Published:Updated:

புதுச்சேரி: `வீட்டு வாசலிலேயே 12 அடி உயர கஞ்சா செடி!’- தொழிலதிபர் கனவில் இருந்தவர் கைது

கஞ்சா செடி

புதுச்சேரியில் வீட்டு வாசலிலேயே 12 அடி உயரத்தில் கஞ்சா செடியை வளர்த்தவரையும், அதற்குத் துணையாக இருந்த அவரின் நண்பரையும் அதிரடியாகக் கைதுசெய்திருக்கிறது காவல்துறை.

புதுச்சேரி: `வீட்டு வாசலிலேயே 12 அடி உயர கஞ்சா செடி!’- தொழிலதிபர் கனவில் இருந்தவர் கைது

புதுச்சேரியில் வீட்டு வாசலிலேயே 12 அடி உயரத்தில் கஞ்சா செடியை வளர்த்தவரையும், அதற்குத் துணையாக இருந்த அவரின் நண்பரையும் அதிரடியாகக் கைதுசெய்திருக்கிறது காவல்துறை.

Published:Updated:
கஞ்சா செடி

மது வகைகளுக்கு பெயர்பெற்ற புதுச்சேரியில் சமீபகாலமாக கஞ்சா புழக்கம் அதிகரித்துவருகிறது. பேருந்து நிலையம், ரயில்வே நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. கஞ்சா விற்பவர்களை மட்டும் கைதுசெய்யும் காவல்துறை அது எங்கிருந்து வருகிறது, அதன் மொத்த விற்பனையாளர் யார், அதற்கு பின்னால் இருக்கும் அரசியல் சக்திகள் எவை என்பது குறித்து விசாரணை செய்வதாகத் தெரியவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுகிறது.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

கடந்த 2020-ம் ஆண்டு, ஜூலை மாதம் கதிர்காமத்திலிருந்த ஒரு பாழடைந்த வீட்டில் கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுச்சேரியில் கஞ்சா எந்த அளவுக்குப் புழக்கத்தில் இருக்கிறது என்பதற்கு இவைதான் உதாரணம். இந்தநிலையில் காட்டேரிக்குப்பத்தில் நாகராஜ் என்பவர் தனது வீட்டின் வாசலிலேயே 12 அடி உயரத்தில் கஞ்சா செடியை வளர்த்துவருவதாக அந்தப் பகுதி காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் சென்றது. அதனடிப்படையில் அங்கு சென்ற காவல்துறையினர் கஞ்சா செடியை வெட்டியதுடன், நாகராஜ் என்பவரையும் அவருடைய நண்பரான ஞானம் என்பவரையும் கைதுசெய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து நம்மிடம் பேசிய காவல்துறை விசாரணை அதிகாரிகள், ”கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான நாகராஜுக்கு அவரின் நண்பரான ஞானம் என்பவர்தான் கஞ்சா சப்ளை செய்துவந்திருக்கிறார். அப்படி ஒருநாள் கஞ்சாவுடன் வந்த விதையை வீட்டு வாசலில் புதைத்து பராமரித்துவந்திருக்கிறார். இது என்ன செடி என்று கேட்ட அவரது அம்மாவிடம் அழகுச்செடி என்று கூறியிருக்கிறார் நாகராஜ்.

அது நன்றாக வளர ஆரம்பித்ததும், நாம் ஏன் கஞ்சாவை வாங்க வேண்டும். சாகுபடி செய்து விற்றால் விரைவில் பணக்காரர்களாகி, தொழிலதிபராகிவிடலாமே என்று தனது நண்பரான ஞானத்திடம் கூறியிருக்கிறார். அவரும் `அனைத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று ஓ.கே சொன்னாதால் கஞ்சா செடியை 12 அடி உயரத்துக்கு வளர்த்திருக்கிறார் நாகராஜ். ஆனால் அதற்குள் எங்களுக்குத் தகவல் தெரிந்து அவர்களை வளைத்துவிட்டோம்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism