Published:Updated:

`அலெர்ட்டான சிபிசிஐடி; உதவிய முக்கியப் புள்ளி!' - நீதிமன்றத்தில் ஜெயக்குமார் சரணடைந்த பின்னணி #TNPSC

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டின் ஆணிவேராகக் கருதப்படும் ஜெயக்குமார், இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை போலீஸ் காவலில் எடுக்க சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸாரால் தேடப்பட்டுவந்த ஜெயக்குமார், இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரைச் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் ஜெயக்குமாரைத் தேடி சிபிசிஐடி போலீஸார் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்குச் சென்ற நிலையில், அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.

சித்தாண்டி
சித்தாண்டி
`யார் இந்த எஸ்.ஐ சித்தாண்டி?' - டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் அதிர்ச்சி கொடுத்த 5 நிபந்தனைகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் இதுவரை 32 பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். அதில் சிவகங்கை மாவட்டம், பெரியகண்ணனூர் கிராமத்தைச் சேர்ந்த சென்னை ஆயுதப்படைக் காவலர் சித்தாண்டியும் அவரின் கூட்டாளிகளுமான காவலர்கள் பூபதி, முத்துக்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் நாராயணன் என்கிற சக்தி ஆகியோரை போலீஸார் பிடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் அளித்த தகவலின்படி, ஜெயக்குமார் மூலமாகத் தேர்வு முறைகேடு நடந்தது தெரியவந்துள்ளது. தற்போது ஜெயக்குமார், போலீஸாரிடம் சிக்காமல் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். அதனால் அவரைப் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் முடிவுசெய்து, அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

இதுகுறித்து சிபிசிஐடி போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``சென்னை ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சித்தாண்டியிடம் விசாரித்தபோது, அவர் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வில் 7 தேர்வர்களிடம் 82,50,000 ரூபாயைப் பெற்று, காவலர் முத்துக்குமாரிடம் கொடுத்துள்ளார். அந்தப் பணத்தை காவலர் முத்துக்குமார், விழுப்புரம் மாவட்டம் அரியூர் கிராம நிர்வாக அலுவலர் நாராயணன் என்கிற சக்தியிடம் கொடுத்துள்ளார். சக்திமூலம் அந்தப் பணம் ஜெயக்குமாருக்கு சென்று, தேர்வில் முறைகேடு செய்து 7 பேரும் தேர்ச்சிபெற்று அரசுப்பணியில் சேர்ந்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்த கார்த்திக், தன்னுடைய உறவினர் பாஸ்கர் மூலம் ஜெயக்குமாரிடம் 9,00,000 ரூபாய் கொடுத்து 268.5 மதிப்பெண்கள் பெற்று 36-வது இடத்தில் தேர்ச்சிபெற்று, சென்னை எழிலகத்தில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் பணியாற்றிவருகிறார்.
டிஎன்பிஎஸ்சி அலுவலகம்
டிஎன்பிஎஸ்சி அலுவலகம்
`முகப்பேர் ஜெயக்குமாரை முழுதாக நம்பினால் அரசு வேலை!' 
- சிபிசிஐடி-க்கு அதிர்ச்சி கொடுத்த சித்தாண்டி

இதைத் தொடர்ந்து, 2019ல் நடந்த குரூப் 4 தேர்வில் 16 தேர்வர்களிடமிருந்து தலா 7,50,000 ரூபாயைப் பெற்றுள்ளார் சித்தாண்டி. பின்ன,ர் அந்தப் பணத்தை ஜெயக்குமாரிடம் கொடுத்து 16 பேரில் 5 பேரை முறைகேடு செய்து தேர்ச்சிபெற வைத்துள்ளார். சித்தாண்டியின் கூட்டாளியான சென்னை ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றும் பூபதி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர். இவர், குரூப் 2 தேர்வுக்காக 5 பேரிடம் 55,00,000 ரூபாய் பெற்று கிராம நிர்வாக அலுவலர் நாராயணன் என்கிற சக்தியிடம் கொடுத்து முறைகேடு செய்து, 5 பேரையும் தேர்ச்சிபெற வைத்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்த கார்த்திக், தன்னுடைய உறவினர் பாஸ்கர் மூலம் ஜெயக்குமாரிடம் 9,00,000 ரூபாய் கொடுத்து 268.5 மதிப்பெண்கள் பெற்று, 36-வது இடத்தில் தேர்ச்சிபெற்று, சென்னை எழிலகத்தில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் பணியாற்றிவருகிறார். சித்தாண்டி, பூபதி, கார்த்திக் ஆகிய 3 பேரை நேற்று கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளோம். ஏற்கெனவே, இந்த வழக்கில் கைதான டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தனை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரித்துவருகிறோம். அவர், ராமேஸ்வரம், சிவகங்கையிலிருந்து விடைத்தாள்களைக் கொண்டுவந்தபோது முறைகேடு செய்ததை விளக்கமாகக் கூறியுள்ளார்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்
ஜெரோம்

இந்த முறைகேட்டில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, எவ்வளவு தொகை கொடுத்தார்கள் என்பன போன்ற கேள்விகள் ஓம்காந்தனிடம் கேட்கப்பட்டுள்ளன. அதற்கு அவர் அளிக்கும் பதிலின் அடிப்படையில், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்தச் சூழ்நிலையில்தான், முக்கிய குற்றவாளி ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். அவரிடம் விசாரித்தால் இந்த வழக்கில் கூடுதல் தகவல்கள் கிடைக்கும். அதோடு, தேர்வு முறைகேட்டில் ஜெயக்குமாருக்கு உதவிய டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் யார் என்ற தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

நீதிமன்றத்தில் சரண் அடையத் திட்டமிட்டிருந்த காவலர் சித்தாண்டியைக் கடைசி நேரத்தில் சிபிசிஐடி போலீஸார் மடக்கிப்பிடித்துவிட்டனர். தலைமறைவாக இருந்த ஜெயக்குமாரும் நீதிமன்றத்தில் சரண் அடையப்போவதாக சிபிசிஐடி போலீஸ் உயரதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. ஆனால், அவர் எந்த நீதிமன்றத்தில் சரண் அடையப் போகிறார் என்பது போலீஸாருக்குத் தெரியவில்லை. அதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் கண்காணித்துவந்த நேரத்தில்தான் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு அவர் வந்து சரண் அடைந்துள்ளார்.

`எனக்கு குழந்தை பிறந்து 14 நாள்கள்தான் ஆகின்றன!'- தலைமைச் செயலக ஊழியர் முன்ஜாமீன் மனு #TNPSC
ஜெயக்குமார் வீடு
ஜெயக்குமார் வீடு

கடந்த சில தினங்களுக்குமுன் ஜெயக்குமாரின் வீட்டுக்குச் சென்ற சிபிசிஐடி போலீஸார், பென்டிரைவ் உள்ளிட்ட சில ஆவணங்களைப் பறிமுதல் செய்திருந்தனர். அதோடு, ஜெயக்குமார் மற்றும் அவரின் மனைவியின் வங்கிக் கணக்குகளையும் முடக்கினர். போலீஸாரின் நெருக்கடி காரணமாக ஜெயக்குமார், வடமாநிலத்திலிருந்து கார் மூலம் சென்னை வந்தார்.

வழக்கறிஞர்களைச் சந்தித்த அவர், நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். போலீஸார் தீவிரமாகக் கண்காணித்திருந்தால் ஜெயக்குமாரைப் பிடித்திருக்கலாம். ஆனால், போலீஸாரிடமி ருந்து ஜெயக்குமாரைக் காப்பாற்றியதில் முக்கியப் பிரமுகர்கள் சிலருக்குப் பங்கு உள்ளது.

வடமாநிலத்திலும் சென்னையிலும் அரசியல் கட்சியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவரைச் சந்தித்தபிறகே, ஜெயக்குமார் சரண் அடையும் முடிவை எடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதனால்தான், சிபிசிஐடி போலீஸாரால் ஜெயக்குமாரைப் பிடிக்க முடியவில்லை என்கின்றனர் விவரம் தெரிந்த சிபிசிஐடி போலீஸார்.

பின் செல்ல