Published:Updated:

மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு: சந்தேக நபரிடம் போனில் பேசிய இளைஞர் - குமரியில் ஒருவரிடம் விசாரணை

குண்டு வெடிப்பு வழக்கில் அஸ்ஸாமைச் சேர்ந்த அஜிஜுர் ரகுமான்

மங்களூர் குண்டு வெடிப்பில் சந்தேகத்துக்கு இடமாக போலீஸ் விசாரணையிலுள்ள நபரின் செல்போனை அங்குள்ள போலீஸார் சோதனை செய்துள்ளனர். அந்த எண்ணுக்கு கடந்த 17.11.2022 அன்று மாலை அஜிஜுர் ரகுமான் போனிலிருந்து 10 விநாடிகள் அழைப்பு சென்றிருக்கிறது.

மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு: சந்தேக நபரிடம் போனில் பேசிய இளைஞர் - குமரியில் ஒருவரிடம் விசாரணை

மங்களூர் குண்டு வெடிப்பில் சந்தேகத்துக்கு இடமாக போலீஸ் விசாரணையிலுள்ள நபரின் செல்போனை அங்குள்ள போலீஸார் சோதனை செய்துள்ளனர். அந்த எண்ணுக்கு கடந்த 17.11.2022 அன்று மாலை அஜிஜுர் ரகுமான் போனிலிருந்து 10 விநாடிகள் அழைப்பு சென்றிருக்கிறது.

Published:Updated:
குண்டு வெடிப்பு வழக்கில் அஸ்ஸாமைச் சேர்ந்த அஜிஜுர் ரகுமான்

கர்நாடகா மாநிலம், மங்களூரில் நேற்று முன்தினம் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஆட்டோ டிரைவரும், பயணியாக வந்த ஷாரிக் (22) என்பவரும் படுகாயமடைந்தனர். மங்களூர் சம்பவத்துக்கும், கோவை குண்டு வெடிப்புக்கும் தொடர்பு இருக்கிறதா என விசாரிக்கப்படுகிறது. இது குறித்து என்.ஐ.ஏ விசாரணை நடத்திவருகிறது. இந்த நிலையில் மங்களூர் குண்டு வெடிப்பில் காயமடைந்த ஒருவரின் செல்போன் எண்ணுக்கு நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் பணிபுரியும் அஸ்ஸாமைச் சேர்ந்த அஜிஜுர் ரகுமான் என்பவரின் செல்போனிலிருந்து அழைப்பு சென்றிருக்கிறது. இது குறித்து குமரி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அஜிஜுர் ரகுமானை கோட்டாறு போலீஸ் ஸ்டேஷனில்வைத்து குமரி மாவட்ட எஸ்.பி ஹரிகிரன் பிரசாத் விசாரணை நடத்திவருகிறார்.

கோட்டாறு காவல் நிலையத்தில் விசாரணை
கோட்டாறு காவல் நிலையத்தில் விசாரணை

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "கர்நாடகா மாநிலம், மங்களூர் குண்டு வெடிப்பு தொடர்பாக நாகர்கோவிலில் வசித்துவரும் அஸ்ஸாமைச் சேர்ந்த அஜிஜுர் ரகுமான் (23) என்பவரிடம் விசாரணை நடத்திவருகிறோம். நாகர்கோவில் ரயில்வே ஃபீடர் ரோட்டில் ஒரு பாஸ்ட் ஃபுட் கடையில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் அஜிஜுர் ரகுமான் வேலை செய்துவருகிறார். அந்த பாஸ்ட் ஃபுட் கடையை நடத்திவருபவரின் மனைவி ஒரு வங்கியில் இன்ஷூரன்ஸ் விற்பனை மேலாளராகப் பணியாற்றிவருகிறார். அவருக்குக் கடந்த 26.09.22 அன்று ஒரு சந்தேக எண்ணிலிருந்து பேசிய நபர் தமிழ் அல்லாத புரியாத மொழியில் பேசியிருக்கிறார்.

அது இந்தி மொழியாக இருக்கலாம் என நினைத்த அந்தப் பெண் அஜிஜுர் ரகுமானிடம் அந்த நம்பரைக் கொடுத்து எதிர்முனையில் பேசியது யார் என கேட்கும்படி கூறியிருக்கிறார். அஜிஜுர் ரகுமான் அந்த நம்பருக்கு தனது செல்போனிலிருந்து அழைத்துப் பேசியிருக்கிறார். ஆனால் எதிர்முனையில் பேசியவர் என்ன மொழியில் பேசுகிறார் எனப் புரிந்துகொள்ள முடியவில்லை என அஜிஜுர் ரகுமான் அப்போது கூறியிருக்கிறார்.

அஸ்ஸாமைச் சேர்ந்த அஜிஜுர் ரகுமான்
அஸ்ஸாமைச் சேர்ந்த அஜிஜுர் ரகுமான்

இந்த நிலையில் மங்களூர் குண்டு வெடிப்பில் சந்தேகத்துக்கு இடமாக போலீஸ் விசாரணையிலுள்ள நபரின் செல்போனை அங்குள்ள போலீஸார் சோதனை செய்துள்ளனர். அந்த எண்ணுக்கு கடந்த 17.11.2022 அன்று மாலை அஜிஜுர் ரகுமான் போனிலிருந்து 10 விநாடிகள் அழைப்பு சென்றிருக்கிறது. அது குறித்து அஜிஜுர் ரகுமானிடம் விசாரணை நடத்திவருகிறோம். தவறுதலாக அழைப்பு சென்றதாக அஜிஜுர் ரகுமான் கூறுகிறார். ஆனாலும் தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.