Published:Updated:

கே.சி.வீரமணி: `ரூ.34 லட்சம் பணம்; 4.9 கிலோ தங்கம்; 9 சொகுசு கார்கள் பறிமுதல்!’ - லஞ்ச ஒழிப்புத்துறை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள்
பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள்

கே.சி.வீரமணிக்குச் சொந்தமான 35 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 34 லட்சம் ரூபாய் பணம், 4.9 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, இன்று காலை முதல் வீரமணிக்குச் சொந்தமான 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டுவருகிறார்கள். இந்தச் சோதனை குறித்து அதிகாரப்பூர்வமாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்களை வெளியிட்டிருக்கிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்ட தகவல்
லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்ட தகவல்

அதில், ``கே.சி.வீரமணி அவரின் பெயரிலும், அவருடைய குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும், தான் பங்குதாரராக இருக்கும் நிறுவனங்கள் பெயரிலும் அமைச்சராக இருந்த பணிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துகளைச் சேர்த்திருக்கிறார். இது தொடர்பாக, வீரமணி, அவரின் உறவினர்கள், முன்னாள் அரசியல் நேர்முக உதவியாளர், நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடங்களில் சோதனை செய்யப்பட்டுள்ளன.

பெங்களூரில் இரண்டு இடங்கள், சென்னையில் ஆறு இடங்கள் என மொத்தம் 35 இடங்களில் நடத்தப்பட்டிருக்கும் சோதனையில் 34,01,060 ரூபாய் பணம், ரூ.1,80,000 மதிப்பிலான அந்நியச் செலாவணி டாலர், ரோல்ஸ் ராய்ஸ் உட்பட ஒன்பது சொகுசு கார்கள், ஐந்து கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குகள், சொத்துகள் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், 4.987 கிலோ கிராம் (அதாவது 623 சவரன்) தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ கிராம் வெள்ளிப் பொருள்கள் மற்றும் வங்கிக் கணக்கு புத்தகங்கள் ஆகியவை கண்டறியப்பட்டு, வழக்குக்குத் தொடர்புடைய பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அந்நியச் செலாவணி டாலர்
அந்நியச் செலாவணி டாலர்

மேலும், இந்த வழக்கின் எதிரியான முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீட்டு வளாகத்தில் சுமார் 275 யூனிட் மணல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு மட்டும் தோராயமாக 30 லட்சம் ரூபாய் இருக்கும் எனத் தெரியவந்துள்ளது. விசாரணையும் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை விலாவாரியாகத் தெரிவித்திருக்கிறது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதால் கே.சி.வீரமணியிடம் கிடுக்கிப்பிடியாக தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு