Published:Updated:

காஞ்சிபுரம் துப்பாக்கிச் சூடு வழக்கில் திருப்பம்! - தேடப்பட்ட ரவுடி செல்வம் தேனியில் சரண்

முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள ரவுடி செல்வத்தை போலீஸார் தேடி வந்ததாக கூறப்பட்டது!

ரவுடி செல்வம்
ரவுடி செல்வம்

காஞ்சிபுரம் அருகே பாலிடெக்னிக் மாணவர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக அறியப்பட்டு, போலீஸாரால் தேடப்பட்டுவந்த ரவுடி செல்வம், தேனி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

Theni Court
Theni Court

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அருகே உள்ளது வேங்கடமங்கலம். இப்பகுதியில் வசித்துவரும் முகேஷ் என்பவர், தன் நண்பரான விஜய் என்கிற விஜயகுமார் வீட்டுக்கு கடந்த 5-ம் தேதி காலை சென்றுள்ளார். விஜயகுமாரின் வீட்டின் ஒரு அறையில் இருவரும் தனியாக பேசிக்கொண்டிருந்தபோது விஜயகுமார், துப்பாக்கியால் முகேஷின் நெற்றியில் சுட்டார்.

உடனடியாக முகேஷ் மீட்கப்பட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Theni Court
Theni Court
பிறந்தநாள் கேக் டு கள்ளத்துப்பாக்கி விற்பனை! - மீண்டும் மீண்டும் கைதாகும் ரவுடி பினு

கடந்த 6-ம் தேதி விஜயகுமார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை தற்போது போலீஸார் காவலில் எடுத்து விசாரித்துவருகின்றனர். இந்த நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள ரவுடி செல்வத்தை போலீஸார் தேடி வந்ததாகக் கூறப்பட்டது. ரவுடி செல்வம் கோஷ்டியில் மாணவர் முகேஷை சேரச் சொல்லியபோது முகேஷ் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் முகேஷை துப்பாக்கியால் விஜயகுமார் சுட்டுக் கொன்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Rowdy Selvam
Rowdy Selvam

இதற்கிடையில், தேனி நீதித்துறை நடுவர் நீதிபதி பன்னீர்செல்வம் முன்னர் செல்வம் ஆஜரானார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, செல்வம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி மாவட்டச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.