Published:Updated:

உதய்பூர் கொலை: ``பாஜக-வினர் குற்றவாளிகளுக்கு உதவி செய்திருக்கின்றனர்!" - அசோக் கெலாட் குற்றச்சாட்டு

அசோக் கெலாட்

`பா.ஜ.க-வினர் வீட்டின் உரிமையாளரை அழைத்து, `உன் வீட்டில் தங்கியிருப்பவர்கள் பா.ஜ.க-வினர். இனி அவர்களை வாடகைக் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது' என மிரட்டியது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.' - அசோக் கெலாட்

உதய்பூர் கொலை: ``பாஜக-வினர் குற்றவாளிகளுக்கு உதவி செய்திருக்கின்றனர்!" - அசோக் கெலாட் குற்றச்சாட்டு

`பா.ஜ.க-வினர் வீட்டின் உரிமையாளரை அழைத்து, `உன் வீட்டில் தங்கியிருப்பவர்கள் பா.ஜ.க-வினர். இனி அவர்களை வாடகைக் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது' என மிரட்டியது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.' - அசோக் கெலாட்

Published:Updated:
அசோக் கெலாட்

முகமது நபிகள் குறித்த பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த கன்ஹையா லால் என்ற டெய்லர் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார். அந்தக் கொலைக்கு ரியாஸ் அட்டாரி, கௌஸ் முகம்மது ஆகியோர் பொறுப்பேற்றனர். மேலும் குற்றவாளிகள் இருவரும், இஸ்லாத்தை அவமதித்ததற்காகப் பழிவாங்கினோம்" எனக் கூறினர். இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ரியாஸ் அட்டாரிக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. மேலும், முக்கிய குற்றவாளியான ரியாஸ் அட்டாரி, பா.ஜ.க தலைவர் குலாப் சந்த் கட்டாரியா உள்ளிட்ட சில பா.ஜ.க தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகின.

இந்த நிலையில், நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ``உதய்பூர் கன்ஹையா லால் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பா.ஜ.க-வுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது அனைவருக்கும் தெரியும். மேலும், குற்றம்சாட்டப்பட்டவர் மற்றொரு முஸ்லிம் நபருக்குச் சொந்தமான வாடகை வீட்டில் வசித்தது தெரியவந்துள்ளது. வீட்டின் உரிமையாளர் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வீட்டுக்கான வாடகையைச் செலுத்தவில்லை என்று காவல்துறையை அணுகியுள்ளார்.

உதய்பூர் படுகொலை
உதய்பூர் படுகொலை

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை விசாரிப்பதற்கு முன்பே, பா.ஜ.க-வினர் வீட்டின் உரிமையாளரை அழைத்து, `உன் வீட்டில் தங்கியிருப்பவர்கள் பா.ஜ.க-வினர். இனி அவர்களை வாடகைக் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது' என மிரட்டியது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. எனவே, பா.ஜ.க தரப்பு இது குறித்துச் சரியான விளக்கமளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
பா.ஜ.க
பா.ஜ.க

ஆனால் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முன்வைத்த குற்றச்சாட்டை ராஜஸ்தான் மாநில பா.ஜ.க தலைமை மறுத்துள்ளது. இந்தக் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ஜூன் 29-ம் தேதி விசாரணையை தொடங்கியது. இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.