Published:Updated:

`நான் உயிரோடு இருக்கும்போதே இன்னொரு கல்யாணம்!'-திருச்சி டிஐஜி-யிடம் கண்ணீர்விட்ட போலீஸ்காரர் மனைவி

திருச்சி எஸ்.பி ஆபீஸ்
திருச்சி எஸ்.பி ஆபீஸ்

`என்னையும் என் இரண்டு குழந்தைகளையும் கடுமையாக அடித்ததோடு, `என் வாழ்க்கைக்குத் தடையா இருக்குற உங்களைச் சும்மா விட மாட்டேன்’ என்று கூறி எங்களைத் தாக்கி, வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டார்.’

`முதல் மனைவி நான் உயிருடன் இருக்கும்போது, இன்னொரு திருமணம் செய்துகொண்ட என் கணவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கோரி காவலர் ஒருவரின் மனைவி திருச்சி டி.ஐ.ஐ-யிடம் புகார் கொடுத்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மகளிர் காவல் நிலையம்
திருச்சி மகளிர் காவல் நிலையம்

திருச்சி, காட்டூர் காவிரி நகரைச் சேர்ந்தவர் அருண் பிரபு. நீலகிரி மாவட்டம் குன்னூரில் போலீஸ்காரராகப் பணியாற்றிவருகிறார். இவர் மனைவி கோகிலா. இவர்களுக்கு பிலோமின் பிரபு, டேனியல் பிரபு என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கோகிலா தனது இரண்டு மகன்களுடன் திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயாவிடம் கணவர்மீது நடவடிக்கை கோரி புகார் மனு அளித்தார். அதன் பின்னர் பத்திரிக்கையாளரிடம் பேசினார்.

அவர் கூறுகையில், ``என் கணவர் அருண் பிரபு, ஏற்கெனவே திருச்சி மாநகர ஆயுதப்படை பிரிவில் பணியாற்றிவந்தார். ஐந்து ஆண்டுகளாகத் திருச்சி மாநகர போலீஸில் பணியாற்றும்போது, திருமணமான பெண் போலீஸ் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டிருக்கிறார். இது குறித்து 2015-ம் ஆண்டு மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தேன். அந்தப் பெண் போலீஸின் கணவரும் புகார் கொடுத்திருக்கிறார்.

திருச்சி
திருச்சி

எங்களுடைய புகார்களை விசாரித்த ஆணையர், என் கணவரை குன்னூருக்கும், பெண் போலீஸை தூத்துக்குடிக்கும் என இரண்டு பேரையும் வெவ்வேறு இடங்களுக்கு டிரான்ஸ்ஃபர் செய்தார். ஆனாலும், அவர்கள் இரண்டு பேரும் ஒன்றாக லீவு போட்டுவிட்டு, திருச்சி சிந்தாமணியிலுள்ள அந்தப் பெண் போலீஸின் வீட்டுக்கு வந்து குடும்பம் நடத்துகின்றனர். இது தொடர்பாகக் கோட்டை மகளிர் காவல்துறையில் புகாரளித்தேன். அவர்களும் இருவரையும் வீட்டில் கையும் களவுமாகப் பிடித்து எச்சரித்து அனுப்பினர்.

ஊட்டி: போலீஸ் ஸ்டேஷனில் டார்ச்சர்? - வீட்டுக்குச் சென்று தற்கொலை செய்துகொண்ட தொழிலாளி

இந்நிலையில் கடந்த 18-ம் தேதி குன்னூரிலிருந்து விடுமுறையில் வந்த என் கணவர், என்னையும் எனது இரண்டு குழந்தைகளையும் கடுமையாக அடித்ததோடு, `என் வாழ்க்கைக்குத் தடையா இருக்குற உங்களைச் சும்மா விட மாட்டேன்’ என்று கூறி எங்களைத் தாக்கி, வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டார்.

டி.ஐ.ஜி ஆனி விஜயா
டி.ஐ.ஜி ஆனி விஜயா

முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது, இரண்டாவது திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். எனவே, என் கணவர்மீதும். அவர் இரண்டாவது திருமணம் செய்த பெண் போலீஸ்மீதும் நடவடிக்கை எடுத்து, என் கணவரை என்னோடு வாழவைக்கும்படி டி.ஜ.ஜி மேடத்திடம் புகார் கொடுத்திருக்கிறேன். அவர் தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு