Published:Updated:

கார் திருட்டு; சேஸிங்; `சைலேந்திரபாபு சார் 3 முறை போனில் பாராட்டிப் பேசினார்!’ - நெகிழ்ந்த காவலர்

``கண்ணிமைக்கும் நேரத்தில் இவை நடந்துவிட, உடனடியாக அந்த போலீஸ் `திருடன்’ என கத்திக்கொண்டே தனது டூ வீலரில் யூ டர்ன் அடித்து காரைத் துரத்திச் சென்று மடக்கிப் பிடிக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பட்டுக்கோட்டையில் பணிபுரியும் போலீஸ் ஒருவர் காரைத் திருடிச் சென்ற கார் திருடர்களை, தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் சேஸிங் செய்து ஒருவரை கைதுசெய்ததுடன், காரையும் பறிமுதல் செய்த சம்பவம் சினிமாவை விஞ்சும் வகையில் நடந்திருக்கிறது. இதையறிந்த காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு அவரைப் பாராட்டி ரூ.25,000 வெகுமதி வழங்கியிருக்கிறார்.

கார் திருடனை மடக்கிப் பிடித்த போலீஸ்
கார் திருடனை மடக்கிப் பிடித்த போலீஸ்

மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்தவர் வேல்பாண்டி (23). அவரின் நண்பர் வெங்கடேஷ். இருவரும் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில், கடந்த 13-ம் தேதி இரவு மதுரைக்குச் செல்ல வேண்டும் எனக் கூறி கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர். சில கிலோமீட்டர் தூரம் சென்றதும், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கார் டிரைவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடமிருந்த ரூ.8,000, வெள்ளி கை செயின் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டனர். பிறகு, டிரைவரைக் கீழே தள்ளிவிட்டு காரைத் திருடிச் சென்றனர்.

இது குறித்து கார் டிரைவர் திருவண்ணாமலை போலீஸில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து வண்டி நம்பர், ரேசர் என அதில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர், கார் நிறம் உள்ளிட்ட அடையாளங்களை தமிழக முழுவதுமுள்ள காவல் நிலையங்களுக்கு தெரிவதுபோல் ஒயர்லெஸ் மூலம் திருவண்ணாமலை போலீஸ் சார்பில் தெரிவித்து அனைத்து போலீஸாரையும் உஷார்படுத்தினர்.

`கூட்டமாக இருக்கும் இடங்களே டார்க்கெட்!’ -செல்போன் திருட்டு வழக்கில் இளைஞன் சிக்கியது எப்படி?

பட்டுக்கோட்டை டி.எஸ்.பி செங்கமலகண்ணனுக்கு டிரைவராகப் பணியாற்றும், முதல்நிலைக் காவலரான பிரசாத் என்ற காவலர் (30) ஒயர்லெஸ்ஸில் கூறிய கார் நம்பர், அடையாளங்களை நோட் செய்து வைத்துக்கொண்டார். இந்தநிலையில் 15-ம் தேதி மதியம் 1 மணியளவில் பிரசாத் மாத்திரை வாங்குவதற்காக பட்டுக்கோட்டையின் மையப்பகுதியான மணிகூண்டிலுள்ள மெடிக்கல் ஷாப் ஒன்றுக்ச்கு சென்றிருக்கிறார். அப்போது ரேசர் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த கார் வந்துகொண்டிருந்தது அவர் கண்ணில்பட, உடனே சுதாரித்துக்கொண்டவர், தான் நோட் செய்து வைத்திருந்த பேப்பரை எடுத்து காரின் நம்பரைச் சரிபார்க்க, அந்த கார் திருவண்ணாமலையில் திருடப்பட்ட கார் என்பது தெரிந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர் தன்னை நோக்கி வந்த காரை நிறுத்தினார். அதை ஓட்டி வந்தவர் காரை நிறுத்துவதுபோல் வந்து, பின்னர் நிறுத்தாமால் படு ஸ்பீடாகச் சென்றுவிட்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் இவை நடந்துவிட உடனடியாக `திருடன்...’ எனக் கத்திக்கொண்டே தனது டூ வீலரில் யூ டர்ன் அடித்து காரைத் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தார். இதில் ஒருவர் தப்பித்து ஓடி விட்டார். தன்னைத் தள்ளிவிட்டு ஓடி தப்ப முயன்ற மற்றொரு திருடனை தன் கையில் அடிப்பட்ட நிலையிலும், சாமர்த்தியமாகச் செயல்பட்டு அவனைக் கைதுசெய்ததுடன் திருடப்பட்ட காரையும் பறிமுதல் செய்தார். அவரை காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பலர் பாராட்டிவருகின்றனர்.

