Published:Updated:

திருச்சி சிறப்பு முகாமில் போலீஸ் அதிரடி சோதனை... சிக்கிய 60 செல்போன்கள் - என்ன நடந்தது?

சிறப்பு முகாம்

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில், 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி சிறப்பு முகாமில் போலீஸ் அதிரடி சோதனை... சிக்கிய 60 செல்போன்கள் - என்ன நடந்தது?

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில், 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
சிறப்பு முகாம்

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில், போலி பாஸ்போட் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினர் சுமார் 150 பேர் அடைக்கப்பட்டிருக்கின்றனர். குற்ற வழக்குகள் முடிவடையும் வரை, இந்த சிறப்பு முகாமில் அவர்கள் இருக்க வேண்டும். வழக்கமான சிறையைப் போல அல்லாமல், இந்த சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருப்பவர்களுக்கு, செல்போன் பயன்படுத்துவது போன்ற பல்வேறு வசதிகள் இருக்கின்றன. இந்த வசதிகளைப் பயன்படுத்தி, சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் சிலர் சட்டவிரோதமான செயல்களைச் செய்து வருவதாகச் சொல்லப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் விவகாரம் மற்றும் போலி பாஸ்போட் விவகாரம் தொடர்பாக அந்தச் சோதனை நடைபெற்றதாக அப்போது பரபரப்பான தகவல்கள் வெளியாகின.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சிறப்பு முகாம்
சிறப்பு முகாம்

இந்த நிலையில், இன்று காலை திருச்சி மாநகர துணை போலீஸ் கமிஷனர்கள் ஸ்ரீதேவி, அன்பு, சுரேஷ்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் சோதனையில் இறங்கினர். சிறப்பு முகாமில் இருப்பவர்கள் போதைப்பொருள்கள் கடத்தல் மற்றும் ஆயுதங்கள் பறிமாற்றம் சம்பந்தமான குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்றிருக்கிறது. இந்தச் சோதனை மற்றும் விசாரணையில் சிறப்பு முகாமில் இருப்பவர்களிடமிருந்து 60 செல்போன்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

இந்த அதிரடி சோதனை குறித்து விஷயமறிந்த போலீஸாரிடம் பேசினோம். ``இது வழக்கமாக நடைபெறும் சோதனைதான். என்.ஐ.ஏ நடத்திய சோதனைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சிறப்பு முகாமில் இருப்பவர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் வகையில்தான் இந்தச் சோதனை நடைபெற்றிருக்கிறது" என்றனர்.