Published:Updated:

தண்டனைப் பணியிலும் பாலியல் குற்றச்சாட்டு; 6 முறை சஸ்பெண்ட் - ஆய்வாளரைப் பணியிலிருந்தே நீக்கிய டிஜிபி

பணியிலிருந்து நீக்கப்பட்ட ஆய்வாளர் பி.ஆர்.சுனு
News
பணியிலிருந்து நீக்கப்பட்ட ஆய்வாளர் பி.ஆர்.சுனு

தொடர்ச்சியாக குற்றச்செயலில் ஈடுபடுபவர், போலீஸில் இருக்க தகுதியானவர் அல்ல எனக்கூறி பி.ஆர்.சுனுவைப் பணியிலிருந்து நீக்கி உத்தரவிட்டிருக்கிறார் கேரள டி.ஜி.பி அனில் காந்த்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் திருக்காக்கரைப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் வேலை வாங்கித்தருவதாகப் பணமோசடி செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். பணமோசடியில் கைதானவரை விடுவிக்க உதவுவதாக அவரின் மனைவியிடம் கூறியிருக்கிறார் கோழிக்கோடு கோஸ்டல் ஆய்வாளர் பி.ஆர்.சுனு. பின்னர் அந்தப் பெண்ணின் வீட்டில் வைத்தும், கடவந்தறா பகுதியில் வைத்தும் கடந்த ஆண்டு மே மாதம் அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் ஆய்வாளர் பி.ஆர்.சுனு. இது பற்றி கொச்சி துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த நவம்பர் மாதம் புகாரளித்தார் அந்தப் பெண். விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஆய்வாளருக்கு திருக்காக்கரை போலீஸார் சம்மன் அனுப்பினர். விசாரணைக்கு அஜராகாததால் நவம்பர் 13-ம் தேதி கோழிக்கோடு கோஸ்டல் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று அங்கு பணியிலிருந்த ஆய்வாளர் பி.ஆர்.சுனுவை திருக்காக்கரை போலீஸார் கைதுசெய்தனர்.

கேரள டி.ஜி.பி அனில்காந்த்
கேரள டி.ஜி.பி அனில்காந்த்

கொச்சி மரட் பகுதியைச் சேர்ந்த ஆய்வாளர் சுனு, 2021 பிப்ரவரியில் முளவுக்காடு போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த சமயத்தில், புகாரளிக்க வந்த பட்டதாரி பெண்ணை வன்கொடுமை செய்ததாகக் கைதுசெய்யப்பட்டிருந்தார். அந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவருக்குத் தண்டனைப் பணியாக கோழிக்கோடு கோஸ்டல் காவல் நிலையத்தில் பணி வழங்கப்பட்டிருந்த நிலையில், மற்றொரு பாலியல் வழக்கில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகளைப் பணியிலிருந்து விடுவிக்க கேரள அரசு முடிவுசெய்து பட்டியல் தயாரித்தது. முதல் பெயராக ஆய்வாளர் பி.ஆர்.சுனு-வின் பெயர் இருந்தது. தொடர்ச்சியாக குற்றச்செயலில் ஈடுபடுபவர் போலீஸ் சேனையில் இருக்க தகுதியானவர் அல்ல எனக்கூறி பி.ஆர்.சுனுவைப் பணியிலிருந்து நீக்கி உத்தரவிட்டிருக்கிறார் கேரள டி.ஜி.பி அனில் காந்த். போலீஸ் ஆக்ட் பிரிவு 86-ன்படி அவரை நீக்கியதாகக் கூறப்படுகிறது.

பணியிலிருந்து நீக்கப்பட்ட ஆய்வாளர் பி.ஆர்.சுனு
பணியிலிருந்து நீக்கப்பட்ட ஆய்வாளர் பி.ஆர்.சுனு

15 முறை துறை ரீதியான நடவடிக்கைக்கும், ஆறு முறை சஸ்பெண்டும் செய்யப்பட்டவர் பி.ஆர்.சுனு. போலீஸ் ஆக்ட் படி கேரளாவில் முதன் முதலில் பணியிலிருந்து நீக்கப்பட்ட முதல் போலீஸ் அதிகாரியாவார். பணியிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்பு ஆய்வாளர் பி.ஆர்.சுனுவிடம் விளக்கம் கேட்கப்பட்டதாகவும். அதைத் தொடர்ந்தே அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.