Published:Updated:

காவல்துறை தடையை மீறி நிகழ்ச்சி நடத்த முயன்ற ஹெச்.ராஜா கைது! - பழனியில் பரபரப்பு

ஹெச்.ராஜா கைது

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகில் பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.

காவல்துறை தடையை மீறி நிகழ்ச்சி நடத்த முயன்ற ஹெச்.ராஜா கைது! - பழனியில் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகில் பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.

Published:Updated:
ஹெச்.ராஜா கைது

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இந்து ஆலய பாதுகாப்புக் குழு சார்பில் பழனி இடும்பன் கோயில் குளக்கரையில் மகா சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சிக்குச் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மன்னார்குடி மன்னார்குடி செண்டலங்கர ஜீயர் ஆகியோர் கலந்துகொள்ள இருந்தனர்.

இந்த நிலையில், பழனி இடும்பன் கோயில் குளக்கரையில் மகா சங்கமம் நிகழ்ச்சி நடத்துவதற்குச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. நிகழ்ச்சி இரவு நேரம் நடத்தப்படுவதால் மின்சார ஏற்பாடுகள் குறித்து தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. நிகழ்ச்சிக்குப் பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டவர்கள் வர இருப்பதால் போதிய இடவசதி இல்லை என்றும், பக்தர்கள் எத்தனை வாகனங்களில் வருகை தருவார்கள் என்ற விவரமும் காவல்துறைக்குத் தெரிவிக்கப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது.

ஹெச்.ராஜா கைது
ஹெச்.ராஜா கைது

மேலும், பழனி காவல் கோட்டம் முழுவதும் காவல் சட்டப் பிரிவு (30)2 அமலில் இருக்கிறது. எனவே சட்டம் ஒழுங்கு பிரச்னை அல்லது பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படும் சூழல் உள்ளது எனக் கூறி மகா சங்கமம் நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

ஆனால், காவல்துறையின் உத்தரவை மீறி இந்த நிகழ்ச்சியை நடத்த பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா அந்த இடத்துக்கு விரைந்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹெச்.ராஜா கைது
ஹெச்.ராஜா கைது

அப்போது பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜாவை பழனி உட்கோட்ட காவல் பிரிவு எல்லையான சத்திரப்பட்டியில் வைத்து, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி ரூபேஷ்குமார் மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட போலீஸார் கைது செய்தனர்.

அதையடுத்து, ஹெச்.ராஜா சீருடை அணிந்திருந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசனை மரியாதைக் குறைவாகப் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஹெச்.ராஜா கைது செய்யப்பட்டதால், பழனியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், சில மணிநேரம் கழித்து போலீஸார் ஹெச்.ராஜாவை விடுவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism