Published:Updated:

`துணிச்சலா செயல்பட்டு பெருமை சேர்த்துட்டீங்க சரவணன்!'- டி.ஜி.பி போன்காலால் நெகிழ்ந்த தலைமைக் காவலர்

டி.ஜி.பி சைலேந்திரபாபு

``எதையும் யோசிக்காமல் துணிச்சலாகச் செயல்பட்டு, காவல்துறைக்குப் பெருமை சேர்த்துட்டீங்க" என்று வாழ்த்துகள் சொன்னார். ``உடம்பு பத்தி எதுவும் யோசிக்காதீங்க. நாங்க இருக்கோம்.'' - டி.ஜி.பி சைலேந்திரபாபு

`துணிச்சலா செயல்பட்டு பெருமை சேர்த்துட்டீங்க சரவணன்!'- டி.ஜி.பி போன்காலால் நெகிழ்ந்த தலைமைக் காவலர்

``எதையும் யோசிக்காமல் துணிச்சலாகச் செயல்பட்டு, காவல்துறைக்குப் பெருமை சேர்த்துட்டீங்க" என்று வாழ்த்துகள் சொன்னார். ``உடம்பு பத்தி எதுவும் யோசிக்காதீங்க. நாங்க இருக்கோம்.'' - டி.ஜி.பி சைலேந்திரபாபு

Published:Updated:
டி.ஜி.பி சைலேந்திரபாபு

கஞ்சா கடத்திவந்த நபரை திரைப்படக் காட்சிபோல உயிரைப் பணயம்வைத்துப் பிடித்த தனிப்படை போலீஸாரின் துணிச்சலான செயலைப் பாராட்டி டி.ஜி.பி சைலேந்திரபாபு பரிசுத்தொகையை வழங்கினார். மேலும், தலைமைக் காவலர் சரவணனிடம் போனில், ``எதையும் யோசிக்காமல் துணிச்சலா செயல்பட்டு காவல்துறைக்குப் பெருமை சேர்த்துட்டீங்க" என வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்.

கஞ்சா கடத்திவந்த கார்
கஞ்சா கடத்திவந்த கார்

திருச்சி டு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு காரில் கஞ்சா கடத்திச் செல்வதாக கமிஷனரின் தனிப்படை காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. அதன்பேரில் மன்னார்புரம் பகுதியில் போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு டாட்டா இண்டிகா காரை போலீஸார் தடுத்து நிறுத்த முயன்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், காரை ஓட்டிச் சென்ற நபர் நிறுத்தாமல் வண்டியை வேகமாக ஓட்டிச் செல்ல, உடனே அந்த காரை போலீஸார் டூ வீலரில் விரட்டிச் சென்றனர். செந்தண்ணீர்புரம் அருகே கார் படுவேகமாகச் சென்றுகொண்டிருந்தது. அப்போது, போலீஸ் ஏட்டு சரவணன் என்பவர் டூ வீலரிலிருந்து காரின் மீது ஏறி குதித்து காரின் பேனட்டை பிடித்துக்கொண்டார்.

தலைமைக் காவலர் சரவணன்
தலைமைக் காவலர் சரவணன்

ஆனாலும் அந்த நபர் காரை நிறுத்தாமல் மிக வேகமாக ஓட்டியிருக்கிறார். சரவணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் காரின் முன்பக்க பேனட்டில் படுத்தபடியே இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்றார். அந்த காரைப் பிடிக்க பத்துக்கும் மேற்பட்ட போலீஸார் காரை துரத்திச் சென்றனர்.

கஞ்சா கடத்தி வந்த முகமது அனீபா
கஞ்சா கடத்தி வந்த முகமது அனீபா

கடைசியில் சரவணன் ஒரு கையால் காரின் ஸ்டீயரிங்கைப் பிடித்து வளைத்தபோது கார், தடுப்பு மரத்தின் மீது மோதி நின்றது. இதில் சரவணன் காயம் அடைந்தார். பின்னால் வந்த போலீஸார் காரை ஓட்டிவந்த டிரைவரை மடக்கிப் பிடித்தனர். காயமடைந்த தலைமைக் காவலர் சரவணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் இவரது துணிச்சலான செயலைப் பாராட்டி டி.ஜி.பி சைலேந்திரபாபு, ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகையை வழங்கியதோடு தலைமைக் காவலர் சரவணனைத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார். தலைமைக் காவலர் சரவணனுக்கு உரிய மருத்துவ சிகிச்சையை வழங்க, திருச்சி காவல்துறை ஆணையருக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருக்கிறார்.

டி.ஜி.பி சைலேந்திரபாபு
டி.ஜி.பி சைலேந்திரபாபு

இது குறித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தலைமைக் காவலர் சரவணனிடம் பேசினோம். ”என்னோட வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் இது. காவல்துறையின் கடவுளின் கையால் வாழ்த்தி பரிசு பெறுவேன் என்பதைக் கொஞ்சம்கூட நினைத்துப் பார்க்கவில்லை. ஐயா அவர்கள் எனக்கு போன் பண்ணி, `சரவணன் எப்பிடி இருக்கீங்க... உங்க உடம்பு எப்பிடி இருக்கு... எதையும் யோசிக்காமல் துணிச்சலா செயல்பட்டு காவல்துறைக்குப் பெருமை சேர்த்துட்டீங்க’ என்று வாழ்த்துகள் சொன்னார். `உடம்பு பத்தி எதுவும் யோசிக்காதீங்க. நாங்க இருக்கோம்’’ என்று சொன்னபோது ரொம்ப சந்தோஷம் அடைந்தேன்” என்றார்.