கைதுசெய்யப்பட்ட கார் திருடன்
கைதுசெய்யப்பட்ட கார் திருடன்

இது குறித்து பிரசாத்திடம் பேசினோம், ``திருவண்ணாமலையில் கார் திருடப்பட்டது குறித்த தகவலை தஞ்சாவூர் எஸ்.பி.ரவளி பிரியா மேடம் நம்ம எல்லைக்குள்ள கார் என்ட்டர் ஆனா தப்பித்து செல்லக் கூடாதுனு உஷர்ப்படுத்தினார். டி.எஸ்.பி செங்கமலக் கண்ணன் சாரும் எல்லோரும் விழிப்பா இருக்கணும்னு கூறியிருந்தார். இந்தநிலையில் கார் என் கண்ணில்பட்டது. நான் பார்த்துவிட்டதைத் தெரிந்துகொண்ட கார் திருடர்கள் காரை நிறுத்தாமல் பறந்தனர். பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதி என்பதால் யாருக்கும் ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாது எனக் கருதி `திருடன்...’ என கத்திக்கொண்டே எனது டூ வீலரில் அவர்களைத் துரத்தினேன். என் கண்ணைவிட்டு கார் அகலக் கூடாது என்பதால் படு வேகமாக காரைத் துரத்திச் சென்று மடக்கினேன்.

காரில் இருந்த இரண்டு பேரில் ஒருவன் இறங்கி தப்பித்து ஓடிவிட்டான். காரை ஓட்டிக்கொண்டிருந்தவனை நான் பிடித்திருந்தேன். அவனும் என் நெஞ்சில் கைவைத்து கீழே தள்ளிவிட்டு தப்பித்து ஓடினான். டிராஃபிக்கான பகுதியில் அவன் ஓடிக்கொண்டிருக்க, நானும் எழுந்து ஓடியபடியே உயரதிகாரிகளுக்கு போன் செய்து காரை செக்யூர் செஞ்சுட்டேன். ஒருத்தன் தப்பிச்சு ஓடிட்டான்; ஒருத்தனை துரத்திக்கொண்டிருக்கிறே’னு தகவல் சொல்லிட்டு துரத்தினேன்.

திருடப்பட்ட கார்
திருடப்பட்ட கார்

இதில் நான் தடுமாறி கீழே விழுந்ததில் கையில் பலத்த அடிபட்டு ரத்தம் வழிந்தது. அதைப் பொருட்படுத்தாமல் ஓடிச்சென்று அவனைப் பிடித்தேன். `திருடன்... திருடன்...’னு கத்தியும் பொதுமக்கள் யாரும் உதவிக்கு வரலை. நான் ஓடிக்கொண்டிருந்ததை பார்த்த ஊர்க்காவல் படையில் பணியாற்றும் எனது நண்பர்கள் ரெண்டு பேர் உதவிக்கு வந்தனர். அதற்குள் நான் திருடன் வேல்பாண்டியைப் பிடித்துவிட்டேன். அவனிடமிருந்து ரூ 8,000, வெள்ளி செயின் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தேன். பின்னர் அவன் மீது பல காவல் நிலையங்களில் ஒன்பது வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

`காரில் கைப்பையைக் களவாடிய ஊர்க்காவல் படைக் காவலர்?!’ - வைரல் வீடியோவும் போலீஸ் விளக்கமும்!

இந்தத் தகவலை அறிந்த ஐ.ஜி பாலகிருஷ்ணன், எஸ்.பி ரவளிப்பிரியா எனப் பலரும் என்னைப் பாராட்டி ரிவார்டு கொடுத்தனர். காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு சார் வெகுமதி வழங்கி பாராட்டுவதற்காக சென்னைக்கு அழைத்தார். என் கையில் அடிப்பட்டிருப்பதாக உயரதிகாரிகள் தெரிவித்ததையடுத்து `அவருக்கு அலைச்சல் கொடுக்க வேண்டாம். நானே ரிவார்டையும், வெகுமதியாக ரூ 25,000 பணத்தையும் அனுப்பி வைக்கிறேன்’ என்று கூறி அனுப்பிவைத்திருக்கிறார். என்னிடம் சைலேந்திரபாபு சார் மூன்று முறை போனில் பேசி பாராட்டியதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாத சம்பவமாக பார்க்கிறேன்.

பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை

தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சாரும், என்னை நேரில் அலுவலகத்துக்கு வரவழைத்து, `உங்க உயிர் பத்தி கவலைப்படாம ஓடிச் சென்று கார் திருடனை மடக்கிப் பிடிச்சிருக்கீங்க. ரியலி குட் ஜாப்’னு தட்டிக் கொடுத்து பாராட்டினார். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பல போலீஸ் நண்பர்கள் பாராட்டிவருகின்றனர். இதை எங்க மாவட்ட போலீஸாருக்குக் கிடைத்த பெருமையாகவே கருதுகிறேன்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு