Published:Updated:

கள்ளக்குறிச்சி: "விசாரணையில் குறைபாடு இருப்பதாக தெரிகிறது" - தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர்

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர்

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையக் குழுவினர் மாணவி மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி: "விசாரணையில் குறைபாடு இருப்பதாக தெரிகிறது" - தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர்

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையக் குழுவினர் மாணவி மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published:Updated:
தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள கணியாமூர் பகுதியில் இயங்கிவரும் தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி, 12-ம் வகுப்பு பயின்றுவந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மரணம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையத்தின் குழுவினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆணையத்தின் மாநிலத் தலைவர் சரஸ்வதி தலைமையிலான குழுவினர் கடந்த 21-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆய்வு செய்திருந்திருந்த நிலையில், தற்போது இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி வன்முறை..!
கள்ளக்குறிச்சி வன்முறை..!

21-ம் தேதி, ஆய்வின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருந்த மாநிலத் தலைவர் சரஸ்வதி, "தனியார் பள்ளி வளாகத்தில் இயங்கிவந்த விடுதி, உரிய அனுமதி பெறாமல் இயங்கி வந்திருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது" என்ற பரபரப்பு தகவலைக் கூறியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதனைத் தொடர்ந்து, மாணவியின் மர்ம மரணம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக 3 நாள்கள் பயணமாக (26, 27, 28) தமிழ்நாடு வந்திருக்கின்றனர், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பிரியங் கானூங்கோ தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர். இரண்டாவது நாளான இன்று, மாணவியின் குடும்பத்தாரை அவர் இல்லத்தில் சந்தித்த இந்தக் குழுவினர், சுமார் ஒரு மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை
விசாரணை

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆணையத்தின் தேசிய தலைவர் பிரியங் கானூங்கோ, ``பெற்றோருடன் பேசினோம். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை செய்யவிருக்கிறோம். மாணவி மரணம் தொடர்பான விசாரணையில் முகாந்திரமாக சில குறைபாடுகள் இருப்பதாகத் தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொண்டு மாணவி தங்கியிருந்த விடுதியில் விசாரணை செய்யவிருக்கிறோம். மேலும், ஆரம்பத்திலிருந்து இதில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், விசாரணை அதிகாரிகள், காவல்துறையினர் உள்ளிட்டோரைச் சந்தித்து விசாரணை செய்த பிறகே முழு அறிக்கையையும் சமர்ப்போம்" என்றார்.

இதனைத் தொடர்ந்து, மாணவி உயிரிழந்ததாகக் கூறப்படும் தனியார் பள்ளி விடுதியில் விசாரணை மேற்கொள்ளவிருக்கிறன்றனர் அந்தக் குழுவினர்.