Published:Updated:

தி.மலை தங்கமணி மரணம்: விலா எலும்புகள் முறிவு, காயங்கள்; உடற்கூறாய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்!

முதற்கட்ட உடற்கூறாய்வு முடிவு, தங்கமணி

தங்கமணி உயிரிழப்பு தொடர்பான வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், முதற்கட்ட உடற்கூறாய்வு முடிவுகள் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மலை தங்கமணி மரணம்: விலா எலும்புகள் முறிவு, காயங்கள்; உடற்கூறாய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்!

தங்கமணி உயிரிழப்பு தொடர்பான வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், முதற்கட்ட உடற்கூறாய்வு முடிவுகள் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
முதற்கட்ட உடற்கூறாய்வு முடிவு, தங்கமணி

சாராய விற்பனை வழக்கில், திருவண்ணாமலை கலால்துறை அதிகாரிகளால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பழங்குடியினத்தவர் தங்கமணி, கடந்த மாதம் 27-ம் தேதி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போலீஸார் கொடூரமான முறையில் தாக்கியதினாலேயே தங்கமணி உயிரிழந்ததாகவும், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த புகார்களை காவல்துறை அதிகாரிகள் மறுத்து வந்ததோடு, வலிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே தங்கமணி உயிரிழந்ததாக கூறினர்.

அரசு அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட தங்கமணி குடும்பத்தார்.
அரசு அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட தங்கமணி குடும்பத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சட்டமன்றம் வரை எதிரொலித்தது இந்த விவகாரம். பல அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜன், கலால் ஆய்வாளர் நிர்மலா உட்பட 4 பேர் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இதற்கிடையில், தங்கமணி மரணம் குறித்த விசாரணையை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி, தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு உத்தரவிட்டார். செங்கம் தொகுதி எம்.எல்.ஏ. மு.பெ.கிரி., காவல்துறை உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் ஆகியோருடனான சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து கடந்த 2-ம் தேதி, தங்கமணியின் உடலை பெற்று அடக்கம் செய்தனர் தங்கமணியின் குடும்பத்தினர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், கடந்த 4-ம் தேதி சட்டமன்றத்தில் இந்தச் சம்பவம் குறித்து பதிலளித்து பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், "இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளது. தங்கமணியைக் கைதுசெய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய காவல்துறை அதிகாரிகள், வேறு மாவட்டத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு விட்டார்கள். சி.பி.சி.ஐ.டி விசாரணை அறிக்கையின் படி இந்த விவகாரத்தில் அரசு தக்க நடவடிக்கை எடுக்கும்" என்று பேசியிருந்தார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

சென்னை விக்னேஷ் உடற்கூறாய்வு தொடர்பான அதிர்ச்சி முடிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதே போன்று தங்கமணியின் மரணத்திலும் முதற்கட்ட உடற்கூறாய்வு முடிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், "28-ம் தேதி மாலை 3.55க்கு துவங்கிய உடற்கூறாய்வு 5.30 மணிக்கு முடிவடைந்தது. கைகளில் 4 சிராய்ப்பு காயங்கள் உள்ளன. அவை, தங்கமணி இறப்பதற்கு 12 முதல் 24 மணி நேரத்திற்கு முன்பு ஏற்பட்டிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இடது கையின் சுண்டுவிரல் அருகே 4க்கு 3 என்ற அளவில் சிவந்த காயம் ஒன்று உள்ளது. அது, அவர் இறப்பதற்கு 0 முதல் 6 மணி நேரத்திற்குள் ஏற்பட்டிருக்கலாம். அவரது நாக்கு, பற்களால் கடித்த நிலையில் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், இடது தோள்பட்டையின் கீழே உள்ள 3 மற்றும் 4-வது விலா எலும்புகளில் முழுமை பெறாத எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இது, தங்கமணியை உயிர்த்தெழ செய்வதற்காக (resuscitation injury?) நெஞ்சு பகுதியில் அழுத்திய போது ஏற்பட்டதா எனத் தெரியவில்லை. உடற்கூராய்வு செய்வதற்கு 12 முதல் 24 மணி நேரத்திற்கு முன்பு அவர் உயிரிழந்துள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இறப்புக்கான காரணம் என்ற பகுதியில்... மேற்கொண்டு வரவேண்டிய சில வேதியியல் மற்றும் திசு பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் தாக்கியதாலேயே தங்கமணி உயிரிழந்ததாக தங்கமணியின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள முதற்கட்ட பிரேத பரிசோதனை முடிவுகள், மேலும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

திருருவண்ணாமலை எஸ்.பி., பவன்குமார் ரெட்டி
திருருவண்ணாமலை எஸ்.பி., பவன்குமார் ரெட்டி

இது தொடர்பாக, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டியிடம் பேசினோம். "உடற்கூறாய்வு முடிவில், சிராய்ப்பு காயங்கள், தங்கமணி இறப்பதற்கு 12 முதல் 24 மணி நேரத்திற்குள் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால், அவர் மருத்துவமனையில் உயிரிழந்தது 27-ம் தேதி இரவு 8.30 மணி. அதிகபட்சம் 24 மணி நேரத்தையே எடுத்துக் கொண்டாலும், 26-ம் தேதி மாலையே நீதிபதி முன் அவர் ஆஜர்படுத்தப்பட்டு, சுமார் 7 மணி அளவில் சிறையில் அடைக்கப்படுவிட்டார். ஆகவே, தங்கமணி உடலில் இருப்பதாக கூறப்பட்டுள்ள காயங்கள், அவர் போலீஸாரிடம் காவலில் இருக்கும் போது நடைபெறவில்லை. சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது வலிப்பு வரும்போது கை, கால் அசைவதினால் கூட இருக்கலாம். விலா எலும்பு முறிவு... 'தங்கமணி உயிர்தெழுவதற்காக மார்ப்பு பகுதியில் அழுத்திய போது ஏற்பட்டிருக்கலாம்' என்று மருத்துவரே உடற்கூறாய்வு முடிவில் தெரிவித்திருக்கிறார்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism