Published:Updated:

திருச்சி: தலை துண்டிக்கப்பட்ட ரெளடி... கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் `விரைவில்' - அச்சத்தில் மக்கள்

இறுதியில் `விரைவில்...’ என்கிற ஒரு வார்த்தை இடம்பெற்றிருந்தது. இந்த வார்த்தை மீண்டும் பழிக்குப் பழி கொலை நடக்கப்போகிறது என்பதை குறிக்கிறதா என்ற அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள் மக்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மக்கள் கூட்டமாகக் கூடும் பொன்மலைப்பட்டி பகுதியில் சின்ராசு என்கிற ரெளடி முன்விரோதம் காரணமாகக் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரின் மரணத்துக்காக ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் ’விரைவில்...’ என்கிற வார்த்தை சேர்த்து போஸ்டர் அடித்திருக்கிறார்கள் அவரின் நண்பர்கள். இதனால் திருச்சியில் மீண்டும் ஒரு பழிக்குப் பழி கொலை நடக்குமோ என்கிற அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள் மக்கள்.

சின்ராஜ் கொலை
சின்ராஜ் கொலை

நான்கு நாள்களுக்கு முன்பு ராமகிருஷ்ணா மேம்பாலத்தின் கீழே உள்ள கழிவறையில் இயற்கை உபாதை கழிப்பதற்காகச் சென்ற நிஷாந்த் என்பவரை ஒன்பது பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியது.

அந்தக் கொலைக்கு கஞ்சா விற்பதில் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக, ஏற்கெனவே முன்விரோதம் இருந்துவந்த நிலையில் நிஷாந்தின் நண்பர்கள் கும்பல் வாழைக்காய் விஜய் என்பவரை வெட்டிப் படுகொலை செய்கிறது. பதிலுக்கு விஜயின் தம்பி, அவரின் நண்பர்கள் ஒன்று சேர்ந்து நிஷாந்தைக் கொலை செய்தனர். இந்தச் சம்பவம் அடங்குவதற்குள் மற்றொரு கொலை நடந்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கண்ணீர் அஞ்சலி போஸ்டர்
கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சின்ராஜ். இவர் பொன்மலைப்பட்டி கடைத்தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி வெட்டினர். பின்னர் அந்தக் கும்பல் தலையைத் துண்டித்து படுகொலை செய்தது. சம்பவ இடத்துக்கு வந்த பொன்மலை போலீஸார் உடலைக் கைப்பற்றி சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`இந்த ஏரியாவுல யார் கஞ்சா விற்பது.. யார் பெரிய ரெளடி?’ - திருச்சியை பதற வைத்த ரெளடி கொலை

இந்தநிலையில், சின்ராஜ் இறப்புக்குக் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அந்தப் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டிருந்தது. அதில் `மரணமடைந்த சின்ராஜ் அவர்களின் இறுதி ஊர்வலம் 4 மணி அளவில் அவரின், இல்லத்திலிருந்து புறப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று எழுதப்பட்டிருந்தது.

கொலை
கொலை

இறுதியில் `விரைவில்...’ என்கிற ஒரு வார்த்தை இடம் பெற்றிருந்தது. இந்த வார்த்தையால், மீண்டும் பழிக்குப் பழி கொலை நடக்கப்போகிறது என்று அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள் மக்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு