Published:Updated:

ஈரோடு: நிதி நிறுவன ஊழியர்மீது தாக்குதல்! - பாஜக பிரமுகர்மீது வழக்கு பதிவு

பாஜக பிரமுகர்மீது வழக்கு பதிவு!
News
பாஜக பிரமுகர்மீது வழக்கு பதிவு!

வாக்குவாதம் முற்றிய நிலையில் விநாயகமூர்த்தியும், கடையில் பணிபுரிபவர்களும் சேர்ந்து தாக்கியதில் காயமடைந்த விக்னேஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில் சூரம்பட்டி போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.

ஈரோடு: நிதி நிறுவன ஊழியர்மீது தாக்குதல்! - பாஜக பிரமுகர்மீது வழக்கு பதிவு

வாக்குவாதம் முற்றிய நிலையில் விநாயகமூர்த்தியும், கடையில் பணிபுரிபவர்களும் சேர்ந்து தாக்கியதில் காயமடைந்த விக்னேஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில் சூரம்பட்டி போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.

Published:Updated:
பாஜக பிரமுகர்மீது வழக்கு பதிவு!
News
பாஜக பிரமுகர்மீது வழக்கு பதிவு!

ஈரோடு, ராஜாஜிபுரத்தைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (58). இவர் பா.ஜ.க-வின் எஸ்.சி., எஸ்.டி பிரிவின் மாநில துணைச் செயலாளராக இருந்துவருகிறார். இவருக்குச் சொந்தமான செருப்புக்கடை ஈரோடு காந்திஜி ரோட்டில் இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு இவரது செருப்பு கடைக்கு வந்த ஈரோடு, மரப்பாலத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், தன்னுடைய மோட்டார் பைக்கை விநாயகமூர்த்தியிடம் அடமானமாக வைத்துக்கொண்டு ரூ.30,000 பணம் கொடுக்குமாறு கேட்டதாகத் தெரிகிறது. விநாயகமூர்த்தியும் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பணத்தை வாங்கிய நாளில் கடைக்கு முன்பு படுத்திருந்த செந்தில்குமார் காலையில் உயிரிழந்த நிலையில் அங்கு சடலமாகக் கிடந்தார். இதையடுத்து செந்தில்குமாரின் உறவினர்கள் மூலம் தகவல் தரப்பட்டு செந்தில்குமாரின் வீட்டுக்குச் சடலம் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், செந்தில்குமார் அடமானமாக வைத்த மோட்டார் பைக் விநாயகமூர்த்தியின் கடைக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்தது. 

விநாயகமூர்த்தி
விநாயகமூர்த்தி

இதைக் கண்ட ஈரோடு சிட்டி ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விக்னேஷ்குமார் (28) என்பவர், விநாயகமூர்த்தியிடம் சென்று செந்தில்குமார் நிறுத்திவைத்திருக்கும் மோட்டார் பைக்கின் ஆர்.சி புத்தகத்தை, தான் பணிபுரியும் நிதி நிறுவனத்தில் அடமானமாகவைத்து ரூ.55,000 கடனாகப் பெற்றிருப்பதாகவும், செந்தில்குமார் அந்தப் பணத்தைத் திருப்பித் தராததால் அவருக்குச் சொந்தமான மோட்டார் பைக்கை எடுத்துச் செல்வதாகவும் விநாயகமூர்த்தியிடம் கூறியிருக்கிறார். அதற்கு பதிலளித்த விநாயகமூர்த்தி, செந்தில்குமார் தன்னிடம் மோட்டார் பைக்கை வைத்து ரூபாய் 30,000 கடனாக வாங்கியிருப்பதால் அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டு மோட்டார் பைக்கை  எடுத்துச் செல்லுமாறு விக்னேஷ்குமாரிடம் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் விநாயகமூர்த்தியும், கடையில் பணிபுரிபவர்களும் சேர்ந்து விக்னேஷ்குமாரை சரமாரியாகத் தாக்கியதாகத் தெரிகிறது. இதனால் காயமடைந்த விக்னேஷ்குமார், சூரம்பட்டி போலீஸில் புகாரளித்தார். அதன்பேரில் விநாயகமூர்த்தி மீது சூரம்பட்டி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.