Published:Updated:

"ஒரு கோடி ரூபாய் தருகிறோம், நாட்டைவிட்டுச் சென்றுவிடு என மிரட்டுகிறார்கள்"- பெண் பயிற்சியாளர் புகார்

பெண் பயிற்சியாளர்
News
பெண் பயிற்சியாளர் ( ட்விட்டர் )

ஹரியானா காவல்துறை சந்தீப் சிங் விவகாரம் குறித்து விசாரணை நடத்திவருகிறது.

"ஒரு கோடி ரூபாய் தருகிறோம், நாட்டைவிட்டுச் சென்றுவிடு என மிரட்டுகிறார்கள்"- பெண் பயிற்சியாளர் புகார்

ஹரியானா காவல்துறை சந்தீப் சிங் விவகாரம் குறித்து விசாரணை நடத்திவருகிறது.

Published:Updated:
பெண் பயிற்சியாளர்
News
பெண் பயிற்சியாளர் ( ட்விட்டர் )

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தீப் சிங். குருக்ஷேத்ராவிலுள்ள பெஹோவா தொகுதியின் எம்.எல்.ஏ-வான இவர், அந்த மாநில விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதவி வகித்துவந்தார். இந்த நிலையில், அவர்மீது தடகளப் பயிற்சியாளரான பெண் ஒருவர் பாலியல் புகாரளித்திருந்தார். இது தொடர்பாக அந்தப் பெண் இந்திய தேசிய லோக் தளத்தின் (INLD) அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

சந்தீப் சிங்
சந்தீப் சிங்

அப்போது பேசிய அவர், ``என்னுடைய சான்றிதழ், கூட்டமைப்பால் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது தொடர்பாக, புகாரளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இந்தத் தகவலை எடுத்துச் சென்றேன். அப்போதுதான் சந்தீப் சிங்கைச் சந்தித்தேன். அவர் அழைத்ததின் பேரில் என்னிடம் இருந்த வேறு சில ஆவணங்களுடன் சந்தீப் சிங்கின் அலுவலகத்தில் அவரைச் சந்திக்கச் சென்றேன். அப்போது அவர் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இந்த விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து, சண்டிகர் போலீஸார் சனிக்கிழமை சந்தீப் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளின்கீழ் எஃ.ப்.ஐ.ஆர் பதிவுசெய்தனர். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டை மறுத்த சந்தீப் சிங், தன்னுடைய மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

சந்தீப் சிங்
சந்தீப் சிங்

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் மற்றொரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``சிலர் என்னை செல்போனில் தொடர்புகொண்டு மிரட்டுகிறார்கள். என்னுடைய புகாரை வாபஸ் பெற வேண்டாம் என்று கேட்டனர். எனக்கு மாதம் ரூபாய் ஒரு கோடி தருவதாகக் கூறினார்கள். மேலும் நாட்டைவிட்டு வெளியேறுமாறும், நான் விரும்பும் எந்த நாட்டுக்கு வேண்டுமென்றாலும் செல்லலாம் எனவும் மிரட்டுகிறார்கள்" எனத் தெரிவித்திருக்கிறார். ஹரியானா காவல்துறை இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திவருகிறது.