Published:Updated:

திண்டிவனம்: பட்டா தொடர்பான ஆவணம் வழங்க 5,000 லஞ்சம்; பதிவரை எழுத்தரை கைதுசெய்த லஞ்ச ஒழிப்புத்துறை!

வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்

திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பதிவரை எழுத்தர், லஞ்சம் பெற்றதினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள தீவனூர் அடுத்த ஆசூரைச் சேர்ந்தவர் யுவராஜ். இவர், தன் தாயின் பெயரில் வழங்கப்பட்டிருக்கும் இலவச வீட்டுமனை பட்டா தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காக திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் சென்று, பதிவரை எழுத்தர் சிவஞானவேலை அணுகியுள்ளார். அப்போது இலவச வீட்டுமனை பட்டா தொடர்பான ஆவணங்களை வழங்க வேண்டும் என்றால், ரூ.5,000 லஞ்சம் தரவேண்டும் என கேட்டுள்ளார் அந்த அதிகாரி.

Vigilance - villupuram
Vigilance - villupuram

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லஞ்சம் தர விரும்பாத யுவராஜ், விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், யுவராஜிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தனுப்பி உள்ளனர். அதன்படி, பதிவரை எழுத்தர் சிவஞானவேலை சந்தித்த யுவராஜ், அவர் கேட்ட லஞ்ச பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார். அதை சிவஞானவேல் பெற்ற போது, அங்கு மறைந்திருந்த ஏ.டி.எஸ்.பி தேவநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், அவரை கையும் களவுமாக கைதுசெய்துள்ளனர். இந்தச் சம்பவம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism