Published:Updated:

கொடநாடு வழக்கு: சசிகலாவிடம் கேட்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட கேள்விகள்... நாளையும் தொடரும் விசாரணை!

சசிகலாவிடம் விசாரணை

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் நாளையும் விசாரணை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

கொடநாடு வழக்கு: சசிகலாவிடம் கேட்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட கேள்விகள்... நாளையும் தொடரும் விசாரணை!

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் நாளையும் விசாரணை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

Published:Updated:
சசிகலாவிடம் விசாரணை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை தொடர்பான விசாரணை கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த வழக்கின் விசாரணை சூடுபிடித்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

சசிகலாவிடம் விசாரணை
சசிகலாவிடம் விசாரணை

இந்த நிலையில், தென்மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான குழு இந்த வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் இன்று விசாரணை நடத்தியது. சென்னை தி.நகரில் உள்ள அவரின் இல்லத்தில் காலை 11 மணிக்குத் தொடங்கிய விசாரணை உணவு இடைவேளை போக சுமார் ஆறு மணிநேரம் நடைபெற்றிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சசிகலாவிடம் கேட்பதற்கு 100-க்கும் மேற்பட்ட கேள்விகளை காவல்துறையினர் தயாரித்து வைத்திருந்தனர். கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கும் சசிகலா பதிலளித்துள்ளார். மேலும், இந்த விசாரணைக்கு சசிகலா முழு ஒத்துழைப்பு வழங்கியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சசிகலா
சசிகலா

இந்த விசாரணை நடைபெறும்போது சசிகலாவின் வழக்கறிஞர் செந்தூர பாண்டியன் உடனிருந்திருக்கிறார். அதோடு, இந்த விசாரணை வீடியோ பதிவும் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலையுடன் முடிவடைந்த விசாரணை, மீண்டும் நாளை காலை 10 மணிக்குத் தொடரும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism