Published:Updated:

கோவை: மூன்று மாதப் பிஞ்சுக் குழந்தையைக் கொன்ற பாட்டி... நடந்தது என்ன?! - அதிர்ச்சித் தகவல்கள்

கொலை
News
கொலை

கோவை கவுண்டம்பாளையம் அருகே மூன்று மாதக் குழந்தையைக் கொன்ற பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. ஆனால் அப்படியான அறிகுறியை அவரிடம் கண்டதில்லை என்று அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (31). இன்ஜினீயராகப் பணியாற்றிவருகிறார். அவரின் மனைவி ஐஸ்வர்யா (24). இந்தத் தம்பதிக்கு, மூன்று மாதங்களுக்கு முன்பு இரட்டைக் குழந்தை (ஆண், பெண்) பிறந்தது. ஐஸ்வர்யாவின் தந்தை ஷேக்ஸ்பியர் (55) மதுரை மச்சிபாளையம் காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ-ஆகப் பணியாற்றிவருகிறார்.

கோவை
கோவை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்பு ஐஸ்வர்யாவின் தாய் சாந்தி (45) கோவை வந்திருக்கிறார்.

பாஸ்கரன் வேலைக்குச் சென்ற நிலையில், ஐஸ்வர்யா தனது சகோதரருடன் மருந்தகத்துக்குச் சென்றிருக்கிறார். வீட்டில் சாந்தியும் குழந்தைகளும் மட்டும் தனியாக இருந்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா வீடு திரும்பியபோது, ஆண் குழந்தை ஆர்யன், பெண் குழந்தை ஆரிகா ஶ்ரீ காயத்துடன் இருந்துள்ளனர். முக்கியமாக ஆர்யனின் பிறப்புறுப்பில் கடுமையான காயம் இருந்தது.

இரட்டைக் குழந்தைகள்
இரட்டைக் குழந்தைகள்
கோப்புப் படம்

பதறிய ஐஸ்வர்யா இரண்டு குழந்தைகளையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார். அப்போது, குழந்தை ஆர்யன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குழந்தை ஆரிகா ஶ்ரீ கை முறிந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இது குறித்து துடியலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸார் அருகிலிருந்த மக்களிடம் விசாரித்தபோது, ``சாந்தி கடந்த 15 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கின்றனர்.

சாந்தி
சாந்தி

ஐஸ்வர்யா வீடு திரும்பியபோது, சாந்தி வீட்டில்தான் இருந்திருக்கிறார். குழந்தைகளைக் காயங்களுடன் பார்த்த அதிர்ச்சியில், ``ஏன் இப்படிப் பணணினே... என் கண் முன்னாடி நிக்காதே... எங்கயாச்சு போ...” என்று ஐஸ்வர்யா கூறியிருக்கிறார்.

அதனால், சாந்தி வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். மாயமான சாந்தியை போலீஸார் தேடிவருகின்றனர். அவர் வெளியேறிய சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், தனிப்படை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். சாந்தி இதற்கு முன்பு ஐஸ்வர்யாவை ஒருமுறை கொலை செய்ய முயன்றிருக்கிறார்.

கோவை
கோவை

இப்போதுவரை ஐஸ்வர்யா தலையில் அந்தக் காயம் இருக்கிறாது. அதேநேரத்தில், சாந்தி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என்று வீட்டின் அருகிலுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

பார்ப்பதற்குத் தெளிவாக இருந்தாலும், சாந்தி திடீரென்று ஒரு மாதிரி நடந்துகொள்வார் என்றும் தகவல்கள் சொல்லப்படுகின்றன. சாந்தியைக் கண்டறிந்தாலும், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுவதால் அவரைக் கைதுசெய்வதற்கான வாய்ப்பு குறைவு என்கிறார்கள்.

கோவை
கோவை

அவரைப் பிடித்து, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி விசாரித்தால்தான் கூடுதல் தகவல்கள் வெளியாகும்” என்றனர்.