Published:Updated:

`ஊரடங்கில் மது விற்பனை; ரூ.1.44 கோடி அபராதம்!' - கதிகலங்கும் கரூர் டாஸ்மாக் ஊழியர்கள்

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை

சரக்குகளுக்குரிய தொகை, அதற்குரிய வட்டித் தொகை மற்றும் இ.எஸ்.டி தொகை எனச் சுமார் மூன்று கோடிக்கு மேல் ஊழியர்கள் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு பணம் செலுத்த வேண்டும் என்பதால், கரூர் டாஸ்மாக் ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

கொரோனாவைத் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில், மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகளில் இருந்து, உரிய அனுமதியின்றி மதுபானங்களை எடுத்து கள்ளமார்க்கெட்டில் விற்பனை செய்த ஊழியர்களுக்கு, டாஸ்மாக் நிர்வாகம் ரூ.1.44 கோடி வரை அபராதம் விதித்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை

கரூர் மாவட்டத்தில் மொத்தம் 94 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அன்றுமுதல் இந்த டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

'தலைக்கேறிய போதை; குளித்துக்கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம்!' - இளைஞர்களால் பதறிய குளித்தலை

ஆனால், அந்த ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளில் இருந்து சில ஊழியர்களால் உரிய அனுமதியின்றி மதுபாட்டில்கள் எடுக்கப்பட்டு, கள்ள மார்க்கெட்களில் விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளில் இருந்து சரக்குகளை எடுத்து, வேறு இடத்தில் வைத்து, டாஸ்மாக் உயரதிகாரிகள் சீல் வைத்தனர்.

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை
நா.ராஜமுருகன்

அதோடு, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட மார்ச் 24-ம் தேதி, 94 கடைகளில் இருந்த சரக்குகள் கையிருப்பையும், கடைகள் திறக்கப்பட்டபோது இருந்த சரக்குகள் குறித்த கையிருப்பையும் கணக்கிட்டுப் பார்த்தனர். அப்போது, 1.5 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சரக்குப் பாட்டில்கள் மாயமாகி இருந்தது தெரிய வந்தது. ஊரடங்கு காலத்தில் ஊழியர்கள் அந்தச் சரக்குகளை எடுத்து முறைகேடாக விற்பனை செய்ததை டாஸ்மாக் உயரதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதனால், சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு, முறைகேடாக விற்ற சரக்குகளுக்குரிய தொகை, அவற்றுக்கான வட்டி மற்றும் இ.எஸ்.டி என அபராதம் விதித்தனர். அந்தவகையில், கடந்த ஏப்ரல் 23-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரையில் விற்கப்பட்ட சரக்குகளுக்கு உரிய தொகையையும், அதற்குரிய வட்டியாக ரூ.11,51,288-ஐ ஊழியர்களிடம், டாஸ்மாக் உயரதிகாரிகள் வசூல் செய்தனர்.

மேலும், கரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 94 கடைகளிலும் குறைந்த சரக்குகளுக்குரிய வட்டித் தொகை மற்றும் ஜி.எஸ்.டி தொகையாக ரூ.1.44 கோடியைக் கட்ட வலியுறுத்தி, ஊழியர்களுக்கு அபராதம் விதித்துள்ளது டாஸ்மாக் நிர்வாகம். ஊரடங்கு காலத்தில் குறைந்த மதுபாட்டில்களுக்குரிய தொகைக்கான 50 சதவிகித வட்டி மற்றும் 50 சதவிகிதம் விதிக்கப்பட்டுள்ள அபராத தொகைக்கான 18 சதவிகித ஜி.எஸ்.டி என்ற அடிப்படையில் இந்த அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை

கரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 94 கடைகளில் காணாமல் போன சரக்குகளுக்கான அபராத வட்டித் தொகையாக ரூ.1,21,95,675 யையும், அந்த வட்டித்தொகைக்கான ஜி.எஸ்.டியாக ரூ. 21,95,263-யும் ஊழியர்களுக்கு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சரக்குகளுக்குரிய தொகை, அதற்குரிய வட்டித் தொகை மற்றும் இ.எஸ்.டி தொகை என சுமார் 3 கோடி ரூபாய்க்கு மேல் ஊழியர்கள் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு பணம் செலுத்த வேண்டும் என்பதால், ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

'வட்டி மற்றும் ஜி.எஸ்.டி தொகையைக் கட்டச் சொல்லி டாஸ்மாக் எம்.டி அறிவித்துள்ள அறிவிப்பை கேன்சல் செய்ய வேண்டும்' என்று கூறி, டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். கரூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்களுக்கு கோடிக்கணக்கில் அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ள விவகாரம், மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு