Published:Updated:

ராமஜெயம் கொலை வழக்கு: விசாரிக்கப்பட்ட டெல்டா ரெளடிகள்; சேலத்தில் என்ன தொடர்பு..?!

ராமஜெயம் கொலை வழக்கு

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழுவின் 2-ம் கட்ட ரகசிய அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

ராமஜெயம் கொலை வழக்கு: விசாரிக்கப்பட்ட டெல்டா ரெளடிகள்; சேலத்தில் என்ன தொடர்பு..?!

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழுவின் 2-ம் கட்ட ரகசிய அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

Published:Updated:
ராமஜெயம் கொலை வழக்கு

தமிழ்நாடு காவல்துறை முதல் சி.பி.ஐ வரை சவாலாக அமைந்த வழக்குகளில் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கும் ஒன்று. பத்தாண்டுகளாகியும் ராமஜெயம் கொலையில் குற்றவாளிகள் யாரென்று கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையே இருந்துவருகிறது.

ராமஜெயம் மீது அடுத்தடுத்து கட்டப்பஞ்சாயத்து, நில மோசடி எனப் புகார்கள் குவிய ஆரம்பிக்க, 2012, மார்ச் 29-ம் தேதி காலை தில்லைநகரிலுள்ள தனது வீட்டிலிருந்து வாக்கிங் சென்றபோது கடத்தப்பட்டு, மர்மமான முறையில் கொல செய்யப்படுகிறார்.

ராமஜெயம் கொலை வழக்கு: விசாரிக்கப்பட்ட டெல்டா  ரெளடிகள்; சேலத்தில் என்ன தொடர்பு..?!

இது குறித்து காவல்துறை பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தும், குற்றவாளிகளை அவர்களால் நெருங்கக்கூட முடியவில்லை. பின்னர் ராமஜெயம் கொலையை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க ஆரம்பித்தது. இதற்காக டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாமல் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ரெளடிகளைப் பட்டியலிட்டு விசாரிக்க ஆரம்பித்தனர்.

ராமஜெயம் கொலை செய்யப்பட்ட முறை இலங்கையில் நடக்கும் கொலையோடு ஒத்துப்போவதும், ஒரு கட்டத்தில் இலங்கையைச் சேர்ந்த கூலிப்படைகள் கொலை செய்துவிட்டுப் போயிருக்கலாம் என்கிற கோணத்திலும் விசாரித்துவந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும் ராமஜெயம் கொலை போன்று தமிழ்நாட்டில் வேறு கொலைகள் எங்கும் நிகழ்ந்திருக்கின்றனவா என்று விசாரித்தபோது, சேலத்தில் இதே போன்று கொலை நிகழ்ந்திருப்பது தெரியவந்தது.

சேலத்தில் 2005-ம் ஆண்டு அம்மாபேட்டை காவல் நிலைய எல்லையில், சக்தி கைலாஸ் கல்லூரிக்குப் பின்புறம் உள்ள ஸ்ரீலாவதி ஏரியில் 50 வயதுடைய நபரின் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில் இறந்துகிடந்த நபரின் தலையில் பலத்த காயமும், கைகள் முன் பக்கம் எக்ஸ் போன்று இரும்புக்கம்பியால் கட்டியும், பிளாஸ்டர் சுற்றப்பட்டும், கால்கள் மடக்கப்பட்டு கம்பி மற்றும் பிளாஸ்டரால் சுற்றப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

ராமஜெயம்
ராமஜெயம்

இது குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரித்தபோது, ஏரியில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தவர் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பதும், அவர் சேலத்தில் வாட்ச்மேனாக இருந்துதிருக்கிறார் என்பதும் தெரியவந்தது. அவருடைய மனைவிக்கும், தேங்காய்க் கடை ராமசாமி என்பவருக்கும் பழக்கம் இருந்தது ராஜேந்திரனுக்குத் தெரியவர, அவரின் மனைவியைக் கண்டித்திருக்கிறார். இதனால் அவரின் மனைவி ராமசாமி மூலம் திருவாரூரிலிருந்து கூலிப்படைச் சேர்ந்த ரமேஷ், சுரேஷ் மற்றும் இலங்கையிலிருந்து வந்து சேலத்தில் தங்கியிருந்த ரெளடி சிலோன் குமார் ஆகியோரைவைத்து ராஜேந்திரனைக் கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தக் கொலையில் தொடர்புடைய சுரேஷ், ரமேஷ் மீது திருவாரூர் காவல் நிலையத்தில் பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் இருந்துவருவதும் தெரியவந்து, அப்போதைய சி.பி.சி.ஐ.டி-யின் , டி.ஐ.ஜி- யாக இருந்த ஸ்ரீதர், சம்பந்தப்பட்ட சுரேஷை விசாரிக்க தனிப்படை அமைத்தார். அதில் சுரேஷை விசாரித்தபோது, `ராமஜெயம் கொலை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அதை நாங்க பண்ணலை. ஆனா கொலை செய்யப்பட்டிருக்கும் முறை, எங்களோட சிறையிலிருந்து தொழில் கத்துக்கிட்டவனாகத்தான் இருக்க முடியும்’ என்று கூறினாராம். அதன் பிறகு சி.பி.சி.ஐ.டி கிடைத்த தகவலை வைத்து அடுத்தகட்ட நகர்வுக்குச் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. சுரேஷ், ரமேஷ் சிறையில் இருந்தபோது கூட இருந்த ரெளடிகள், ராமஜெயம் கொலையின்போது இவர்கள் இரண்டு பேரும் சிறையில் இருந்தார்களா என்பது குறித்து எதுவும் விசாரிக்கவில்லை என்கிறார்கள் இந்த வழக்கு குறித்து விவரம் அறிந்தவர்கள்.

ராமஜெயம் கொலை வழக்கு
ராமஜெயம் கொலை வழக்கு

மேலும் ராமஜெயம் கொலைசெய்யப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருவாரூர் கொரடாச்சேரியைச் சேர்ந்த ஒரு நபரைப் பணப் பிரச்னையில் தனது அலுவலகத்தில் ராமஜெயம் தாக்கியதும், சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்குத் தெரியவந்து தேடிவந்தனர். அதில் சம்பந்தப்பட்ட நபர் சேலத்தில் ஒரு கம்பெனியை நடத்திவந்திருக்கிறார். அவரை போலீஸார் கண்காணிக்கிறார்கள் என்றதும், அந்த நபர் சேலத்திலிருந்து எஸ்கேப் ஆகியிருக்கிறாராம்.

இது குறித்து வழக்கில் தொடர்புடைய சில தனிப்பிரிவு அதிகாரிகளிடம் விசாரிக்கையில், “ராமஜெயம் வழக்குக்கும் சேலத்துக்கும் ரொம்பவே தொடர்பு இருக்கு. மேலும் 2005-ல் சேலத்தில் ராமஜெயம் கொலை போன்று நடந்த வழக்கை கையில் எடுத்து விசாரித்துவருகிறோம். நிச்சயமாக இதில் மிகப்பெரிய லீடு கிடைக்கும் என நம்புகிறோம். மேலும் பொதுமக்களுக்கு இது குறித்துத் தகவல் தெரிவிப்போருக்கு 50 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்திருக்கிறோம். இதனால் பல்வேறு தகவல்களும் வந்துகொண்டிருக்கின்றன” என்கிறார்கள்.

இதற்கிடையே, ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழுவின் 2-ம் கட்ட ரகசிய அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய மேலும் நான்கு வாரம் அவகாசம் வழங்கி, விசாரணை ஜூலை 11-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism