Published:Updated:

`தங்கம் கடத்தலில் முதல்வருக்கும் பங்கு’ - ஸ்வப்னா சுரேஷ்; `இது அரசியல் அஜண்டா’ - பினராயி விஜயன்

செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்வப்னா சுரேஷ்

'`ஐக்கிய அமீரக தூதரக வாகனத்தில் பெரிய பாத்திரங்களில் பிரியாணி முதல்வரின் க்ளிஃப் ஹவுஸுக்குப் பலமுறை கொடுத்துவிடப்பட்டுள்ளது. இதுபோல பல முறை நடந்துள்ளது. முதல்வரின் மனைவி, மகளின் விஷயங்கள் பற்றியும் எனது வாக்குமூலத்தில் கூறியுள்ளேன்' என்கிறார் ஸ்வப்னா.

`தங்கம் கடத்தலில் முதல்வருக்கும் பங்கு’ - ஸ்வப்னா சுரேஷ்; `இது அரசியல் அஜண்டா’ - பினராயி விஜயன்

'`ஐக்கிய அமீரக தூதரக வாகனத்தில் பெரிய பாத்திரங்களில் பிரியாணி முதல்வரின் க்ளிஃப் ஹவுஸுக்குப் பலமுறை கொடுத்துவிடப்பட்டுள்ளது. இதுபோல பல முறை நடந்துள்ளது. முதல்வரின் மனைவி, மகளின் விஷயங்கள் பற்றியும் எனது வாக்குமூலத்தில் கூறியுள்ளேன்' என்கிறார் ஸ்வப்னா.

Published:Updated:
செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்வப்னா சுரேஷ்

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக (யு.ஏ.இ) தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கு 2020-ம் ஆண்டு கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. திருவனந்தபுரம் விமான நிலையத்தில் யு.ஏ.இ தூதரக பார்சலை எடுக்கச் சென்ற ஸரித் என்பவர் முதலில் கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ், கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கர் ஆகியோர் அடுத்தடுத்து கைதுசெய்யப்பட்டனர். சிறையிலிருந்து வெளியே வந்த சிவசங்கருக்கு மீண்டும் கேரள அரசு, பணி வழங்கியுள்ளது.

2020, ஜூலை மாதம் கைதுசெய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் 16 மாத சிறைவாசத்துக்குப் பிறகு கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் ஜாமீனில் விடுதலை ஆனார். இந்த நிலையில் விரைவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து சில விவரங்களை வெளியிடுவேன் என ஸ்வப்னா சுரேஷ் கூறியிருந்தார். இதற்கிடையே செய்தியாளர் சந்திப்பின்போது சிவசங்கருக்கு எதிராகப் பேசியிருந்தார். முதல்வர் பினராயி விஜயன் பற்றி எதுவும் வாய் திறக்கவில்லை.

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

இந்த நிலையில் கொச்சியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ் நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்வப்னா சுரேஷ் கூறுகையில், "எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே எனக்கு தெரிந்த எல்லாவற்றை குறித்தும் 164 பக்க வாக்குமூலமாக கோர்ட்டில் கூறியிருக்கிறேன். எனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கைப் பற்றியும், அதில் ஈடுபட்டுள்ள சிவசங்கர், முதலமைச்சர் பினராயி விஜயன், அவரின் மனைவி கமலா, அவர்களுடைய மகள் வீணா, செயலாளர் ரவீந்திரன், நளினி நெட்டோ ஐ.ஏ.எஸ், முன்னாள் அமைச்சர் ஜலீல் ஆகியோர் என்ன செய்திருக்கிறார்கள் என்பது பற்றியும்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த வழக்கில் அவர்களது ரோல் என்ன என்பது பற்றியும் 164 பக்க வாக்குமூலத்தில் பதிவுசெய்துள்ளேன். இந்தத் தொடர்பு 2016-ல் முதல்வர் பினராயி விஜயன் துபாய் போகும் சமயத்தில்தான் தொடங்கியது. அப்போது தூதரகச் செயலாளராக இருந்த என்னை சிவசங்கர் தொடர்புகொண்டு முதல்வர் ஒரு பேக்கை மறந்துவைத்துவிட்டார். அதை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் துபாய்க்குக் கொண்டு சேர்த்தே ஆக வேண்டும் என்றார். எனவே தூதரகத்தில் குக்கி என அழைக்கப்படும் டிப்ளோமேட் மூலமாக அந்த பேக்கை துபாய்க்குக் கொடுத்துவிட்டோம். தூதரகத்துக்கு எந்த பார்சல் வந்தாலும் ஸ்கேனிங் மெஷின் மூலம் அதைப் பரிசோதனை செய்வோம். அப்படி ஸ்கேன் செய்ததில் முதல்வருக்கு அனுப்பிய பேக்கில் கரன்சி இருந்தது தெரியவந்தது.

ஸ்வப்னா சுரேஷ் - சிவசங்கர்
ஸ்வப்னா சுரேஷ் - சிவசங்கர்

அந்தச் சம்பவத்திலிருந்துதான் இந்த விவகாரம் தொடங்கியது. அதன் பிறகு சிவசங்கரின் அறிவுறுத்தலின் பேரில் ஐக்கிய அமீரக தூதரக வாகனத்தில் பெரிய பாத்திரங்களில் பிரியாணி முதல்வரின் க்ளிஃப் ஹவுஸுக்குப் பலமுறை கொடுத்துவிடப்பட்டுள்ளது. இதுபோல பல முறை நடந்துள்ளது. முதல்வரின் மனைவி, மகளின் விஷயங்கள் பற்றியும் எனது வாக்குமூலத்தில் கூறியுள்ளேன். இந்த வழக்கு கோர்ட்டில் நடந்துகொண்டிருக்கிறது. எனவே, அதிகமாகக் கூற முடியாது. மீதமுள்ளதை நீங்கள் விசாரணை நடத்திக்கொள்ளுங்கள்” என ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தங்கம் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயனை சம்பந்தப்படுத்தி ஸ்வப்னா சுரேஷ் முதன்முறையாகச் செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். இந்த விவகாரத்தை காங்கிரஸ் கையிலெடுத்து போராட்டம் நடத்திவருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், "இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் அஜண்டாவின் ஒரு பகுதிதான். இதற்கு முன்பும் இது போன்று அவர் கூறியிருக்கிறார். மாநிலத்தின் பொருளாதாரத்தைத் தகர்க்கும் இந்த மோசடியின் இறுதி முடிவுவரை கண்டுபிடிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அது பற்றி மத்திய ஏஜென்சிகளை முதலில் வலியுறுத்தியதும் நாங்கள்தான். அப்படிப்பட்ட எங்கள் மீது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் முன்வைக்கிறார்கள். சிறு இடைவேளைக்குப் பிறகு பழைய விஷயத்தை குற்றவாளியைக் கொண்டு வழக்கில் கூற வைத்துள்ளனர். இதை மக்கள் புறந்தள்ளுவார்கள்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism