Published:Updated:

ஒருவர் பெயரில் 2,500 ஏக்கர் நிலம் பவர் பத்திரம் பதிவு... சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார் பதிவாளர்!

சார் பதிவாளர் அலுவலகம், புதுக்கோட்டை

தூத்துக்குடியில் 2,500 ஏக்கர் விவசாய நிலங்களை ஒருவர் பெயரிலிருந்து மற்றொருவர் பெயருக்கு மோசடியாக பவர் பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக புதுக்கோட்டை சார் பதிவாளர் மோகன்தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஒருவர் பெயரில் 2,500 ஏக்கர் நிலம் பவர் பத்திரம் பதிவு... சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார் பதிவாளர்!

தூத்துக்குடியில் 2,500 ஏக்கர் விவசாய நிலங்களை ஒருவர் பெயரிலிருந்து மற்றொருவர் பெயருக்கு மோசடியாக பவர் பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக புதுக்கோட்டை சார் பதிவாளர் மோகன்தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Published:Updated:
சார் பதிவாளர் அலுவலகம், புதுக்கோட்டை

தூத்துக்குடி மாவட்டத்தில் தெற்கு சிலுக்கன்பட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி, செந்திலாம்பண்ணை ஆகிய கிராமங்களில் சுமார் 500 விவசாயிகளுக்குச் சொந்தமான 2,500 ஏக்கர் விவசாய நிலங்களை, திருநெல்வேலியைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகம் என்பவர், கோவையைச் சேர்ந்த தனியார் அக்ரோ நிறுவன அதிகாரி அன்புராஜ் என்பவருக்கு கடந்த 5-ம் தேதி பவர் பத்திரம் பதிவு செய்து கொடுத்திருக்கிறார். இந்த நிலையில், தெற்கு சிலுக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சில விவசாயிகள், தங்களின் நிலங்களுக்கு இ.சி போட்டு பார்த்திருக்கின்றனர். இதற்கிடையில், இது தொடர்பாக மாவட்ட பதிவாளர் பால்பாண்டி விசாரனை நடத்தி, பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி சிவன் அருளிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதில், விவசாய நிலங்களை கோவையைச் சேர்ந்த தனியார் அக்ரோ நிறுவனத்தின் அதிகாரி அன்புராஜ் என்பவருக்கு, நெல்லையைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகம் என்பவர் பவர் வழங்கியது போல பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளதும், நில உச்சவரம்பு சட்ட விதிகளை மீறி இந்த பத்திரப்பதிவை செய்திருப்பது குறித்தும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது.

இதனையடுத்து பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி சிவன் அருளின் உத்தரவின் பேரில், நெல்லை பத்திரப்பதிவுத்துறை டி.ஐ.ஜி (பொறுப்பு) கவிதா ராணி, புதுக்கோட்டை சார் பதிவாளர் மோன்தாஸை சஸ்பெண்ட் செய்தார். மேலும், மோகன்தாஸ் பதிவு செய்து கொடுத்த இரண்டு பவர் பத்திரங்களும் ரத்து செய்யப்பட்டன.

செந்தில் ஆறுமுகம்
செந்தில் ஆறுமுகம்

அதில், செந்தில் ஆறுமுகம் என்பவரின் பெயர் இருந்திருக்கிறது. இதேபோல அடுத்தடுத்த கிராமங்களில் விவசாயிகள் இ.சி போட்டு பார்த்ததில், அதே செந்தில் ஆறுமுகம் என்பவரின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து கிராம மக்கள், விவசாயிகள் புதுக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அத்துடன் பா.ஜ.க மாநில துணைத் தலைவரான முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா தலைமையிலான பா.ஜ.க-வினரும் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சார் பதிவாளர் மோகன்தாஸிடம் விளக்கம் கேட்ட சசிகலா புஷ்பா
சார் பதிவாளர் மோகன்தாஸிடம் விளக்கம் கேட்ட சசிகலா புஷ்பா

இது குறித்து செந்தில் ஆறுமுகம் தரப்பு வழக்கறிஞர்களிடம் பேசினோம். ``செந்தில் ஆறுமுகம் என்பவரின் குடும்பத்தினருக்கு தெற்கு சிலுக்கன்பட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி, செந்திலாம் பண்ணை ஆகிய கிராமங்களில் சுமார் 16,000 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. அதில், சுமார் 8,000 நிலத்தை அரசு கையகப்படுத்தியுள்ளது. மீதமுள்ள நிலங்கள் ஏற்கெனவே அவரது பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருந்த பத்திரத்தின் அடிப்படையில்தான் அவர், இன்னொருவருக்கு பவர் கொடுக்கிறார். அந்தப் பவருக்கான ஆவணங்களைத்தான் நாங்கள் சரி பார்த்தோம். நிலம் குறித்த உள்ளார்ந்த தகவல்களுக்குள் நாங்கள் செல்லவில்லை. இது சம்மந்தமாக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வருகிறது. வழக்கின் தீர்ப்பைப் பொறுத்து எங்களின் அடுத்தகட்ட நகர்வு இருக்கும்” என்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சார் பதிவாளரை சந்திக்க வந்த சசிகலா புஷ்பா
சார் பதிவாளரை சந்திக்க வந்த சசிகலா புஷ்பா

``இந்த மூணு கிராமங்கள்'ல இருக்குற 2,500 ஏக்கர் நிலத்தை அவர் தனது சொந்த நிலம் எனச் சொல்கிறார். ஆனால், பட்டாவில் எங்களது பெயர் உள்ளது. அப்படி இருக்கையில் அவருக்குச் சொந்தமானது என எப்படிச் சொல்ல முடியும்? அதுவும் ஒரே நபரின் பெயரில் எப்படி 2,500 ஏக்கர் நிலத்தைப் பவர் பத்திரம் பதிவு செய்ய முடியும். இதன் பின்னணியில் அரசியல் புள்ளிகள் இல்லாமல் இப்படி செய்திருக்க முடியுமா?” என்கின்றனர் விவசாயிகள்.

இது குறித்து அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது, ``முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சார் பதிவாளர் மோகன்தாஸை சஸ்பெண்ட் செய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism