Published:Updated:

3 ஆண்டுகளுக்கு முன்பு கொலை; வழக்கை முறையாக விசாரிக்காத ஆய்வாளர் சஸ்பெண்ட்! - என்ன நடந்தது?

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கை முறையாக விசாரணை நடத்தாமல் குற்றவாளிகளை தப்பிவிட்ட காவல் ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.

3 ஆண்டுகளுக்கு முன்பு கொலை; வழக்கை முறையாக விசாரிக்காத ஆய்வாளர் சஸ்பெண்ட்! - என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கை முறையாக விசாரணை நடத்தாமல் குற்றவாளிகளை தப்பிவிட்ட காவல் ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.

Published:Updated:
விருதுநகர்

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் காளிராஜன்(25). இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் எண்ணைக்காப்பு மண்டபத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய ஸ்ரீவில்லிப்புத்தூர் டவுன் காவல் நிலையத்தின் அப்போதைய ஆய்வாளர் பாலாஜி, சந்தேக மரணம் என வழக்கு பதிவுசெய்து காளிராஜன்‌ இறப்பு குறித்து விசாரித்து வந்தார். தொடர்ந்து வழக்கில் துப்புத்துலக்க ஏதும் தடயங்கள் கிடைக்கவில்லை எனக்கூறி காளிராஜனின் வழக்கை முடித்து வைத்துள்ளார்.

இந்நிலையில், தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் அறிவுறுத்தலின் பேரில் விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மனோகரின் மேற்பார்வையில் கடந்த 3 ஆண்டுகளில் நடந்த சந்தேக மரணம், விசாரிக்காமல் கைவிடப்பட்ட வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்பேரில் தனிப்படையினர் காளிராஜனின் வழக்கில் துப்பு துலங்கியதில் அவர் கொலைசெய்யப்பட்டுள்ளார் எனத் தெரியவந்தது. இது தொடர்பாக ராஜபாளையத்தைச் சேர்ந்த அழகர்சாமி என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து தனிப்படையினர் விசாரணை செய்ததில் அவர் உட்பட பலர் சேர்ந்து காளிராஜனை நெஞ்சில் மிதித்து கொலைசெய்தது உறுதியானது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சஸ்பெண்ட்
சஸ்பெண்ட்

இதையடுத்து, காளிராஜனின் தற்கொலை வழக்கை கொலைவழக்காக மாற்றி பதிவுசெய்த போலீஸார், அழகர்சாமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருத்தங்கல்லைச் சேர்ந்த கருத்தப்பாண்டி, அழகர்சாமி, ராமசாமி, ஆறுதல் ராஜா, பொன்ராஜ் ஆகிய 5 பேரை கைதுசெய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மனோகரிடம் பேசினோம். ``காளிராஜன் கொலை வழக்கில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2019-ல் இந்த வழக்கு அவசர அவசரமாக முடிக்கப்பட்டதற்கு காரணம் என்ன என்று விசாரணை நடத்தி வருகிறோம். அரசியல் பிண்ணனியில் இந்தக்கொலை மறைக்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்துவருகிறது. இந்தச் சம்பவத்தில் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் அலட்சியமாக செயல்பட்டிருந்தால் அவர்கள்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியாகக் கூறினார்.

காளிராஜனின் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள கருத்தப்பாண்டி விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் வி.ஐ.பி.யுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் என்பதால் இந்த வழக்கு பரபரப்பாக பேசப்படுகிறது. இது தொடர்பாக கடந்த 10.7.2022 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் கட்டுரை வெளியிட்டுயிருந்தோம்.

அதன்தொடர்ச்சியாக, காளிராஜன் வழக்கில் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி பாலாஜியை சஸ்பெண்ட் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் பாலாஜி தற்போது தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.