Published:Updated:

ஆந்திரா டு கோவை - கஞ்சா நெட்வொர்க்குக்கு கேங் லீடராகச் செயல்பட்ட போலீஸ் எஸ்.ஐ... சிக்கியது எப்படி?

கைதான போலீஸ் எஸ்.ஐ

கோவை கஞ்சா நெட்வொர்க்குக்கு கேங் லீடராகச் செயல்பட்ட போலீஸ் எஸ்.ஐ கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

ஆந்திரா டு கோவை - கஞ்சா நெட்வொர்க்குக்கு கேங் லீடராகச் செயல்பட்ட போலீஸ் எஸ்.ஐ... சிக்கியது எப்படி?

கோவை கஞ்சா நெட்வொர்க்குக்கு கேங் லீடராகச் செயல்பட்ட போலீஸ் எஸ்.ஐ கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
கைதான போலீஸ் எஸ்.ஐ

கோவை, ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரபாபு. இவர் ஆந்திராவிலிருந்து கஞ்சா வாங்கி பதுக்கிவைத்திருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீஸார் அவரிடம் நடத்திய சோதனையில், 8.2 கிலோ கஞ்சா சிக்கியது.

சந்திரபாபு
சந்திரபாபு

மேலும், சந்திரபாபுவுக்கு உதவியாக இருந்த எட்டு பேர் கைதுசெய்யப்பட்டதுடன், ரூ.42,400 ரொக்கம், பல்சர் 180 சி.சி பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான சந்திரபாபுவுடன் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட, ஈரோடு மாவட்ட சைபர் க்ரைம் போலீஸ் உதவி ஆய்வாளர் மகேந்திரன் என்பவரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

கஞ்சா
கஞ்சா
கோப்புப் படம்

முன்பு கோவை போதைத் தடுப்புப் பிரிவில் பணியாற்றியபோது, மகேந்திரன் சந்திரபாபுவைக் கைதுசெய்திருக்கிறார். பின்னர், சிறையிலிருந்து வெளியில் வந்ததும் மகேந்திரனே சந்திரபாபுவைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்.

மகேந்திரனுக்கு ஆந்திர மாநிலத்தில் கஞ்சா பயிரிடும் நெட்வொர்க் வரை தொடர்பிருக்கிறது. இதையடுத்து, கஞ்சா எங்கு வாங்க வேண்டும், அதை எப்படி கோவைக்குக் கொண்டு வர வேண்டும், எங்கு பதுக்க வேண்டும், யாரிடம் விற்பனை செய்ய வேண்டும்,

கைது
கைது

போலீஸில் சிக்காமல் இருப்பது எப்படி என அனைத்து நுணுக்கங்களையும் சொல்லித்தந்து, மகேந்திரன் சந்திரபாபுவை வழிநடத்தியது விசாரணையில் தெரியவந்தது. மகேந்திரனைக் கைதுசெய்த போலீஸார், அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.