Published:Updated:

சேலம்:``சாதியைச் சொல்லி நிர்வாணப்படுத்தி அடிச்சாங்க"- பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் மீது தாக்குதல்

செந்தில் ( எம். விஜயகுமார் )

சேலம் அருகே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நபர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சேலம்:``சாதியைச் சொல்லி நிர்வாணப்படுத்தி அடிச்சாங்க"- பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் மீது தாக்குதல்

சேலம் அருகே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நபர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
செந்தில் ( எம். விஜயகுமார் )

''ஒரு மணி நேரம் கழித்து கண்ணை அவிழ்த்து விட்டாங்க. ஒரு அடர்ந்த காட்டில் நிற்க வச்சி அடித்து உதைத்தாங்க. நாங்க என்ன சாதி டான்னு கேட்டாங்க. சொன்னேன். 'தெரிஞ்சும் எங்களை திட்டுற அளவுக்கு நீங்க முன்னேறிட்டீங்களாடா நாயே...' என்று என் சாதி பெயரைச் சொல்லி கெட்ட வார்த்தையில் திட்டி தடியில் அடித்து உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நிற்க வச்சி துன்புறுத்தினாங்க. வாங்கிட்டு வந்த மதுவை வலுக்கட்டாயமாக என் வாயில் ஊற்றி சித்ரவதை செஞ்சாங்க''

சந்திப்பு
சந்திப்பு

முதல்வரின் சொந்த தொகுதியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை மாற்றுச் சமூகத்தினர் சிலர் கண்களைக் கட்டி கடத்திச் சென்று நிர்வாணப்படுத்தி அடித்து துன்புறுத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியம் குட்டப்பட்டி அருகே மாதநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில். வயது 38. இவரை கடந்த 17-ம் தேதி இரவு அதே ஊர் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த கெளதமன் உள்பட 6 பேர் தூக்கிச் சென்று நிர்வாணப்படுத்தி அடித்து சித்ரவதை செய்து விடியற்காலை ரோட்டோரமாக வீசி விட்டு சென்றுள்ளனர். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள் செந்திலை மேட்டூர் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் செந்தில் நடந்ததை விவரிக்கையில், ``என் மனைவி பேரு கலா. எங்களுக்கு ரெண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கிறார்கள். நான் கட்டிடங்களுக்கு சென்ரிங் வேலை செய்து அதில் கிடைக்கும் குறைந்த சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்தி வருகிறேன். நான் ஊரில் எந்த ஒரு வம்பு, தும்புக்கும் போக மாட்டேன். நான் உண்டு என் வேலை உண்டு என்று இருப்பேன். நாங்க பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவங்க.

கடந்த வருஷம் ஊரடங்கு நேரத்துல எங்க ஊர் பசங்க ரோட்டோரமாக இருக்கும் புறம்போக்கு நிலத்துல பனை மரத்தில் ஏறி நொங்கு வெட்டி இருக்காங்க. பக்கத்தில் உள்ள மாற்று சமூகத்தினர் எங்க ஊரு பசங்களை அடிச்சு துரத்தி இருக்காங்க. பதிலுக்கு திட்டிட்டு ஓடி எங்க ஊர் பசங்க வந்துட்டாங்க. அன்னைக்கு ராத்திரியில மாற்று சமூகத்தைச் சேர்ந்த பலர் எங்க ஊருக்குள்ள புகுந்ததால் இரு தரப்பினருக்குள்ளும் கைகளப்பு ஏற்பட்டது. காவல்துறை இரு தரப்பின் மீதும் வழக்கு போட்டுட்டாங்க.

கெளதமன்
கெளதமன்

போலீஸ்காரங்களுக்கும், மாற்றுச் சமூகத்தினருக்கும் பயந்துட்டு எங்க ஊரு பசங்க நிறைய பேரு தலைமறைவாயிட்டாங்க. பல மாசமாக ஊர் பக்கம் வர்றதே இல்லை. ஓட்டு போடக் கூட சிலர் தான் வந்தாங்க. இந்த நிலையில் நான் கடந்த 17ம் தேதி இரவு 9:00 மணிக்கு என் கூட வேலை செய்பவரை பார்ப்பதற்காக சீட்டாடும் இடத்திற்கு சென்றேன். அப்போது கெளதமனும் அவரோடு 5 பேரும் சேர்ந்து என்னை வழிமறித்து டூவிலரில் வலுக்கட்டாயமாக கூட்டிட்டு போனாங்க. மேச்சேரி பிரிவு ரோட்டிற்கு போனதும் என் கண்ண கட்டி காரில் ஏத்திக்கிட்டு போனாங்க.

ஒரு மணி நேரம் கழித்து கண்ணை அவிழ்த்து விட்டாங்க. கண்ண திறந்து பார்த்த ஒரு அடரந்த காடு. அங்க என்ன நிற்க வைச்சி அடித்து உதைச்சாங்க. `நாங்க என்ன சாதி டான்'னு கேட்டாங்க. சொன்னேன். `தெரிஞ்சும் எங்களை திட்டுற அளவுக்கு நீங்க முன்னேறிட்டீங்களாடா நாயே...' என்று என் சாதி பெயரைச் சொல்லி கெட்ட வார்த்தையில் திட்டி, உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாம நிக்க வைச்சி தடியால அடிச்சு துன்புறுத்தினாங்க. வாங்கிட்டு வந்த மதுவை வலுக்கட்டாயமாக என் வாயில் ஊற்றி சித்ரவதை செஞ்சாங்க. அண்ணா வேண்டாம் என்று கையெடுத்து கும்பிட்டும் விடாமல் விடிய விடிய அடிச்சாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு கட்டத்துக்கு மேல் மயங்கி கீழே விழுந்துட்டேன். விடியற்காலை எங்க ஊருக்கு பக்கத்தில் உள்ள பாலத்திற்கு கீழே நிர்வாணமாக என்னை வீசிட்டு போயிட்டாங்க. எங்க ஊருக்காரங்க ஓடி வந்து துணியால் என்னைப் போர்த்தி மேட்டூர் அரசு மருத்துவமனையில சேர்த்தாங்க. எனக்கும் கெளதமனுக்கும் எந்த பிரச்னையும் இல்லாத போது பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் என்னை அடித்து சித்தரவதை செய்திருக்காங்க'' என்றார்.

இதுபற்றி நங்கவள்ளியைச் சேர்ந்த பா.ம.க சேலம் தெற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் பாலு,``கடந்த ஒரு வருடமாக இரண்டு ஊருக்கும் முன் பகை இருந்துள்ளது. கடந்த வாரம் சீட்டாடும் இடத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த செந்திலுக்கும், கெளதமனுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதையடுத்து செந்திலை தனியாக கொண்டு சென்று கெளதமன் அடித்து இருக்கிறார்.

இதை நான் கேள்விப்பட்டு மேட்டூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் செந்திலை சந்தித்து பேசினேன். பலத்த காயம் இருந்தது. `எதுக்கு தேவையில்லாத பிரச்னை சமரசமாக போகலாம்' என்றேன். அவரும் சமரசத்துக்கு ஒப்புக் கொண்டார். ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளே நுழைந்து பிரச்னையை முடிக்க விடாமல் செய்கின்றனர்'' என்றார்.

சாம்ராய் குரு
சாம்ராய் குரு

இதுபற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சாம்ராய் குரு, ``நாங்க சமூக வலைத்தளத்தில் பார்த்து பாதிக்கப்பட்ட செந்திலை மேட்டூர் மருத்துவமனையில் சந்தித்தோம். மிகவும் பாதிக்கப்பட்டு காயங்களோடு சிகிச்சை பெற்று வந்தார். அவரிடம்,`உங்களுக்கு நேர்ந்த கொடுமையை காவல் துறையிடம் தைரியமாக சொல்லுங்கள். யாருக்காகவும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள்' என்றோம். சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்துக் கொண்டே இருக்கிறது. இதில் அரசும், காவல்துறையும் நியாயமாக செயல்பட வேண்டும்'' என்றார்.

இதுபற்றி நங்கவள்ளி காவல் நிலையத்தின் எஸ்.ஐ., உதயகுமாரிடம் கேட்டதற்கு, ``இந்த வழக்கு சம்மந்தமாக சேலம் நீதிமன்றத்திற்கு வந்திருக்கிறோம். குற்றச் செயலில் ஈடுப்பட்டவர்களை கஸ்டடி எடுத்து விசாரித்தப் பிறகே உண்மை நிலை தெரியவரும்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism