Published:Updated:

இரவுக் காட்சி பார்த்துவிட்டுத் திரும்பிய பெண்; பாலியல் வன்கொடுமை செய்த காவலர்! - மதுரையில் கொடூரம்!

பாலியல் வன்கொடுமை

மேற்கொண்டு விசாரிக்க வேண்டும் என்று கூறிய கான்ஸ்டபிள் முருகன், அவருக்குத் தெரிந்த லாட்ஜுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

இரவுக் காட்சி பார்த்துவிட்டுத் திரும்பிய பெண்; பாலியல் வன்கொடுமை செய்த காவலர்! - மதுரையில் கொடூரம்!

மேற்கொண்டு விசாரிக்க வேண்டும் என்று கூறிய கான்ஸ்டபிள் முருகன், அவருக்குத் தெரிந்த லாட்ஜுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

Published:Updated:
பாலியல் வன்கொடுமை

மதுரையைச் சேர்ந்த விவாகரத்தான இளம்பெண் குடும்பச் சூழல் காரணமாக கட்டுமானப்பொருள் விற்கும் கடையொன்றில் பணியாற்றிவந்தார். கடந்த சனிக்கிழமை இரவு, கடையை அடைத்துவிட்டுக் கடை உரிமையாளர், சக ஊழியர்கள் சிலருடன் சேர்ந்து செல்லூரிலிருக்கும் திரையரங்கில் இரவுக் காட்சி பார்க்கச் சென்றிருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

படம் முடிந்து பின்னர், கடை உரிமையாளர் மற்றும் ஊழியர் ஒருவர் அந்தப் பெண்ணை அவர் வீட்டில் இறக்கிவிடுவதற்காக டூ வீலரில் சென்றிருக்கின்றனர்.

அப்போது, டவுன்ஹோல் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த, திலகர் திடல் கான்ஸ்டபிள் முருகன், அந்த டூ வீலரை நிறுத்தி விசாரித்திருக்கின்றனர். அந்தப் பெண்ணும் அவருடன் இருந்த நபர்களும், தாங்கள் திரைப்படத்துக்குச் சென்றுவிட்டு வருவதாகக் கூறியும், கான்ஸ்டபிள் முருகன் அவர்களை விடவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து, அந்தப் பெண்ணை பாலியல் தொழில் செய்யும் பெண்ணுடன் தொடர்புப்படுத்தி கான்ஸ்டபிள் முருகன் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது அந்தப் பெண்ணுடன் வந்திருந்த கடை உரிமையாளர், ``எங்களுக்குள் எந்தவித தவறான தொடர்பும் இல்லை. திருமணமாகி குடும்பத்துடன் வசித்துவருகிறேன். கடை ஊழியர் என்ற அடிப்படையில் அவரை அழைத்துக்கொண்டு திரைப்படம் பார்க்கச் சென்றேன்" என்று கூறியிருக்கிறார்.

கான்ஸ்டபிள் முருகன்
கான்ஸ்டபிள் முருகன்

அதைக் காதில் வாங்கிக்கொள்ளாத முருகன், இதை வெளியில் சொல்லி அசிங்கப்படுத்திவிடுவேன் என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அதனால் பயந்துபோன மகேஷிடம் ரூ.11,000, மொபைல்போன், ஏ.டி.எம் கார்டுகளைப் பறித்துக்கொண்டு, கான்ஸ்டபிள் முருகன் அந்தப் பெண்ணை மட்டும் விசாரித்துவிட்டு பத்திரமாக அனுப்பிவைப்பதாகக் கூறி கடை உரிமையாளரையும், அவருடன் இருந்தவரையும் விரட்டியனுப்பியிருக்கிறார். அதையடுத்து, அங்கிருந்த மற்றொரு காவலரையும் முருகன் வேறு இடத்துக்கு அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன் பிறகு, அந்தப் பெண்ணிடம் மேற்கொண்டு விசாரிக்க வேண்டும் என்று கூறிய கான்ஸ்டபிள் முருகன், அவருக்குத் தெரிந்த லாட்ஜுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். பின்னர், காலையில் அந்தப் பெண்ணை வீட்டுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

அதனால், பெரும் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தபோதுதான், அவர் தனக்கு நடந்த கொடுமைகளைக் கூறியிருக்கிறார்.

கைது
கைது

இதற்கிடையில், கடை உரிமையாளர், அந்தப் பெண் கடைக்கு வேலைக்கு வராததால், பயந்து அவரின் வீட்டுக்குச் சென்று விசாரித்தபோதுதான் நடந்த விஷயங்கள் தெரிந்திருக்கின்றன. மேலும், தன்னிடமிருந்து ஏ.டி.எம் கார்டுகளைக் கைப்பற்றிய கான்ஸ்டபிள் முருகன், அதிலிருந்து ரூ.30,000 எடுத்ததும் தெரியவந்திருக்கிறது. அதையடுத்து, கடை உரிமையாளரும், பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

முதலில் இவர்களின் புகாரை காவல்துறையினர் நம்பவில்லை. பின்னர், திலகர் திடல் உதவி கமிஷனர் ரவீந்திரநாத் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தைப் பெற்று, கமிஷனரிடம் தெரிவித்தார். அதையடுத்து, அனைத்து மகளிர் காவல் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான போலீஸார் முருகனைக் கைதுசெய்தனர். உடனே அவரை இடைநீக்கம் செய்து கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டார்.

கான்ஸ்டபிள் முருகன் திடீர் நகர் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது சில மாதங்களுக்கு முன்பு மது அருந்திவிட்டு கடையில் தகராறு செய்த புகாரில் திலகர் திடல் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், இந்த கொடூரத்தைச் செய்திருக்கிறார். அவர் இதுபோல வேறு குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறாரா என்பதைக் காவல்துறையினர் விசாரித்துவருகிறார்கள்.

கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா
கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா

இரவு நேரங்களில் இதுபோல் வாகன சோதனையில் ஈடுபடும் காவலர்களை அந்தப் பகுதி காவல் நிலைய ஆய்வாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்திவருகிறார்கள்.

இது குறித்து மதுரை மாநகர போலிஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் கேட்டோம். ``அவர்மீது புகார் வந்தவுடன் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அவர்மீதான பழைய புகாரின் மீது விசாரணை நடந்துவருகிறது. இனி இது போன்ற ஒழுங்கீனமான முறையில் காவல்துறையினர் நடந்துகொள்ளாதவாறு கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருக்கிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism