Published:Updated:

சாத்தான்குளம்: `இரண்டே நாளில் விசாரணை அறிக்கை தாக்கல்!' - மனித உரிமை ஆணையம்

மனித உரிமை ஆணைய டி.எஸ்.பி குமார்
மனித உரிமை ஆணைய டி.எஸ்.பி குமார்

``மருத்துவர்களிடம் நடத்திய விசாரணையும் காவலர்களிடம் நடத்திய விசாரணையும் ஒத்துப்போகிறது." - மாநில மனித உரிமை ஆணையம்

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கை மாநில மனித உரிமை ஆணையமும் கடந்த நான்கு நாள்களாகத் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று மதுரை மத்திய சிறையில் இருக்கும் குற்றவாளிகள் 10 பேரிடம் விசாரணை நடத்தியது.

மதுரை மத்தியசிறை
மதுரை மத்தியசிறை

நாட்டையே அதிரவைத்த சாத்தன்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து, மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு டி.எஸ்.பி குமார் கடந்த சில நாள்களாக விசாரணை நடத்தி வருகிறார்.

ஜெயராஜின் மனைவி, மகள்கள் மற்றும் உறவினர்கள், கோவில்பட்டி சிறையிலிருந்து ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற சிறைக் காவலர்கள் 3 பேரிடமும், கோவில்பட்டி சிறைக் கண்காணிப்பாளர் சங்கர், டாக்டர் வினிலா, டாக்டர் வெங்கடேஷ், சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் பெர்னாட் சேவியர், தனிப்பிரிவு காவலர் சந்தனகுமார், உடற்கூராய்வு செய்த பாளையங்கோட்டை அரசு மருத்துவர்கள் என மொத்தம் 20 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளார்.

மனித உரிமை ஆணைய டி.எஸ்.பி
மனித உரிமை ஆணைய டி.எஸ்.பி

இந்நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட காவலர்களிடம் இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை தனித்தனியாக விசாரணை நடத்தி அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

Exclusive Evidence: `சாத்தான்'குள காக்கிகளின் கொலைப் பட்டியல்? Custodial Death | Elangovan Explains

விசாரணை முடிந்து, செய்தியாளர்களிடம் பேசிய மனித உரிமை ஆணைய டி.எஸ்.பி குமார், ''இன்னும் 2 தினங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும். சிறையில் உள்ள 10 பேரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கினார்கள். மருத்துவர்களிடம் நடத்திய விசாரணையும் காவலர்களிடம் நடத்திய விசாரணையும் ஒத்துப்போகிறது'' என்றார்.

குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது
குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது
ஈ.ஜெ.நந்தகுமார்

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பும், பல்வேறு விசாரணைக் குழுக்களின் விசாரணைகள் விரைவாக நடந்து வருவதும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும், பொதுமக்களுக்கும் ஓரளவு நம்பிக்கையை அளித்து வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு