Published:Updated:

டெல்லி செங்கோட்டை தாக்குதல்; முகமது ஆரிஃப்-ன் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

உச்ச நீதிமன்றம்

தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி திரிவேதி தலைமையிலான அமர்வு, முகமது ஆரிஃப்-ன் மறு சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்து, தூக்குத் தண்டனையை உறுதி செய்திருக்கிறது.

டெல்லி செங்கோட்டை தாக்குதல்; முகமது ஆரிஃப்-ன் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி திரிவேதி தலைமையிலான அமர்வு, முகமது ஆரிஃப்-ன் மறு சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்து, தூக்குத் தண்டனையை உறுதி செய்திருக்கிறது.

Published:Updated:
உச்ச நீதிமன்றம்

கடந்த 2000-ம் ஆண்டு டெல்லி செங்கோட்டையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் உட்பட மூன்று பேர் பலியானார்கள். இதில் தொடர்புடைய லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி முகமது ஆரிஃபுக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றமும் உறுதிசெய்தது. ஆனால், முகமது ஆரிஃப் உச்ச நீதிமன்றத்தில், தனக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து மனுத்தாக்கல் செய்திருந்தார்.

செங்கோட்டை
செங்கோட்டை

2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி உச்ச நீதிமன்றம் இந்த மனுவைத் தள்ளுபடி செய்தது. ஆனால், இவர் 14 ஆண்டுக்காலமாக சிறைத் தண்டனை அனுபவித்துவருவதால், தூக்குத் தண்டனையை மறு சீராய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், தூக்குத் தண்டனைக்கு மட்டும் இடைக்காலத் தடைவிதித்தது.

 தூக்குத் தண்டனை!
தூக்குத் தண்டனை!

மேலும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, மறுசீராய்வு மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்த நிலையில், இன்று இது தொடர்பான மனுவை விசாரித்த தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி திரிவேதி தலைமையிலான அமர்வு, முகமது ஆரிஃப்-ன் மறு சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்து, தூக்குத் தண்டனையை உறுதிசெய்திருக்கிறது.