Published:Updated:

சாத்தான்குளம் வழக்கில் திடீர் திருப்பம்... முதல் குற்றவாளி ஸ்ரீதர் பரபரப்பு தகவல்!

சாத்தான்குளம்

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முதல் குற்றவாளி நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

சாத்தான்குளம் வழக்கில் திடீர் திருப்பம்... முதல் குற்றவாளி ஸ்ரீதர் பரபரப்பு தகவல்!

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முதல் குற்றவாளி நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

Published:Updated:
சாத்தான்குளம்

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் காவல் நிலையத்தில் அடித்து, சித்ரவதை செய்து கொலைசெய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தக் கொலை தொடர்பாக, குறிப்பிட்ட காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட பத்துப் பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைதான காவலர் பால்ராஜ் இறந்துவிட்ட நிலையில், தற்போது ஒன்பது பேர் சிறையிலிருக்கிறார்கள்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள காவலர்கள்
குற்றம்சாட்டப்பட்டுள்ள காவலர்கள்

இந்த நிலையில், இந்த வழக்கின் முதல் குற்றவாளியான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தற்போது மதுரை மத்தியச் சிறையில் இருக்கிறார். சிறையிலிருக்கும் அவர், மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், `இந்த வழக்கில் ஏ-2 முதல் ஏ-9 வரை குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்கள்தான் ஜெயராஜ், பென்னிக்ஸை அடித்துக் கொலை செய்தார்கள்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், ஸ்ரீதர் அந்தக் கடிதத்தில், ``கடந்த மார்ச் 26-ம் தேதி காலை 6 மணியளவில் சிறையிலுள்ள மற்ற எட்டுப் பேரும் சேர்ந்து என்னைக் கொலை செய்ய முயன்றார்கள். இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. அந்தக் காட்சிகளைக்கொண்டு விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கிலிருந்து என்னை விடுவிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஸ்ரீதர்
ஸ்ரீதர்

கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், முக்கியக் குற்றவாளியான ஸ்ரீதர் நீதிமன்றத்துக்குக் கடிதம் எழுதியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் ஸ்ரீதரின் கடிதம் மிகவும் முக்கியமான திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism