Published:Updated:

பெரியார் பல்கலை: மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பொறுப்பு பதிவாளர் கைது!

பதிவாளர் கைது

மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

பெரியார் பல்கலை: மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பொறுப்பு பதிவாளர் கைது!

மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
பதிவாளர் கைது

சேலம், கருப்பூரிலுள்ள பெரியார் பல்கலையில், வேதியல்துறை பேராசிரியராகப் பணியாற்றுபவர் கோபி. இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பல்கலைக்கழகப் பொறுப்பு பதிவாளராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வரும், 27 வயது மாணவி ஒருவரை கோபி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஆய்வுக் கட்டுரையைச் சரிபார்க்க வேண்டும் என அழைத்திருக்கிறார்.

பெரியார் பல்கலைக்கழகம்
பெரியார் பல்கலைக்கழகம்

மாணவி முன்னெச்சரிக்கையாகத் தன்னுடன் உறவினர்கள் சிலரையும் அழைத்துச் சென்றிருக்கிறார். அவர்களைப் பல்கலைக்கழகத்துக்குள் இருக்கும் பதிவாளர் குடியிருப்புக்கு வெளியே நிற்கவைத்துவிட்டு, அவர் மட்டும் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
பேராசிரியர் கோபி
பேராசிரியர் கோபி

மாணவி உள்ளே சென்ற சிறிது நேரத்திலேயே மாணவியின் கதறல் சத்தம் கேட்டிருக்கிறது. அதையடுத்து வெளியே நின்றிருந்த உறவினர்கள் உள்ளே செல்வதற்குள் மாணவி அழுதுகொண்டே வெளியே வந்திருக்கிறார். மாணவியின் உறவினர்கள் `என்ன நடந்தது... ஏன் சத்தம்போட்டாய்?’ என்று கேட்டிருக்கின்றனர். அதற்கு மாணவி உள்ளே நடந்த சம்பவத்தைப் பற்றிக் கூறியிருக்கிறார். அதைக் கேட்டு ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்கள் பேராசிரியர் கோபியைத் தாக்க முற்பட்டிருக்கின்றனர். இதில், பேராசிரியர் கோபி உடலில் காயம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கைது
கைது

பின்னர் நடந்த சம்பவம் குறித்து பேராசிரியர் கோபி கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதன்பேரில் சம்பந்தப்பட்ட மாணவியின் உறவினர்கள் மூன்று பேர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவி கருப்பூர் காவல் நிலையத்தில் பேராசிரியர் கோபிமீது பாலியல் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸார் பேராசிரியர் கோபி பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்ததால் அவரைக் கைதுசெய்தனர்.

இந்தச் சம்பவம் பல்கலை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.