Published:Updated:

ராமஜெயம் கொலை வழக்கு: நீதிமன்ற உத்தரவு... சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் யார் யார்?!

ராமஜெயம் கொலை வழக்கு

திருச்சி - கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது ராமஜெயம் உடல். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக சிபிசிஐடி போலீசார், சிபிஐ விசாரணை நடத்தி வந்தனர்.

ராமஜெயம் கொலை வழக்கு: நீதிமன்ற உத்தரவு... சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் யார் யார்?!

திருச்சி - கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது ராமஜெயம் உடல். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக சிபிசிஐடி போலீசார், சிபிஐ விசாரணை நடத்தி வந்தனர்.

Published:Updated:
ராமஜெயம் கொலை வழக்கு

தமிழக அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் வருடம் மார்ச் 29-ம் தேதி திருச்சியில் நடைப்பயிற்சி சென்ற போது படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடல் திருச்சி - கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக முதலில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

ராமஜெயம்
ராமஜெயம்

இந்த வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்கக் கோரி ராமஜெயம் மனைவி லதா, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். கொலையாளிகள் பிடிபடாத நிலையில், ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட மதுரை உயர் நீதிமன்றம், விசாரணை அறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிபிஐ விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாததால், வழக்கை மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் என ராமஜெயத்தின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ராமஜெயம் பிறந்தநாள் போஸ்டர்
ராமஜெயம் பிறந்தநாள் போஸ்டர்

இது தொடர்பாக டிஜிபிக்கு அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி வி. பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் சீலிடப்பட்ட கவரில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, சிபிஐ விசாரணை அதிகாரியோடு சேர்த்துச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதை ஏற்ற நீதிபதி, சிபிஐக்கு உதவத் தமிழகக் காவல்துறை அதிகாரிகள் பட்டியல் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். தமிழக அரசு சார்பில் ஆஜரான மாநிலத் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தமிழகக் காவல்துறை விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்று தெரிவித்திருந்தது.

ராமஜெயம்
ராமஜெயம்

இந்த வழக்கில் இன்று உத்தரவிட்ட நீதிபதி பாரதிதாசன், கடந்த 10 ஆண்டுகளாக சிபிசிஐடி, சிபிஐ காவல்துறைகள் விசாரணை நடத்தியும், கொலைக்கான நோக்கம் கண்டறியப்படவில்லை என்பதால், ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் டி.எஸ்.பி. மதன், சென்னை சிபிஐ-யை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய குழு விசாரிக்க வேண்டும்; அடுத்தகட்ட விசாரணையைச் சிறப்புக் குழு புலனாய்வு தொடர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார்
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார்

சிபிசிஐடி உயர் அதிகாரி சகீல் அக்தர் இந்த விசாரணையைக் கண்காணிக்க வேண்டும் எனவும், அதை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் எனவும் உத்தரவிட்டதுடன், 15 நாள்களுக்கு ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism