Published:Updated:

`இளம்பெண்ணை மசாஜ் செய்ய அழைத்த காவலர் மீது வழக்கு பதிவு!’ - அதிரடிகாட்டிய புதுச்சேரி போலீஸ்

புதுச்சேரி போலீஸ்
News
புதுச்சேரி போலீஸ்

`` `உன் கணவரை விவாகரத்து செய்ய உதவி செய்கிறேன். பதிலுக்கு எனக்கு நீ என்ன செய்வாய்?’ என்று கேட்டார். அதற்கு `இப்போது பணம் இல்லை சார். அப்புறம் தருகிறேன்’ என்றேன். அப்போது என் கைகளைப் பிடித்துக்கொண்டு `இனிமேல நாம ஃபிரெண்ட்ஸ். என்னோட நட்பா இரு’ என்று கூறினார்.”

`இளம்பெண்ணை மசாஜ் செய்ய அழைத்த காவலர் மீது வழக்கு பதிவு!’ - அதிரடிகாட்டிய புதுச்சேரி போலீஸ்

`` `உன் கணவரை விவாகரத்து செய்ய உதவி செய்கிறேன். பதிலுக்கு எனக்கு நீ என்ன செய்வாய்?’ என்று கேட்டார். அதற்கு `இப்போது பணம் இல்லை சார். அப்புறம் தருகிறேன்’ என்றேன். அப்போது என் கைகளைப் பிடித்துக்கொண்டு `இனிமேல நாம ஃபிரெண்ட்ஸ். என்னோட நட்பா இரு’ என்று கூறினார்.”

Published:Updated:
புதுச்சேரி போலீஸ்
News
புதுச்சேரி போலீஸ்

புதுச்சேரி, லாஸ்பேட்டை காவல் நிலைய கட்டுப்பாட்டுக்குட்பட்ட பகுதியில் தனது கணவர், இரண்டு குழந்தைகளுடன் வசித்துவருகிறார் இளம்பெண் வசந்தி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). அவரின் கணவரின் தாழ்வு மனப்பான்மை காரணமாக தன் மனைவி மீது சந்தேகப்பட்டு, அவரை அடிக்கடி கண்மூடித்தனமாக அடித்துத் துன்புறுத்துவதை வழக்கமாக வைத்திருந்திருந்ததாகக் கூறப்படுகிறது. கணவன் அடிப்பதால் ஏற்படும் வலியைத் தாங்க முடியாத அந்தப் பெண், கடந்த ஜூன் மாதம் வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் செல்கிறார். அங்கு தனது கணவர் தன்னை அன்றாடம் அடித்து கொடுமைப்படுத்துகிறார் என்றும், அவரால் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும் கூறியதுடன் அவரை அழைத்து எச்சரிக்கும்படியும் அழுதிருக்கிறார்.

புதுச்சேரி போலீஸ்
புதுச்சேரி போலீஸ்

ஆனால் அவர்கள் குடும்பநல நீதிமன்றத்துக்குச் செல்லுமாறு கூறிவிட்டதால் செய்வதறியாமல் வீடு திரும்பியிருக்கிறார் வசந்தி. அதன் பிறகு லாஸ்பேட்டை காவல் நிலையத்துக்கு அவர் புகாரளிக்கச் சென்றபோது அங்கு பணியிலிருந்த தலைமைக் காவலர் சண்முகம், அந்தப் பெண்ணை அமர வைத்து, அனைத்துக் காவலர்களையும் மதிய சாப்பாட்டுக்காகப் போகும்படி உத்தரவிட்டதுடன், வசந்தியிடம் ஆயில் மசாஜ் செய்யத் தெரியுமா என்று கேட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்து ஆகஸ்ட் 12-ம் தேதி நமது விகடன் இணையதள பக்கத்தில் விரிவாகவும் எக்ஸ்ளூசிவாகவும் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்தநிலையில், பாதிக்கப்பட்ட அந்தப் பெண் வசந்தி லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் மீது புகார் அளித்திருக்கிறார்.

அந்தப் புகாரில், ``குடும்பத் தகராறு காரணமாக ஆகஸ்ட் 9-ம் தேதி அவசர உதவி 100-க்கு போன் செய்தேன். அதைத் தொடர்ந்து இரண்டு காவலர்கள் என் வீட்டுக்கு வந்து எங்கள் இருவரையும் லாஸ்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்தார்கள். அங்கே எங்கள் இருவரிடமும் தனித்தனியாக விசாரித்தார்கள். பின்னர் தலைமைக் காவலர் சண்முகம் `குடும்பத்தில் இதெல்லாம் சகஜம்’ என்று என்னிடம் கூறியதுடன், இனிமேல் நான் யாரிடமும் போனில் பேசக் கூடாது என்று எழுதி வாங்கிக்கொண்டார். அதன் பிறகு எனக்கு தனியே அறிவுரை கூறுகிறேன் என்று என் கணவரையும், குடும்பத்தினரையும் வெளியே போகச் சொல்லிவிட்டு எனக்கு இரண்டு வழக்கறிஞர் எண்களுடன் அவருடைய செல்போன் எண்ணையும் கொடுத்தார்.

புதுச்சேரி தலைமைக் காவலர் சண்முகம்
புதுச்சேரி தலைமைக் காவலர் சண்முகம்

அத்துடன் `ஏதாவது பிரச்னை என்றால் என்னைத் தொடர்புகொள்’ என்றும் கூறினார். அதன் பிறகு வீடு திரும்பியவுடன் என் கணவர் என்னை அடித்ததால் வேறு வழி தெரியாமல் மீண்டும் காவல் நிலையத்துக்குச் சென்றேன். அப்போது தலைமைக் காவலர் சண்முகம் `நீ இவ்ளோ கலரா அழகா இருக்கே... நீ ஏன் இவனை திருமணம் செய்துகொண்டாய்?’ என்று கேட்டார். பிறகு `உனக்கு ரெண்டு குழந்தைகள் இருக்குறதுபோலவே இல்லை. ரொம்ப அழகா இருக்கே...’ என்றார். `உனக்கு நான் வேலை வாங்கித் தருகிறேன். என்ன படித்திருக்கிறாய்?’ என்று கேட்டார். பின்னர் `உன் கணவரை விவாகரத்து செய்ய நான் உதவி செய்கிறேன்.

பதிலுக்கு நீ என்ன செய்வாய்?’ என்று கேட்டார். அப்போது `என்னிடம் இப்போது பணம் இல்லை சார். அப்புறம் தருகிறேன்’ என்று அவரிடம் கூறினேன். உடனே அங்கிருந்த காவலர்களை உணவு இடைவேளைக்குப் போகும்படி கூறிவிட்டு, திடீரென எனது கைகளைப் பிடித்துக்கொண்டு `இனிமேல நாம ஃபிரெண்ட்ஸ். எனக்குப் பணம் தேவையில்லை. என்னுடன் நட்பாக இரு’ என்று கூறினார். எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல், `சரிங்க சார்...’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். அப்போது `உனக்கு ஆயில் மசாஜ் தெரியுமா?’ என்று கேட்டார். நான், `அதெல்லாம் எனக்குத் தெரியாது சார்’ என்றேன். அதற்கு, `ஆயில் போட்டுத் தடவத் தெரியாதா...’ என்றும், `நானே உனக்கு சொல்லித் தருகிறேன்’ என்றும் கூறினார்.

இளம்பெண்
இளம்பெண்
Representational image

மேலும், `உனக்கு நான் இருக்கிறேன்’ என்றும், `எதுவென்றாலும் நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்றும் கூறினார். அதன் பிறகுதான் இறைவி அமைப்பிடம் எனக்கு நடந்தவற்றைக் கூறினேன். நான் கூறியதை அவர்கள் நம்பாததால், சண்முகத்தின் உரையாடலைப் பதிவு செய்வதற்காக எனது செல்போனில் ரெக்கார்டர் போட்டுக் கொடுத்தார்கள். அதன் பிறகு சண்முகத்துக்கு போன் செய்த நான் `என் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க முடியாதா?’ என்று கேட்டேன். அப்போது `நான் சொன்ன வக்கீலைப் போய் பார்த்தீயா?’ என்று கேட்டார்.

இல்லை என்று நான் சொன்னதும், `இன்று மாலை 5 மணிக்கு புது பஸ் ஸ்டாண்ட்டுக்கு வா. நானே அழைத்துச் செல்கிறேன்’ என்றார். அப்போது `ஆயில் மசாஜ் என்று சொன்னீர்களே... அது எங்கே?’ என்று கேட்டேன். அதற்கு அவர், `அதான்மா வக்கீல் ஆபீஸுக்கு வாம்மா... அங்க பார்த்துக்கொள்ளலாம்’ என்றார். அப்போது `வக்கீலுக்குக் கொடுக்க என்னிடம் பணம் இல்லை சார்...’ என்று நான் கூறியதற்கு, `வக்கீலையும் சேர்த்து கவனிச்சுடுறியா’ என்று கேட்டார். பிறகு, `ஆயில் நீங்க வாங்கிட்டு வர்றீங்களா அல்லது நான் வாங்கி வரட்டுமா...’ என்று நான் கேட்டதற்கு, `நான் பாத்துக்கறேன்மா... நீ வாம்மா, லேட் பண்ணாமல் வந்துடும்மா’ என்று சொன்னார்.

அதையடுத்து இறைவி அமைப்பினர் அதன்மீது புகார் கொடுத்தனர். அதனால் கோபமான காவலர் சண்முகம், என் அம்மாவிடம் சென்று நான் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கவில்லையென்றால் என்னை விபசார வழக்கில் கைதுசெய்யப்போவதாக மிரட்டியிருக்கிறார். மேலும் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் ஏட்டு சண்முகத்தால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது. என்னை ஆபாசமாகப் பேசியதுடன், என் நடத்தையைக் கேவலமாக விமர்சித்த தலைமைக் காவலர் சண்முகம்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார். வசந்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் தலைமைக் காவலர் சண்முகம் மீது இந்திய தண்டனைச் சட்டம் 1860 பிரிவுகள் 354-A, 509 பிரிவுகளின் கீழ் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.