவலர்கள் - போலீஸார் கைது

ராஜேந்திரனுக்கு உதவியாக இருந்த நில எடுப்பு தாசில்தார் எழில்வளவன் (50), ஸ்ரீபெரும்புதூர் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் பார்த்தசாரதி (33), காஞ்சிபுரம் சார்பதிவாளர் அலுவலக இணை பதிவாளர் ராஜதுரை (41), உதவியாளர் பெனடின் (54) ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைதுசெய்துள்ளனர். 30 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மோசடி செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்கள்மீது 11 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.